Saturday, November 30, 2013

மீன் குழம்பு மசாலாப் பொடி தயாரிக்கும் முறை!

மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்வதற்கான மசாலாப் பொடி தயாரிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் : 250 கிராம்
மல்லி : 300 கிராம்
சீரகம் : 200 கிராம்
மிளகு : 25 கிராம்
விரலி மஞ்சள் : 25 கிராம்
அரிசி : 25 கிராம்
உப்பு : 10கிராம்


செய்முறை:
முதலில் மல்லி, மிளகாய் வற்றல்,மிளகு, மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காய வைக்கவும்.

பிறகு மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள்,உப்பு ஆகியவற்றை லேசாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும். (எண்ணை இல்லாமல் வெறும் வாணலியில்)

அரிசியை பொன்னிறமாக வாணலியில் வறுத்து எடுகவும்.

பின்னர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மாவு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பின் குறிப்பு: இந்த மசாலாப் பொடியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் வாசம் மற்றும் நிறம் போகாமல் ஒரு வருடம் வரை வைத்துப் பயன் படுத்தலாம்.

இதே மசாலாப் பொடியை புளிக்குழம்பு, காரக்குழம்பு வைக்கவும் பயன் படுத்தலாம்.


பின்குறிப்பு 2: கடையில் தயாராக விற்கும் மாசாலாப் பொடிகள்(ஆச்.., சக்.. போன்றவை. எனக்குத் தெரிந்த மொத்த விற்பனையாளர் சொன்ன தகவல்) தரமில்லாத மல்லி, சீரகம், கலர் பொடி சேர்த்த மிளகாய் மூலம் தயாரிக்கப் படுவதால் வீட்டிலேயே தயார் செய்து பயன் படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கும்.