50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பத்தில் 10 குழந்தைகள் வரை பிறக்கும். அதில் பாதி குழந்தைகள் பல்வேறு நோய்களால் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போகும் வாய்ப்பு இருந்தது. மீதிக் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டாலும் எதிர்ப்பு சக்தி இருந்திருந்தாலும் பிழைத்து வளரும். அத்தககைய குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்களை எதிர்க்கும் ஆற்றல் மரபணு மூலமாகக் கடத்தப் பட்டு அதன் சந்ததிகள் காப்பற்றப்படும் என்ற நிலை இருந்தது.
உயிரினங்களின் மரபணுக்களில் எப்பொழுதுமே சிறு சிறு மரபணு குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். எந்த உயிரினத்தின் மரபணுவும் 100 சதவீதம் சரியானது அல்ல. பிழைகள் இருந்து கொண்டே இருக்கும். பல நேரங்களில் மறைந்து காணப்படும்.
உதாரணமாக சிலருக்கு கை அல்லது கால்களில் ஆறு விரல்கள் இருக்கலாம். அத்தகைய ஆணோ பெண்னோ அடுத்த தலைமுறையை உருவாக்கும் போது அந்த மரபணு கடத்தப்படும். ஆனால் அதில் ஒரு பாதி குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வரும், மறுபாதி பாதிபில்லாத எதிர் பாலினத்தவரிடம் இருந்து வரும் போது சில குறைபாடுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது மறைந்து போகும்.
அதற்கு நேர்மாறாக எதிர் பாலினத்திடமும் அதேவிதமான பாதிக்கப்பட்ட/பிழையான குரோமோசோம்கள் இருக்குமானால் அந்தகைய பாதிப்பிறகுக் காரணமான பிழையான மரபணுக்கள் வலுப்பெற்று அதன் சந்ததிகளுக்கும்
குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. எனவே தான் ஒரே குடும்பத்திற்குள் திருமணம் செய்யும் போது அக்குடும்பத்தினருடைய குரோமோசோம் குறைபாடுகள் வலுப்பெற்று சந்ததிகளைப் பாதிக்கும்.
பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் குரோமோசோம்கள் சிறுசிறு மாறுபாடுகள் ஏற்பட்டு/மேம்படுத்தப் பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இனங்கள் உருவாகும்.
சிம்பன்சி குரங்கின் மரபனுக்களும் மனிதனின் மரபணுக்களும் 98 சதவீதம் ஒரே மாதிரியானவை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட 2 சதவீத குரோபோசோம் மாறுபாடுகளே மனித இனத்தை உருவாக்கியுள்ளது.
இத்தகைய குரோமோசோம் மாறுபடுதலை திடீர் மாற்றம்(mutation)என அழைக்கப்ப்டுகிறது.
இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனில் இருந்து மேம்பட்ட குரோமோபோம்களை உடைய உயிரினங்கள் இந்த திடீர் மாற்றம் மூலம் உருவாகும். அதற்கு தடையில்லாத குரோமோசாம் பரிமாற்றங்கள் தேவை.
இப்போது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு குரோமோசோம் பகிர்தலை செயற்கையாக தடை செய்கிறது. சமூகக் காரணங்களுக்காக தற்போது ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே உள்ளனர். இது இயற்கைக்கு மாறானது. இதனால் திடீர் மாற்றம் ஏற்படும் சதவீதம் குறைகிறது. இதனால் நல்ல குரோமோசாம்கள் உள்ள தகுதியுளள உயிரினம் தோன்றுவது தடுக்கப்பட்டு, முதல் இரண்டு குழந்தைகளின் குரோமோசாம்கள் மட்டுமே இனம் வளர அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் பிற காரணிகளை உடைய நல்ல குரோமோசாம்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு புதிய பண்புகளை உடைய உயிரினங்கள் உருவாக்கப்படுவது இல்லை.
திடீர் மாற்றம் மூலம் ஒரு உயிரில் புதிய பண்பு உருவாவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். உயிரினங்களின் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படுவதால் இந்த் திடீர் மாற்றத்தால் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் மனிதனால் செயற்கையாக கட்டுப்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் ஒரு நோயுள்ள மனித இனத்தையே உருவாக்கும். இதன் விளைவுகள் உடனடியாகத் தெரியாது. இன்னும் பல்லாயிரக்கணகாண ஆண்டுகளுக்குப் பிறகு எதிரொலிக்கும்.
இதே மாதிரியான குடும்பக் கட்டுப்பாடு தொடருமானால் மேம்படுத்தப்பட்ட மனித இனம் தோன்றாமலேயே போகும்.