Sunday, March 01, 2026

ஜோதிடப் பாடங்கள் மிக எளிதாக தொகுக்கப்பட்டுள்ளது

 

ஜோதிடப் பாடங்கள் மிக எளிதாக தொகுக்கப்பட்டுள்ளது

இது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு

நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலசமயம் அவர் பழைய பாடங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும் எனக்கூறும் போது அப்பழைய பாடங்களை கண்டுபிடிக்க மிகச்சிறமம் ஏற்படுகிறது.

அவரே பாடங்களை 1-10,11-20 வரிசைப்படுத்தி கொடுத்து இருந்தாலும் எது எவ்விடம் எனக்கண்டுபிடிக்க தாவு தீர்ந்துவிடும்.

மற்றும் புதியதாய் படிக்க வருபவர்கள் அவரது பாடத்தினை படிக்கவேண்டுமானல் பாடங்கள் தலைகீழ் வரிசையில் இருப்பதால் படிப்பதற்க்குள் புதியவர்களுக்கு டிரவுசர் கழண்டுவிடும் (உதவி: வால்பையன்) எனக்கும் சென்ற வருடம் முதலில் பாடத்தை படிக்க ஆரம்பித்த சமயம் அந்நிலைமைதான்.

மேலும் வாத்தியார் ஐயா பாடத்துடன் பலவிதமான கதைகளுடன் கலந்து அளித்துள்ளார்.

ஆகவே அவரது பாடத்தினை சுலபமாக படிக்க இங்கு அவைகளுக்கு தலைப்புடன் வரிசைப்படுத்தி லிங்க் கொடுத்துள்ளேன்.

பழைய மாணவர்கள் ஏதேனும் விட்டுப்போயிருந்தால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்.


குறிப்பு: இதில் மேலும் ஏதேனும் செய்யவேண்டியது இருந்தால் இதில் பின்னுட்டமாகவோ அல்லது இந்த முகவரிக்கு ஈ-மெயிலிலோ தெரிவிக்கவும்.

தமிழில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் உபயம்: வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன்

தமிழக ஜோதிடர்கள் விவரம்

FAQ:
1ம் இடம், 5ம் இடம், 9ம் இடம் திரிகோணங்கள்

பொதுவாக 3,6,8,12 வீடுகள் கெட்டவீடுகள்

பார்வை விவரம்:
அனைத்து கிரகங்களுக்கும் அது இருக்குமிடத்திலுருந்து 7மிடம் பார்வையிடங்கள்.

 1 ,4  7 ,10 இடங்கள் கேந்திரங்கள் சிறப்புபார்வை பெற்றகிரங்கள் மற்றும் இடங்கள்:
குரு 5,7,9 சனி 3,7,10 செவ்வாய் 4,7,8

பாலபாடம் 1
pdf பைலாக இறக்க
பாலபாடம் 2

ஜோதிடம் அடிப்படைத் தேவைகள்
ஜோதிடம் அடிப்படைப்பாடம்

ஜாதகம் நேரம் கணிப்பு

தமிழ் மாதங்கள் மற்றும் வருடங்கள்

திதி நட்சத்திரம் சம்பந்தமான பாடம்
வான்வெளியில் கிரகங்கள் இராசியின் பாகைகள்

ராசிகளின் உச்சம், நீசம், நட்பு, பகை கிரகவாரியான விபரம்

சூரிய உதயம் மற்றும் சூரியன் இருக்குமிட பலன்கள்

கணினியில் ஜாதகம் கணிப்பது எப்படி? மற்றும் இந்தியாவின் ஜாதகம்
இந்திய ஜாதகம் வல்லரசு ஆகும் நாள்

ஜாதக வகைகள்

லக்னம் கணிக்கும் வழி மற்றும் திமுக ஜாதகம்

லக்னாதிபதி இருக்குமிட பலன்கள் மற்றும் கலைஞர், ரஜினி, கமல் ஜாதகம்

கிரகசேர்க்கை விவரம் மற்றும் நீசபங்க ராஜயோகம்

தசாபுத்தி ஆரம்ப பாடம்
தசாபுத்தி பாடம் & எம்.ஜி.ஆர் ஜாதகம்
தசாபுத்தி பாடம் & எம்.ஜி.ஆர் ஜாதக விவரத்துடன்
தசாபுத்தி பாடம் புலிப்பாணி பலன்கள் சூரிய,சந்திர,செவ்வாய் மகாதிசைகள்
தசாபுத்தி பாடம் ராகு,குரு,சனி மகாதிசைகள்
தசாபுத்தி பாடம் ரஜினி ஜாதகம்
தசாபுத்தி பாடம் புதன், கேது,சுக்கிர மகாதிசை ரஜினி ஜாதகம் விரிவுரை
தசாபுத்தி பாடம் இராகு திசை கேது திசை
தசாபுத்தி பாடம் சூத்திரம்

கோச்சார பலன்கள் சனிபெயர்ச்சி
கோச்சார பலன்கள் சூரியன் கோச்சார பலன்கள், அம்மா ஜெயலலிதா ஜாதகம்
கோச்சார பலன்கள் சந்திரன் கோச்சாரபலன் அம்மா ஜெயலலிதா ஜாதக விவரம்
கோச்சார பலன்கள் திருமண அமைப்பு
கோச்சார பலன்கள் காலசர்ப்ப தோசம் & யோகம்
கோச்சார பலன்கள் காலசர்ப்ப தோசம் & யோகம் 2
கோச்சார பலன்கள் சனிபெயர்ச்சி
கோச்சார பலன்கள் கோச்சாரம் சனி மாற்றம்
கோச்சார பலன்கள் கோச்சாரம் ஏழரைச் சனி என்ன செய்யும்
எது நல்ல காலம்? எந்த தசா புத்தி நல்லது கெட்டது செய்யும்
குருபெயர்ச்சி ஒரு விளக்கம்

லக்கினப் பலன்கள் மற்றும் பரல்கள் ஆரம்பம்
லக்கினப் பலன்கள் மற்றும் 1ம் வீடு
லக்கினப் பலன்கள் மற்றும் 1ம் பாவம் பாபகர்த்தாரி யோகம்
லக்கினப் பலன்கள் மற்றும் 2ம் வீட்டு பலன்கள் கையில் காசு தங்குமா தங்கதா?
லக்கினப் பலன்கள் மற்றும் 1 லிருந்து 12 வீடுவரை பலன்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள்
லக்கினப் பலன்கள் 5ம் வீடு பூர்வபுண்ணியம்
லக்கினப் பலன்கள் 5ம் வீடு மற்றும் 5ம் வீட்டில் அமரும் கிரகபலன்கள்
லக்கினப் பலன்கள் 6ம் வீடு மற்றும் கடன்,நோய், மற்றும் துன்பம் தரும் அமைப்பு
லக்கினப் பலன்கள் 6ம் வீடு மற்றும் 6ம் வீட்டில் அமரும் கிரகம் தரும் பலன்
லக்கினப் பலன்கள் 7ம் வீடு காதல் திருமணமா? கட்டுபட்ட திருமணமா?
லக்கினப் பலன்கள் 9ம் வீடு மற்றும் எதற்கு எந்த வீடு என்ற விளக்கம்
லக்கினப் பலன்கள் 9ம் வீடு மற்றும் கடல் கடந்து செல்லவைக்கும் யோகம்
லக்கினப் பலன்கள் 9ம் வீடு மற்றும் பாக்கியஸ்தானம்


எட்டாம் வீடு இதை படித்து விட்டு அடுத்து செல்லுங்கள்
எட்டாம் வீட்டு அதிபதி சென்று அமரும் இடங்கள்
எட்டாம் வீட்டு அதிபதி சென்று அமரும் இடங்கள் - 2

எட்டாம் வீட்டில் வந்து அமரும் கிரகங்களின் பலன்கள்

பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்
எமனின் பயோடேட்டா
மாரகதிபதி
மாரகதிபதி - 2 பாலரிஷ்ட தோஷம்
மத்திம வயது ஆயுள்
தீர்க்க ஆயுள்
மாரகம் ஏற்பதும் வீதம்
மாரகம் ஏற்பதும் வீதம் பகுதி இரண்டு



லக்கினப் பலன்கள் 10ம் வீடு தொழில்ஸ்தானம் முதல் பகுதி
லக்கினப் பலன்கள் 10ம் வீடு ஒடுக்கப்பட்டவர்கள் 2ம் பகுதி
லக்கினப் பலன்கள் 10ம் வீடு என்ன தொழில் அமையும் 3ம் பகுதி
லக்கினப் பலன்கள் 10ம் வீடு வந்து அமரும் கிரகங்களின் பலன்கள்
லக்கினப் பலன்கள் 11ம் வீடு அதிபதி இருக்கும் இடப்பலன்கள்
லக்கினப் பலன்கள் 11ம் வீட்டில் வந்து அமரும் கிரகத்திற்கான பலன்கள்




லக்கினத்திலிருந்து 12வீடுகளூக்ககான பணிகள் விவரம்
லக்கினத்திற்கு சுப கிரகங்கள் மற்றும் அசுப கிரகங்கள் விபரம் (புதியது)

காலசர்ப்ப தோஷம் மற்றும் யோகம்

பரிகாரம் செய்ய வேண்டுமா?

அம்சம்
அம்சம் பற்றிய பாடம் பால பாடம்
அம்சம் பற்றிய பாடம் மற்ற ராசிகட்டங்கள்

அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்
அஷ்டவர்க்க பரல்கள் கணக்கிடுவது எப்படி?
அஷ்டவர்க்க பரல்கள் 7ம் வீடு
அஷ்டவர்க்க பரல்கள் வாழ்க்கை அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் கஷ்டமில்லத வாழ்க்கை பெறவேண்டிய அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் பாடம்
அஷ்டவர்க்க பரல்கள் புத்திரபாக்கிய பரல்கள் & சூத்திரம் 1
அஷ்டவர்க்க பரல்கள் மனநோய் ஏற்படும் அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் பணம் வரும் அமைப்பு & கஞ்சத்தனம்
அஷ்டவர்க்க பரல்கள் சராசரி வாழ்க்கைக்கு தேவையான பரல்கள் அமைப்பு

கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - புதன்
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - குரு
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - சுக்கிரன் 1
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - சுக்கிரன் 2
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - சூரியன்
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - சந்திரன்
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - செவ்வாய் (புதியது)

திருமண பொருத்தம்
திருமண பொருத்தம் 2
திருமண பொருத்தம் மென்பொருள்
திருமண பொருத்தம் 3
திருமண பொருத்தம் கணவன் (அ) மனைவி அமையும் அமைப்பு
திருமண பொருத்தம் திருமண அமைப்பு
திருமணம் எப்போது நடைபெறும் ஒரு சூத்திரம்

முக்கியமான 33 பேர் பிறந்த நேரம் நாள் குறிப்புகள்
அமெரிக்க அதிபர் ஒபாமா ஜாதகம்

ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் (ready reckoner)
ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் 2
ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் 3


பொதுவானவை - ஜோதிடம் மதுவா? மருந்தா?
பொது -GMT விளக்கம்
பொது - ஜோதிடபுத்தகங்கள் கிடைக்குமிடங்கள்
பொது - கணினி ஜாதகம் கணிப்பது எப்படி?
பொது - ஜோதிட பாடம் நடைபெறும் இடங்கள்
பொது - ஜோதிட புத்தகம் அறிமுகம்
பொது - ஜோதிடம் துணைப்பாடம்

பொது - விதிப்படிதான் நடக்குமா?
பொது - விதிப்படிதான் நடக்குமா? 2ம் பகுதி
பொது - விதிப்படிதான் நடக்குமா? 3ம் பகுதி
பொது - விதிப்படிதான் நடக்குமா? 4ம் பகுதி
பொது - எல்லாம் அவன் செயலா ?

ஜோதிட கதைகள் படிக்கவேண்டியது கதை
ஜோதிட மேதையின் கதை
சனிஸ்வரன் கதை 1
சனிஸ்வரன் கதை 2
சனிஸ்வரன் கதை 3
சனிஸ்வரன் கதை 4
சனிஸ்வரன் கதை 4.1
சனிஸ்வரன் கதை 5
சனிஸ்வரன் கதை 6 நிறைவுப்பகுதி
ஜோதிட கதை பரமசிவன் என்ன சொன்னார்


அனுபவத்தொடர் பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1
அனுபவத்தொடர் பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2

ஜோதிடம் உண்மை என்பதற்க்கான பதிவுகள்

ESP தீர்க்கதரிசன பகுதி 1
ESP தீர்க்கதரிசன பகுதி 2
ESP தீர்க்கதரிசன பகுதி 3 நிமித்தக்காரன்


நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 1
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 2
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 3

ஜோதிட நாத்திகர்களுக்கான பதிவுகள்
ஜோதிட நாத்திகர்களுக்கான பதிவுகள் 2
ஜோதிட ஆதாரங்கள்
ஜோதிட ஜாதகத்தின் பிரமாண்டம்
ஜோதிட நாத்திகர்கள் படிக்கவேண்டிய பதிவு
ஜோதிட நாத்திகர்கள் படிக்கவேண்டிய கதை

Sunday, March 08, 2015

குடும்பக் கட்டுப்பாடு மனித இனத்தை அழிக்குமா?

50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பத்தில் 10 குழந்தைகள் வரை பிறக்கும். அதில் பாதி குழந்தைகள் பல்வேறு நோய்களால் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போகும் வாய்ப்பு இருந்தது. மீதிக் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டாலும் எதிர்ப்பு சக்தி இருந்திருந்தாலும் பிழைத்து வளரும். அத்தககைய குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்களை எதிர்க்கும் ஆற்றல் மரபணு  மூலமாகக் கடத்தப் பட்டு அதன் சந்ததிகள் காப்பற்றப்படும் என்ற நிலை இருந்தது.

உயிரினங்களின் மரபணுக்களில் எப்பொழுதுமே சிறு சிறு மரபணு குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். எந்த உயிரினத்தின் மரபணுவும் 100 சதவீதம் சரியானது அல்ல. பிழைகள் இருந்து கொண்டே இருக்கும். பல நேரங்களில் மறைந்து காணப்படும்.

உதாரணமாக சிலருக்கு கை அல்லது கால்களில் ஆறு விரல்கள் இருக்கலாம். அத்தகைய ஆணோ பெண்னோ அடுத்த தலைமுறையை உருவாக்கும் போது அந்த மரபணு கடத்தப்படும். ஆனால் அதில் ஒரு பாதி குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வரும், மறுபாதி பாதிபில்லாத எதிர் பாலினத்தவரிடம் இருந்து வரும் போது சில குறைபாடுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது மறைந்து போகும்.

அதற்கு நேர்மாறாக எதிர் பாலினத்திடமும் அதேவிதமான பாதிக்கப்பட்ட/பிழையான குரோமோசோம்கள் இருக்குமானால் அந்தகைய பாதிப்பிறகுக் காரணமான பிழையான மரபணுக்கள் வலுப்பெற்று அதன் சந்ததிகளுக்கும்
குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. எனவே தான் ஒரே குடும்பத்திற்குள் திருமணம் செய்யும் போது அக்குடும்பத்தினருடைய குரோமோசோம் குறைபாடுகள் வலுப்பெற்று சந்ததிகளைப் பாதிக்கும்.

பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் குரோமோசோம்கள் சிறுசிறு மாறுபாடுகள் ஏற்பட்டு/மேம்படுத்தப் பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இனங்கள் உருவாகும்.
சிம்பன்சி குரங்கின் மரபனுக்களும் மனிதனின் மரபணுக்களும் 98 சதவீதம் ஒரே மாதிரியானவை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட 2 சதவீத குரோபோசோம் மாறுபாடுகளே மனித இனத்தை உருவாக்கியுள்ளது.
இத்தகைய குரோமோசோம் மாறுபடுதலை திடீர் மாற்றம்(mutation)என அழைக்கப்ப்டுகிறது.

இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனில் இருந்து மேம்பட்ட குரோமோபோம்களை உடைய உயிரினங்கள் இந்த திடீர் மாற்றம் மூலம் உருவாகும். அதற்கு தடையில்லாத குரோமோசாம் பரிமாற்றங்கள் தேவை.

இப்போது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு குரோமோசோம் பகிர்தலை செயற்கையாக தடை செய்கிறது. சமூகக் காரணங்களுக்காக தற்போது ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே உள்ளனர். இது இயற்கைக்கு மாறானது. இதனால் திடீர் மாற்றம் ஏற்படும் சதவீதம் குறைகிறது. இதனால் நல்ல குரோமோசாம்கள் உள்ள தகுதியுளள உயிரினம் தோன்றுவது தடுக்கப்பட்டு, முதல் இரண்டு குழந்தைகளின் குரோமோசாம்கள் மட்டுமே இனம் வளர அனுமதிக்கப்படுகிறது.  இதன் மூலம் பிற காரணிகளை உடைய நல்ல குரோமோசாம்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு புதிய பண்புகளை உடைய உயிரினங்கள் உருவாக்கப்படுவது இல்லை.

திடீர் மாற்றம் மூலம் ஒரு உயிரில் புதிய பண்பு உருவாவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். உயிரினங்களின் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படுவதால் இந்த் திடீர் மாற்றத்தால் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் மனிதனால் செயற்கையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் ஒரு நோயுள்ள மனித இனத்தையே உருவாக்கும். இதன் விளைவுகள் உடனடியாகத் தெரியாது. இன்னும் பல்லாயிரக்கணகாண ஆண்டுகளுக்குப் பிறகு எதிரொலிக்கும்.
 
இதே மாதிரியான குடும்பக் கட்டுப்பாடு தொடருமானால் மேம்படுத்தப்பட்ட மனித இனம் தோன்றாமலேயே போகும்.

Saturday, November 30, 2013

மீன் குழம்பு மசாலாப் பொடி தயாரிக்கும் முறை!

மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்வதற்கான மசாலாப் பொடி தயாரிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் : 250 கிராம்
மல்லி : 300 கிராம்
சீரகம் : 200 கிராம்
மிளகு : 25 கிராம்
விரலி மஞ்சள் : 25 கிராம்
அரிசி : 25 கிராம்
உப்பு : 10கிராம்


செய்முறை:
முதலில் மல்லி, மிளகாய் வற்றல்,மிளகு, மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காய வைக்கவும்.

பிறகு மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள்,உப்பு ஆகியவற்றை லேசாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும். (எண்ணை இல்லாமல் வெறும் வாணலியில்)

அரிசியை பொன்னிறமாக வாணலியில் வறுத்து எடுகவும்.

பின்னர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மாவு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பின் குறிப்பு: இந்த மசாலாப் பொடியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் வாசம் மற்றும் நிறம் போகாமல் ஒரு வருடம் வரை வைத்துப் பயன் படுத்தலாம்.

இதே மசாலாப் பொடியை புளிக்குழம்பு, காரக்குழம்பு வைக்கவும் பயன் படுத்தலாம்.


பின்குறிப்பு 2: கடையில் தயாராக விற்கும் மாசாலாப் பொடிகள்(ஆச்.., சக்.. போன்றவை. எனக்குத் தெரிந்த மொத்த விற்பனையாளர் சொன்ன தகவல்) தரமில்லாத மல்லி, சீரகம், கலர் பொடி சேர்த்த மிளகாய் மூலம் தயாரிக்கப் படுவதால் வீட்டிலேயே தயார் செய்து பயன் படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கும்.


Monday, September 02, 2013

வாடகை ஒப்பந்த பத்திரம் - Rental Agreement

வாடகை ஒப்பந்த பத்திரம்

--------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai திரு Raja அவர்கள்
1வது பார்ட்டியாகவும்(வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான் -----------------மாவட்டம், --------------- வட்டம்,-----------------தெரு, கதவு எண்---------- ல் வசித்து வரும் திரு/திருமதி ------------------------
அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)


மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான 23 சேதுபதி நகர், chennai முதல் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி
குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு
கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1. நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் ---------------------(ரூபாய் ------------------------------------------------------------------------------------------------------------------------------)
பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி இன்று ----------------------------------------------------- ரூபாய் -------------------------------------------------------- மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி
தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது.

3. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
  மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணீர் போன்றவற்றிக்கு ரூபாய் ------------- பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது ------------------------- தேதி முதல் ------------------------------- தேதி வரையிலான 11 மாத காலத்திற்கு உட்பட்டது.

7. 11 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு
கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.

11. 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.



வாடகை சொத்து விபரம்.

23, முதல் தளம்,  சேதுபதி நகர், chennai-600026,


1வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)


2வது பார்ட்டி
(வாடகைதாரர்)



சாட்சிகள்


1)




2)

Sunday, October 12, 2008

123 Test

123 test

Sunday, February 03, 2008

தை ஒன்னா? சித்திரை ஒன்னா? ரெண்டும் இல்லை.

சூரியன் மகர ரேகையைத் தொட்டுப் பின் கடக ரேகைக்கு திரும்பும் நாள் தான் தை மாதம் முதல் தேதி.இது மிகவும் சரியானது. பின்னர் சித்திரை மாதம் முதல் தேதிக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியம்?

இருக்கிறது.

அதாவது மகரரேகை இலங்கைக்குக் கீழே இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. சூரியன் மகர ரேகையைத் தொட்டுவிட்டு வடக்கு நோக்கி நகர்ந்து குத்து மதிப்பாக இந்திய இலங்கைப் பகுதிகளைத் தொடும் நாள் சித்திரை ஒன்று. ஆகவே தான் சித்திரை ஒன்று புத்தாண்டாகக் கொண்டாடப் பட்டு வந்தது(இப்பத்தான் மாத்திட்டாங்களே :) ).

மிகச் சரியாகத் தமிழ்புத்தாண்டக் கொண்டாடுவது என்றால், கன்னியாகுமரியில் ஒருநாள், மதுரையில் ஒருநாள், சென்னையில் ஒருநாள் என்று வரும்.

ஆகவே ஊருக்கு ஊர் ஜோசியக் காரரைக் கேட்டு, சூரியன் அவரவர்களின் ஊரைக் கடக்கும் நாளையே புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதே
சரி.

ரேகை பற்றிய விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். (கை ரேகை இல்லீன்ங்கண்ணா)

Saturday, January 05, 2008

நீ எம்.ஜி.ஆர் கட்சியா? கருணாநிதி கட்சியா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் வீட்டில் இணையத் தொடர்பு வாங்கி எழுதும் முதல் பதிவு.
சிவக்குமார் அவர்களின் இந்தப் பதிவு என்னுடைய பள்ளிப் பருவ நினைவகளைத் தூண்டிவிட்டது.

ஒன்றாம் வகுபுப் படிக்கும் போது என் வகுப்பு சக மாணவர்கள் கேட்டுக் கொள்வது நீ எம்.ஜி.ஆர் கட்சியா? கருணாநிதி கட்சியா? யாருக்கும் அப்போது கட்சி என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆர் நல்லவர் , கருணாநிதி கெட்டவர் என்று மட்டும் பேசிக்கொள்வார்கள். எல்லோருமே தாங்கள் எம்.ஜி.ஆர் கட்சி என்றே சொல்லிக் கொள்வார்கள். யாராவது ஓரிருவர் கருணாநிதி கட்சி என்றால் அவனையும் சேர்த்துக் கெட்டவன் என்றே சொல்லிக் கொள்வோம்.

ஏதோ ஒரு ஓட்டுப் பதிவின் போது பள்ளிக்கூடதின் அருகில் விளையாடச் சென்ற போது, சின்னப் பயலுக எல்லாம் இங்க வரக்கூடாதுடா, ஓடுங்கடா என்று விரட்டி விட்டார்க்கள்.

பிறகு ஒருமுறை, ராமநாதபுரத்தில் 'வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களை தேனீக்கள் விரட்டியடித்தன' என்ற செய்தியை என் அம்மாவிடம் சொல்ல ஆரம்பிக்கும் போது, அதனை முழுவதுமாகக் கேட்காமலேயே, இந்த வயசில உனக்கு ஏண்டா அரசியல் என்று என் அம்மா திட்டியதும் நினைவுக்கு வருகிறது.

1989 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின் போது எங்கள் தொகுதியில் மக்களுக்கு விளக்க, மாதிரி வாக்குச் சீட்டுகளை ஒரு கட்சி அச்சடித்து, இந்த இடத்தில் முத்திரை குத்த வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அந்தச் சீட்டை தேர்தல் அன்று கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதுஉண்மையான வாக்குச் சீட்டு என நினைத்து சில கட்சிக்காரர்கள் யாருடா நீ, உனக்கு யாருடா இதைக் கொடுத்தா என மிரட்டியதும் நினைவுக்கு வருகிறது.

1999ம் ஆண்டு ராமநாதபுரம் நாடளுமன்றத் தொகுதி தேர்தலில் பவானி ராஜேந்திரன் அவர்களுக்கு ஓட்டுப் போட்ட போது, சீ! தேர்தல்னா இவ்வளவுதானா, என்று ஒரு சலிப்பும் வந்தது.