நேற்று பெங்களூரில் என் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் டி.வி.டி வாங்கச் சென்றேன். எம்டன் மகன் என்ற படம் இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ அப்படி ஒரு படமே வரவில்லை என்று சொன்னார்.
என்னடா இது வம்பாப் போச்சு என்று என் நண்பனைத் தொலைபேசியில் அழைத்து "என்னாடா, எம்டன் மகன் படத்துல பரத் படத்துல நல்லா நடிச்சுருக்காருன்னு சொன்னீயே, கடைக்காரர் அப்படி ஒரு படமே வரலன்னு சொல்றார்டா என்றேன்." எம்டன் மகன் படத்தை எம் மகன் என்று தமிழ் வளர்சிக்காக பெயர் மாற்றப்பட்டதையும், அதற்காக திரையுலகினரின் பாராட்டுவிழா என்று குத்தாட்டத்தை தாத்தா கலைஞ்ர் ரசித்ததையும் அதற்குப் போட்டியாக ஜெயா டீ.வி யும் புரட்சித் தலலவியும் குத்தாட்டத்தை ரசித்து பார்த்த மற்றொரு நிகழ்சியை போட்டுக் காட்டியதை சொல்லி அங்கிருந்தபடியே காறித் துப்பினான். நமக்கு எதுக்குப்பா அரசியல் என்று 'எம் மகன்' படத்தை வாங்கிப் பார்த்தேன். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் 'எம்டன் மகன்' 'எம் மகன்' ஆனதால் தமிழ் வளர்ச்சி அடைந்ததா என்று குண்டக்க மண்டக்க நினைத்துப் பார்த்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.
இந்த பெயர் மாற்றத்தால் ஒரு மண்ணாங்கட்டி வளர்சியும் இல்லை. கலைஞருக்கு நல்ல வருமானம் மற்றும் 80+ வயதிலும் இளைஞராக இருந்து நமீதாவின் கவர்சியை ரசிக்க நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.
உண்மையிலெயே தமிழ் மீது கலைஞருக்கு பற்று இருந்திருந்தால் பிற மொழி கலப்பு இல்லாத வசனங்களோடு வரும் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்து இருக்கலாம். ஐந்து ஆண்டுகள் பிற மொழிக்கலப்பு இல்லாத படங்கள் வெளிவந்தால் பல ஆங்கில வார்த்தைகள் சாதாரணப் பேச்சு வழக்கில் இருந்து அழிந்து போகும். தமிழுக்குப் பல புது வார்த்தைகளும் கிடைக்கும்.
இதில் கருவிகளின் பெயர்கள்,அறிவியல் சொற்கள் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக 'வாங்க டாக்டர்' என்பதற்கு 'வாங்க வைத்தியரே' என்று சொல்லலாம். 'டீ.வி யை ஆப் பண்ணு' என்பதை 'தொலைக்காட்சியை நிறுத்து' என்று சொல்லலாம். இப்படிச் சிறிது சிறிதாக தமிழ் சொற்களைப் பழக்கத்தில் கொண்டு வரலாம்.
Wednesday, October 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
ம் நானும் இங்கிருந்து அந்த நிகழ்ச்சியை பார்த்து தொலைத்தேன். தாத்தா கருணாநிதிக்கு தழிழ் சினிமா நடிக நடிகைகள் (தழு)(குலு)க்கல் முறையில் வாழ்த்துச் சொன்ன கன்றாவியை நானும் பார்த்தேன் ம்..என்ன செய்வது.ஏதாவது செய்ய மாட்டீர்களா
//உண்மையிலெயே தமிழ் மீது கலைஞருக்கு பற்று இருந்திருந்தால் பிற மொழி கலப்பு இல்லாத வசனங்களோடு வரும் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்து இருக்கலாம். ஐந்து ஆண்டுகள் பிற மொழிக்கலப்பு இல்லாத படங்கள் வெளிவந்தால் பல ஆங்கில வார்த்தைகள் சாதாரணப் பேச்சு வழக்கில் இருந்து அழிந்து போகும். தமிழுக்குப் பல புது வார்த்தைகளும் கிடைக்கும். //
எண்ணக் குதிரைகள் நன்றாக ஓடியிருக்கிறது !
அருமையான யோசனைகள் !
பாராட்டுகள் மகேஷ் !
வரி நீக்கம் தமிழ் வள்ர்க்கவா,
தங்களின் புகழை வள்ர்க்க.
மக்களை முட்டாள் ஆக்க. . . .
சினிமாவால் இந்த சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை, மாறாக சீறழிவிற்கே வழி செய்கிறது.
நீங்கள் தைரியமானவர்தான்.
/***********************************
80+ வயதிலும் இளைஞராக இருந்து நமீதாவின் கவர்சியை ரசிக்க நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்
***********************************/
இந்த உண்மையை சொல்ல அசாத்திய தைரியம் வேண்டும்.
இதை இன்னும் சிறிது தொலைவு எடுத்து சென்று....
அப்பா, அம்மா என்று அழைக்கும் குழந்தைக்கு அனைத்து செலவுகளும் அரசு ஏற்க்கும் என்று அறிவிப்பு வந்தால் கூட ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. இதெல்லாம் மக்களை கவர வரும் வார்த்தைகள் தான்.
இன்று எல்லோரும் ஏதாவது இலவசம்/ சலுகை கிடைத்தால் தான் தனது கடமையையே செய்ய நினைக்கிறார்கள். என் எண்ணப்படி, இப்படி செய்ய காரணம், நம்மிடையே சொன்னால் சொன்ன படி செய்து வாழ்ந்து காட்ட நல்ல மனிதர்கள் குறைவாக இருக்கிறார்கள். ஊருக்கு மட்டும் உபதேசம் என்ற ரீதியில் தன்னை தானே ஏமாற்றிக்கொண்டு பெரும்பான்மை மக்கள் திரிவதால் இந்த நிலைமை.
இந்த நிலைமை மாற, தங்களை சீரமைத்து, அரசை கேள்வி கேட்கும் தலைமுறை வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் பாடு பட்டால் வழி பிறக்கும்.
தமிழ் என்றும் அழியாது வேறு வேறு பரிமாணங்களில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது / இருக்கும்.
மகேஸ் உனக்கும் எனக்கும் பாத்துட்டீங்களா.. வரலாறு கூட பாருங்க... எல்லாம் தமிழை வளர்க்கும் படங்கள் தான்
அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க.http://chennaicutchery.blogspot.com/2006/10/blog-post.html
இதெல்லாம் தமிழ் வளர்ச்சிக்குன்னு நீங்க நம்பினா என்ன பண்றது. ம். தமிழ்ல பிளாக் எழுதினா ஒருவேளை சலுகை கொடுப்பாங்களா தெரியலை
கடைசியில் எம்.மகன் கிடைத்ததா இல்லையா ?
என்னிடம் இம்சை அரசன் + எம்.மகன் ஒரே டிவிடியில் உள்ளது...
ரொம்ப போர் அடிச்சா வந்து வாங்கிக்கிட்டு போங்க..
பிற மொழி கலப்பு இல்லாத வசனங்களோடு வரும் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்து இருக்கலாம்.
லாம். ஆம்.ம். ஆலோசனைக்கு நன்றி அருமைத் தம்பி மகேஸ் அவர்களே!
-மு.க
//உண்மையிலெயே தமிழ் மீது கலைஞருக்கு பற்று இருந்திருந்தால் பிற மொழி கலப்பு இல்லாத வசனங்களோடு வரும் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்து இருக்கலாம். ஐந்து ஆண்டுகள் பிற மொழிக்கலப்பு இல்லாத படங்கள் வெளிவந்தால் பல ஆங்கில வார்த்தைகள் சாதாரணப் பேச்சு வழக்கில் இருந்து அழிந்து போகும். தமிழுக்குப் பல புது வார்த்தைகளும் கிடைக்கும். //
எண்ணக் குதிரைகள் நன்றாக ஓடியிருக்கிறது !
நீங்க இப்படி சொல்றிங்க, அதையே மருத்துவர் இராமதாசு சொன்னபோது ரஜினி ராம்கியோ, இட்லிவடையோ அவங்க வலைப்பதிவில் சைடு பாரில் போட்டு நக்கல் அடித்தார்கள்....
கருத்துக்களுக்கு நன்றி அகிலன்,கோவி.கண்ணன்,வெங்கட்ராமன்,நன்மனம்,தேவ்,வேந்தன், செந்தழல் ரவி மற்றும் மு.க அவர்களே.
யாராவது ஏன் திருட்டு டி.வி.டி வாங்கிப் பார்த்தாய் என்று குறுக்குச்சால் ஓட்டுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.
இது தான் சொ.செ.சூ வா??
ரவி நீங்கள் பெங்களூரில் எங்கு இருக்கிறீர்கள். நான் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
நன்றி குழலி.
//நீங்க இப்படி சொல்றிங்க, அதையே மருத்துவர் இராமதாசு சொன்னபோது ரஜினி ராம்கியோ, இட்லிவடையோ அவங்க வலைப்பதிவில் சைடு பாரில் போட்டு நக்கல் அடித்தார்கள்.... //
மருத்துவர் அய்யா இதனை முன்பே சொல்லிவிட்டார்களா?
தமிழில் பெயர்வைத்தால் வரி விலக்கு என்பதை வைத்து எல்லாரும் காமெடி பண்ணிடாங்க போல இருக்கே. வரி விலக்கு பெற்ற படம் என்றால் முன்னர் எல்லாம் திரைஅரங்கில் கட்டணமும் குறைப்பார்கள் அதனை ஏன் இப்பொழுது செய்யவில்லை?
வரிவிலக்கு கொடுங்க என்ன கண்ராவி வேணா கொடுங்க அதனால் மக்களுக்கு ஒரு சிறிதளவாது பயன் வேண்டாமா? சினிமாகாரர்களின் புகழுரை கேட்டால் போதுமா மக்களும் புகழ வேண்டாமா?
இந்த லட்சணத்தில் தமிழகத்தில் ஒரு சட்டம் உள்ளது, வணிக நிலையங்களின் பெயரை தமிழில் பெரிதாக எழுதி வைக்க வேண்டும் , சிறியதாக ஆங்கிலத்திலும் எழுதிக்கொள்ளலாம் என்று தவறினால் கடைக்கு சீல்வைக்கப்படுமாம்.
இந்தசட்டம் முறையாகக்
கடைப்பிடிக்கபடுவதில்லை என்பது வேறு விஷயம் ஆனால் சினிமாக்காரர்களிடம் ஏன் இத்தகைய கடுமை காட்டப்படுவதில்லை?
தூக்கு தண்டனையால் தீவிரவாதம் குறையுமா??
இந்த கேள்விக்கு என்ன பதிலோ அதே தான்
//
வரி நீக்கத்தால் தமிழ் வளர்ந்ததா??
//
இந்த கேள்விக்கும்.
//ம்..என்ன செய்வது.ஏதாவது செய்ய மாட்டீர்களா//
அந்த நடிகைகளையா?
//தூக்கு தண்டனையால் தீவிரவாதம் குறையுமா//
வஜ்ரா, அதான் ஆரம்பத்திலேயே சொல்லீட்டேனே, அரசியல் எனக்கு ஆகாது என்று. நன்றி.
நன்றி வவ்வால் அவர்களே!.
நன்றாகச் சம்பாதிக்கும் திரைப்படத் துறையச் சார்ந்தவர்களிடம் ஏன் அரசு மென்மை காட்டுகிறது என்று தெரியவில்லை.
மேலும் சென்னையில் சத்யம் திரையரங்கு வளாகத்திற்குள் நான்கு திரையரங்குகள் உள்ளன. ஆனால் மக்கள் வெளியேறுவதற்குக் குறுகலான பாதைளே உள்ளன. ஏதாவது தீவிபத்து ஏற்பட்டால் சுமார் 600 உயிர்கள் வரை பலியாகும். அனால் அரசு அதற்கு எப்படி அனுமதி அளித்தது என்று தெரியவில்லை.
But Mahesh.. You have left out one important point..
Tamil Film Producers were one time telling that it is not possible to change some english titles, as it would not reach the audience. What happend now?
நல்ல வேளை நான் டி வி இல் பார்க்கவில்லை. இப்படி செய்யலாம்.வரி விலக்கு அளிக்காமல், தமிழ் தலைப்பு இல்லாத படதிற்கு ரெண்டு மட்ங்கு வரி போடலாம். தலைப்பு மட்டும் மாற்றினால் தமிழ் வள்ருமா? முட்டாள் தன்மாக இருக்கிறது.
எல்லாம் மக்களை ஏமாற்ற செய்கிற வேலை.
my mail : nangil@rediffmail.com
குமுதம் சொன்னது மிகவும் சரி.
"வரி விலக்கால் வளரப்போவது தமிழ் அல்ல.. தயாரிப்பாளர்கள்.."
Post a Comment