நம்ம கருத்து கந்தசாமி வீணாப்போன கருணாநிதி எல்லோருக்கும் டீ.வி இலவசமாகக் கொடுக்கப் போறேன்னு சொன்னவுடன், நான் இந்த அரசுக்காக கடந்த 3 வருடங்களாக முறையாகச் செலுத்தி வந்த வருமான வரியினைக் கூட்டிப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் செலுத்தியுள்ளேன். இதில் பல தகிடுதத்தங்கள் செய்து நான் 80ஆயிரம் வரை வரி ஏய்ப்பு செய்திருக்க முடியும். மனசாட்சிக்குப் பயந்து வரி கட்டினால் கட்டிய பணம் ஊழலிழும், வெட்டியான பயனில்லாத திட்டங்களிலும் வீணடிக்கப்பட்டுள்ளதோ/அல்லது வீணடிக்கப் பட்டுவிடுமே என்ற பயமும், ஒரு கையாலாகாத தன்மையும் என்னுள் ஏற்படுகின்றது.
எனவே இந்த முறை நம்ம கைவரிசையைக் காட்டி விட வேண்டியது தான் என முடிவு செய்துள்ளேன்.
53 லட்சம் குடுப்பங்க்ளுக்கும் டீ.வி கொடுக்க 1100 கோடி ரூபாய் செவவழிக்கப் போறாராம்.
அட, வீணாப்போனவரே,
1. 1100 கோடி வைத்து தமிழகத்தில் உள்ள 900 கி.மீ ரயில் பாதையை அகலப் படுத்தலாம்.
2. சென்னைக்கு கடல் நீரை குடிநீர் ஆக்கலாம்.
3. எத்தனை ஆரம்பப் பள்ளிகள் ஆரம்பிக்கலாம்.
ஏன்யா, யார் வீட்டுப் பணத்தில் யாருக்குக் கொடுப்பது. எல்லாம் என்னை மாதிரி ஆட்கள் இரவு பகல் பாக்காமல் கம்யூட்டரைப் பார்த்து கண் வீங்கிச் சம்பாதித்த பணம்.
கொடுக்கனும்னா உன் சொத்த வித்துப் பண்ணுங்கள். இல்ல சன் டீ.வியை அடமானம் வச்சுப் பண்ணுங்கள்.
கருணாநிதி ஜெயித்தால் காந்தி சொன்ன வரி கொடா இயக்கத்தை நான் பின்பற்றுவது என முடிவு செய்துள்ளேன். அப்ப நீங்க?
Wednesday, April 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
தேசி பண்டிட்ல் இந்தப் பதிவை இணைத்துள்ளேன்...
http://www.desipundit.com/2006/04/05/colortv/
1100 கோடி அரசு பணத்தை இவர் பணமாக மக்களுக்கு வாரி இறைத்து (வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டியாக). சன் டிவி இணைப்பு மூலமாக மாதம் 200 கோடி தன் சொந்த பணமாக அல்லலாம் என்ற ஒரு பொது நலம்தான்.
That's true. I agree with you.
வருகைகு நன்றி டுபுக்க்கு மற்றும் ராம்பிரசாத்.
வாங்க JK அண்ணா,
நான் வீட்லே அந்தப்பக்கம் டீ.வி பாத்துக் கொண்டிருக்கும் போது பின்னூட்டம் விட்டுட்டீங்க போல இருக்கு. காலயிலதான் பாத்தேன்.
//1100 கோடி அரசு பணத்தை இவர் பணமாக மக்களுக்கு வாரி இறைத்து //
Idu arasu panam illai. Idhu Namma kattura Varipanam(Tax).
//1100 கோடி அரசு பணத்தை இவர் பணமாக மக்களுக்கு வாரி இறைத்து //
Idu arasu panam Illai. Namma kattura Vari panam.
மிகச் சரியாகச் சொன்னீர்கள் Analog.
ஒரு வேளை கருணாநிதி வெற்றி பெற்று, இலவச டீ.வி திட்டத்தை செயலபடுத்த நினைத்தால், பொதுநல வழக்கு/அரசுப் பணத்தை வீணடித்தல் போன்ற காரணங்களைக் காட்டி நீதிமன்றத்தை அனுக முடியுமா?
வழக்குரைஞர்கள் கருத்துக் கூறினால் மேற்க்கொண்டு சிந்திக்க வசதியாக இருக்கும்.
அல்லது இதுவும் ஓட்டு வாங்கக் கொடுக்கப்படும் லஞ்சம் எனக் கூறி இப்போதே நீதிமன்றத்தை அனுக முடியுமா?
ஆனால் இதைக் காரணம் கூறியே நம்ம கருத்துக் கந்தசாமி வோட்டுக்கேட்பாரோ எனவும் யோசிக்கத் தோன்றுகிறது.(அதிமுகவில் இது பற்றியெல்லாம் சிந்திக்காமலா இருப்பார்கள்). பின்னர் சன் டீவியில் அந்த வழக்குப் பற்றியும், உலகத்தில் யாரெல்லாம் என்னென்ன இலவசமாகக் கொடுத்தார்கள் என்றும் கூறிவிடுவார்கள்.
Mahesh,
Good ideas behind this post. I would have thought it would have been a much better post if you had toned down your language a bit. It might tend to divert the attention from the real intention behind your post.
My two cents.
(Sorry for the english comment. but kalappai is not available to me now.)
கொத்தனாரே, முதன் முதலாக என் பதிவுக்கு வந்துள்ளீர்கள். வருக. வணக்கம்.
என்னுடைய குரல்(tone) சற்றுப் பலமாகவே வந்து விட்டது. திருத்திக் கொள்கிறேன்.
என் பாடு இதைவிட கொடுமையானது... நான் கடந்த நான்கு மாதங்களிள் கட்டிய வரி கிட்டத்தட்ட இரண்டு லகரங்கள்! என் போனஸ் மற்றும் விருதுதாக வழங்கப்பட்ட தொகையில் பாதிக்கும் மேல் கொடுத்தாயிற்று... நான் எங்கள் புதிய சில்லு (SoC) -க்கு உயிர் கொடுக்க நடத்திய மரணப் போராட்டத்தின் விளைவாக கிடைத்த விருத்துப் பணத்தை இந்த அரசு வரி என்ற பெயரில் கொள்ளையடித்து விட்டது... நான் என்றும் வரி கட்டுவதை புண்ணிய காரியமாக எண்ணுபவன். ஆனால் சமீபத்தில் செய்திகளிள் நமது மான்புமிகு(?) முதல்வர் யாரோ ஒரு எக்கச்சக்கமாக நகை அணிந்த ஒரு அம்மையாருக்கு இலவச தொலைக்காட்சி அளிக்கும் போஸ் என் வயிற்றில் தீயை மூட்டுகிறது...! யாராவது இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கமாட்டார்களா?
Post a Comment