Friday, March 31, 2006

எண்ணஅலைகள் பற்றி என் கருத்து.

இன்று சுகவனப்பியரின் பதிவைப் படித்தவுடன் எனக்குத் தேன்றியதை எழுதுகிறேன்.
மனிதன்(விலங்கு) இறந்தவுடன் என்னவாகிறான்(து) எனத் தெரிந்தால் உலகத்தில் பல குழப்பங்கள் தீர்ந்துவிடும். அது யூகங்களாக இல்லாமல் அனைவரும் நம்பும் படி இருக்க வேண்டும். அதாவது அறிவியியல் முறைப்படி நிரூபணம் செயயப் பட வேண்டும்.
எனக்கு எண்ணஅலைகள்(thought waves) மீது நம்பிக்கை உண்டு. எப்படி நம் கண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட அலை நீளம் உள்ள ஒளியை கிரகித்துக்கொண்டு அதை நாம் உணரும் படிச்செய்கிறதோ, அது போல வேறு ஏதொ ஒரு உறுப்பு நம் உடலின் உள் இருந்து கொண்டு வேறு ஒரு அலை நீளம் உள்ள கதிர்களை கிரகித்துக் கொண்டும், வெளியிடவும் செய்கின்றன.அப்படிப்பட்ட உறுப்பு எல்லோருக்கும் இயங்கிக் கொண்டிருக்காமல் ஒரு சிலருக்கு மட்டும் எச்ச உறுப்பாக(குடல் வால் போல) இயங்கிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட அலைகலேசிலருக்கான முற்பிறவி நினைவுகளுக்கும் காரணமாக இருக்கலாம். அதாவது வேறு ஒருவரின் எண்ணஅலைகளை மற்றொருவர் கிரகிக்கும் போது அவரைப்பற்றிய செய்திகள் மற்றவருக்குத் தெரியவரலாம்.
இது என்னுடைய சொந்தக் கருத்துதான். பலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால் இதை எப்படி நிரூபிப்பது என்று எனக்குத் தெரியாது. அது குறித்த சிந்தனை உள்ளவர்கள் விவாதம் செய்து கொள்ளலாம். கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களில் இந்த அலைகள் அதிகம் காணப்படலாம். பலரும் ஒருமுகமாக வழிபடுவதால் அந்த அலைகளின் தாக்கமும் அதிகம் இருக்கலாம்.

Wednesday, March 29, 2006

வாஸ்து படுத்தும் பாடு





சமீபத்தில் இந்தியா போநிருந்த போது என் மாமா வீட்டிற்குப் போயிருந்தேன். என் மாமா கொஞ்சம் வாஸ்து பார்ப்பார்.
எனவே தென் மேற்கு மூலை உயரமாக இருக்க வேண்டும் என் சும்மா ரெண்டு அடிக்கு உயத்திக் கட்டியிருந்தார்.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் சுவர் கட்டாமல் வெறும் செங்கலை மட்டும் அடுக்கி வைத்திருக்கிறார். அந்த அம்புக்குறியிட்ட இடத்தைக் காணவும்.
செங்கல் யார் தலையிலும் விழாத வரைக்கும் வாஸ்து சரியாக வேலை செய்யும் தானே.

தங்கம் விலை மேலும் உயர்வு


தங்கம் விலை ஏன் இப்படி ஏறியது என இதைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.
தமிழ்மண சகோதரிகளே, உங்கள் கணவர் எப்போதாவது இப்படி வாங்கிக் கொடுத்துள்ளாரா?
நல்ல வேளையப்பா கல்யாணமாகாததால் நான் தப்பித்தேன். ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்படிக் கண்ணக் கட்டுதே.

என் பிளாக்கில் என்ன பிரச்சினை?

தமிழ் மக்களே! என் பிளாக்கில் சில தொழில் நுட்ப சிக்கல்கள் வந்ததால் எல்லாவற்றையும் மீண்டும் ப்திவு செய்து விட்டேன். இனி என் குதிரை பறக்கும்

என் ஆசிரியர்

நேற்று மாலை டோண்டுவுக்கு பின்னூட்டம் இட்டுவிட்டு அலுவலகத்தில் இருந்து ஒரு ஏழு மணியளவில் கிளம்பி லிவர்பூல் ரயில் நிலையம் வந்தேன். வெள்ளி மாலை என்பதால் சுமாரான் கூட்டம். நாளை என்ன செய்யலாம் என நினைத்துக் கொண்டே எதிர் இருக்கையைப் பார்த்தேன். கவர்ச்சியான் உடையில் மத்திய கிழக்குப் பகுதியைப் சேர்ந்த ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். நான் அவளைப் பார்த்தவுடன் உதடை மிக லேசாக குவித்தாள். ஆகா! சிக்னல் கிடைத்து விட்டது என, மனதில் ஒரு மகிழ்ச்சி அல்லது சலனம். Hi, எனப் பேச ஆரம்பித்து முன்னேறிச் செல்லலாம் என்ன, ஒரு 150 பவுண்டு(~12000 ரூபாய்) செலவாகும். ஆனால் முக பாவனையில் எந்த அறிகுறியும் காட்டாமல் நிமிர்ந்து அமர்ந்தேன். உடனே சடாரென மனதில் கல்லூரியில் விரிவுரையாளர் பெண்களின் கவர்சிப் பிரத்தேசங்களைப் பற்றிக் கூறியது நினைவில் வந்தது.

சிவகாசி அய்யநாடார் கல்லூரியில் நான் படிக்கும் போது அறிவுச்செல்வன் என்பவர் விரிவுரையாளராக இருந்தார். அப்போது அவருகு 30 வயது இருக்கும். மிகவும் நட்பாகப் பழகும் மனிதர். மாணவர்களுடன் சரிக்குச்சரியாகப் பேசுவார்.
அறிவுச்செல்வன் கறுப்பாக ஒல்லியாக உயரமாக இருப்பார். அவரின் மனைவி நல்ல நிறமாக இருப்பார். இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். தான் காதலிக்கும் போது கல்லூரி நிர்வாகத்தால் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என வகுப்பறையில் சொல்லுவார். (மனைவியும் அதே கல்லூரியில் விரிவுரையாளர்). அவரது குழந்தையைப் பற்றி சொல்லும்போது அவரைப் போல் அழகுடனும், அவரது மனைவியைப் போல் அறிவுடனும் பிறந்துள்ளதாகக் கூறுவார்.
ஓரு நாள் எங்கள் வகுப்பு மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மாணவியை கிண்டல் செய்து அவரிடம் மாட்டிக் கொண்டார்கள். அடுத்த நாள் வகுப்பில் ஒரு மறக்க முடியாத ஒரு உரையாற்றினார்.
"டேய், உலகத்தில் என்னைப் பொறுத்தவரை ரெண்டே கெட்ட பழக்கங்கள் தான் பசங்களிடம் இருக்கு, ஒன்னு சிகரெட் பிடிபது இன்னேன்னு பொம்பளைகிட்டப் போறது/கேலி பண்றது. இது ரெண்டில் எதுவும் என் பசங்ககிட்ட இருகக்கூடாது. இன்னைகி பொண்ணைக் கேலி பண்ணுவே, நாளைக்கி கேலி பண்ணுண எடத்த(உடல்) பாக்க வேற எங்கேயாவது போவ. டேய் வாரத்துக்கு ஒரு தடவை பீர் அடிடா, அத நா ஒன்னும் சொல்ல மாட்டேன். ஆனா தினம் தினம் சிகரெட்டும், பெண்ணைப் பற்றிய நினைவும் உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும் " சிறிது நேரம் வகுப்பில் ஒரு வித அமைதி.
"திடீரென ஒரு ஆவேசம் வந்தவராக, டேய் பொண்ணுங்க கிட்ட அங்க என்னடா இருக்கு இங்க பாரு என்று சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழற்றி, இதைப் போல கொஞ்சம் பெறுசா இருக்கும், அவ்வளவுதான் " என்று சொல்லி வகுப்பறையில் இருந்து பாதியில் இருந்து வெளியேறினார்.
இன்று ரயிலில் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவர் சட்டைய கழற்றிக் காட்டியது நினைவில் வந்து சென்றது. பின்னர் என் செல்பேசியை இயக்கி பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். ஆனாலும் அவரைப் பற்றிய நினைவுகள் மனதில் ஓடிகொண்டுதான் இருந்தது.
ஒரு முறை டீ.வி யைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த போது, தான் ஒரு புது கலர் டீ.வி வாங்கியிருப்பதாகவும், அதைக் காட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்று, அதன் பாகங்களைத் திறந்து காட்டினார்.
ஒரு முறை collision பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு பிரபலமான விளையாட்டு collision னின் இயற்பியல் விதிகளைப் பின்பற்றியே விளையாடுகிறார்கள், அது என்ன என்று ஒவ்வொறுவராகக் கேட்டுக்கொண்டு வந்தார். அனைவரும் திருதிருவென் விழிக்க ஒருவன் மட்டும் "சார் அது அம்மா அப்பா விளையாட்டு சார்" னு சொல்ல அனைவரும் சிரிக்க எங்கள் வகுப்பை ஒரு வாரம் புறக்கணித்தார். பிறகு நாங்கள் மன்னிப்புக் கேட்ட பின் வகுப்பிற்கு வந்தார். இது அனைதையும் கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரியாமல் எங்களைப் பாதுகாத்தார்.
இப்படி ஒவ்வொறு விதத்திலும் மாணவர்களின் நண்பனாய் பழகினார்.
அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் , அது தன் உடலை கவனிக்க மாட்டார். கண்டதையும் சாப்பிடுவார். coca-cola நிறையக் குடிப்பார். அதனால் மஞ்சள்காமாலை வந்தது கூட தெரியாமல் கோழி சாப்பிட்டு, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து திடீரெனெ இறந்த போது எல்லாம் ஒரு வெறுமையாய் உணந்தேன், அவரைப் பற்றி நினைகும் போதும் அப்படியே உறைகிறேன்.

ஒரு 'கல்'லின் கதை

இந்த பதிவின் நாயகன் அமர் என்ற அமர்நாத். சினிமா மற்றும் கதைகளுக்கு மட்டும் தான் கதாநாயகன் உள்ளார்களா என்ன?.
அமரை எனக்கு கடந்த 5 வருடங்களாகத் தெரியும். என்னுடன் என் பழைய கம்பெனியில் மூன்று வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். அமர் back-end ம், நான் front-end ம் கவனித்துக் கொள்வோம். (கம்ப்யூட்டரில் மட்டும் தான் ;-) )
அமரின் வீட்டுச் சமையல் என்க்கும் என் மற்ற team mates கும் ரெம்பப் பிடிக்கும். இட்லியையும், சாம்பார் மற்றும் சாதத்தையும் தினமும் ஒரு கை பார்ர்த்து விடுவோம். எனக்கு தொப்பை போட்டதிற்கு அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். நான் முதன் முதலில் வேலையில் சேர்ந்த போது, சென்னை யைப் பற்றியும், அதன் சந்து பொந்துகளையும் சுற்றிக்காட்டியவன். பதிலுக்கு நான் அவனுக்கு அசைவம் சாப்பிடக் கற்றுக் கொ(கெ)டுத்தேன்.
சரி இப்போது சில சுவாரசியாமான நிகழ்ச்சிகளுக்கு வருவோம்.

எங்கள் team ல் ஒரு வடநாட்டு நண்பண் ஒருவனுக்குத் திருமணம். நானும் அமரும் போவது என முடிவானது.
நாங்கள் இருவரும் மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜயினிக்குப் பக்கத்தில் உள்ள கிராமமும் அல்லாத நகரமும் இல்லாத நாக்தா என்ற ஊருக்குப் பயணமானோம். எனக்கு அதுதான் தமிழ்நாட்டை விட்டு முதல் வெளிநாட்டுப் பயணம். எனக்கு ஹிந்தி தெரியாததன் பலனை ஆந்திராவின் நெல்லூரைத் தாண்டியவுடன் அனுபவிக்க ஆரம்பித்து விட்டேன். அமர் ஹிந்தியில் சூரப்புலி என்பதால் ஓரளவுக்குச் சமாளித்தேன்.
நாக்தாவில் அமர் ஹிந்தியில் பொளந்து கட்டினான். நான் அவனின் வாய் பார்த்து, வாயில் 'ஈ' போவது தெரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் கெட்ட நேரம் அந்த ஊரில் 99% பேருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஒரு ஹோட்டலில் hotwater கேட்டு சர்வ்ர், முதலாளி அனைவரும் திருதிரு என் முழிக்க ஒரே சங்கடமாய் போய்விட்டது. அப்புறம் பக்கத்துத் தெருவில் இருந்த அமரை செல்போனில் கூப்பிட்டு சுடுதண்ணிக்கி ஹிந்தியில் என்னடான்னு கேட்டு 'கரம் பாணி' ன்னு சொன்னா ஹோட்டலில் அனைவரும் இதுக்கா இவ்வளவு சிரமப்பட்டேன் என்று சிரிக்க ஆரம்பித்து விட்டன்ர். தங்கிருந்த முதல் இரண்டு நாளில் அமரின் புகழ் நாக்தா முழுவதும் பரவிவிட்டது.அமர் ஒருவரிடம் தனக்கு பூர்வீகம் ஆந்திரா என்பதால் தெலுங்கு தெரியும் என்றும், தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் தெரியும் என்றும், கேந்திரிய வித்தியாலாவில் படித்தால் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியும் என்றும், தாத்தா சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்ததாகவும், ஆர்வமுடன் ஷ்பானிஸ் படிததாகவும், மலையாளம் பிறர் பேசினால் புரியும் என்றும் சொல்ல அஹா பையன் பயங்கரமாக பில்டப் பண்றானே! என்ன பண்ணி அவனைக் காலி பண்ணலாம்னு என யோசிக்க ஆரம்பித்தேன். ஓன்றும் புரியவில்லை.அன்று மாலை மாப்பிள்ளை ஊர்வலம். கொட்டு, டிரம்ஸ் வாத்தியம் முழங்க மாப்பிள்ளை குதிரையில் வந்து கொண்டிருந்தான். சிலர் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தது. அந்த டிரம்ஸ் வாசிப்பவரிடம் 'fast beat' னு சொல்ல, டண்டணக்க, ரண்டக்க என ஒரு கலவையில் ஆரம்பிக்க ஒரு குத்தாட்டம் போட்டேன். குத்தாட்டம்னா சும்மா சொல்லகூடாது, பின்னி பிரிச்சி எடுத்துப்புட்டேன். மாப்பிள்ளையின் மாமா 100 ரூபாயை எடுத்து என் தலையைச் சுற்றி கொட்டுக்காரனிடம் கொடுக்க beat எகிற ஆரம்பித்தது. அவ்வவுதான் ஊர்வலம் அந்த இடத்தில் அரை மணி நேரம் நின்றுவிட்டது. அந்த ஊரின் அனைத்து இளவட்டங்களும் ஒரு எகிறு எகிற அரை மணி நேரத்தில் என் குத்தாட்டம் பிரபலமாகி விட்டது.மறுநாள் காலை ஷாம்பூ வாங்க கடைக்குப் போனால் நமக்கு நல்ல வரவேற்ப்பு. ஷேவிங் பண்ணப் போனால் இலவசம். அமரிடம் காசு வாங்கி விட்டார்கள். இப்போது கூட நண்பர் ஊருக்குப் போனால் சிலர் என்னைப் பற்றி விசாரிக்கிறார்களாம். இப்படி நம்ம ஹீரோவை ஜீரோ ஆக்கியாச்சு.இதே மாதிரி நம்ம ஹீரோ ஒரு தடவை வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார். எங்கள் team ல் செந்தில் என்று ஒரு நண்பர் இருந்தார். ஒரு முறை செந்திலுக்கும் நம்ம ஹீரோவுக்கும் ஒரு வாக்குவாதம். தமிழ் பெருசா? ஹிந்தி பெருசான்னு? செந்திலிடம் மாட்டிக்கொண்டால் நம்மை 'டர்ராக்காமல்' விடமாட்டான்.பேசிக்கொண்டு இருக்கும்போதே அமர், ஹிந்தியில் 'கல்' என ஒரு வார்த்தை இருக்குன்னும், அது நேற்று அல்லது நாளையைக் குறிக்கும் என்றும் கூறினான். அதாவது இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரு பொருள் படவும் உபயோகப்படுத்தலாம் எனக் கூறினான். எங்கே தமிழில் இரு பொருள் வரும் படி ஏதாவது வார்த்தை இருந்தால் சொல்லுடானு சொல்ல, நம்ம செந்தில் அடுத்த வினாடியே ஒரு வார்த்தை கூறினான். 'கொட்டை'. சுற்றியிருந்த அனைவரும் சிரிக்க நம்ம ஹீரோ தலையில் அடித்துக் கொண்டே escape.

தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்!

தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்!இது வைகோவின் குரல். இந்த வலைப்பதிவைப் படித்ததும் சில சம்பவங்கள் என் மனதில் ஓடுகின்றன்.
அதை உங்களுடன் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்வதா அல்லது ஒரு சாதாரண நிகழ்வாகச் சொல்வதா எனத் தெரியவில்லை.

அது 1983ம் வருடம். நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது விடுதலைப் புலிகள் பள்ளிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். புலிகள் என்றதும், ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் புத்தக அட்டையில் இருக்கும் புலியாக இருக்கும் என்று ஆர்வத்துடன் தலைமையாசிரியர் அறையை எட்டிப்பார்த்தேன். சிலர் ராணூவ உடை அணிந்து தலைமையாசிரியருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு ஒரு சுற்றறிக்கை அனுப்பி விடுதலைப் புலிகளுக்காக காசு கேட்டார்கள். பத்துக்காசு கொடுத்திருப்பேன் என நினைக்கிறேன். இது போல் சில முறை நடந்தது.

பிறகு ஒரு நாள், 1986 அல்லது 1987 ம் வருடம் இருக்கும், ஜெயவர்தனாவின் கொடும்பாவியை ஊர்வலமாக எடுத்துவந்தார்கள். அவருக்கு செருப்பு மாலை அணிவித்து இருந்தார்கள். மேலும் எலி, பல்லியைக் கொன்று அவர் மேல் போட்டு இருந்தார்கள். பிறகு சிங்கக்குட்டி புரோட்டாக் கடை முச்சந்தியில் போட்டு அவரைச் செருப்பால் அடித்தார்கள். பின்னர் தீவைத்துக் கொழுத்தினார்கள்.

ஆனால் அதே போன்ற எழுச்சியை இப்போது எதிர்பார்க்க இயலுமா? ராஜீவ்காந்தியின் கொலைதானே அதைத்தடுக்கிறது.
ஆனால் என் சகோதரர்கள் செத்துக்கொண்டு இருப்பதை என்னால் சகிக்கமுடியவைல்லை. இப்பொழுது என் கைகள் இந்திய அரசின் சட்டத்தால் கட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தப் பிரச்சினையினால் தான் தமிழும்,தமிழர்கழும் உலகம்முழுவதும் பரவியுள்ளார்கள், மற்றும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என நினைக்கும் போது உலகமயமாக்கப்பட்ட பொருளாதார சூழலில் "தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்" என்ற டார்வினின் கூற்றை நிரூபிக்க தமிழ் மொழி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுகிறது என நினைக்கிறேன்.

செய்திகள்.

நம்முடய தமிழ் மக்கள் உண்மையான/முழுமையான அன்றாடச் செய்திகளை அறிந்து கொள்கிறார்களா? எனக்குத் தெரிந்தவரை இல்லை என்பேன். லண்டனில் சில இலங்கைத் தமிழர்களுடன் பேசும் பொழுது, அவர்கள் நம்மளை விட நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். பல நேரங்களில் அவர்கள் தமிழ் மற்றும் தமிழ்ர்களின் பிரநிதிகளாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு முழுமையான பாரபச்சமற்ற செய்திகள் கிடைக்கின்றன.
உதாரணமாக நாம் சன் டீவியை எடுத்துக்கொள்வோம். அரை மணி நேர செய்தியில் 10 நிமிடம் விளம்பரம், அரசியல் செய்திகள் அனைத்தையும் தி.மு.க விற்கு ஆதரவாகவே வாசிக்கிறார்கள். இரண்டே இரண்டு உலகச் செய்திகள் மற்றும் ஒரே ஒரு விளையாட்டுச் செய்தி. செரீனா, ஐடியல் மற்றும் குஸ்பு ஆகியோர் மீதியிருக்கும் சில நிமிடங்களை அடைத்துக் கொள்கிறார்கள். வாரம் இரு முறை நம் கருத்து கருணாநிதி ஏதாவது முரசொலியில் சொன்னதை(பினாத்தல்) மீண்டும் சொல்வார்கள். பெரும்பாலும் இவை தான் நம்முடய செய்திகள். உலகில் வேறு எதுவுமே நடக்கவில்லயா? சன் டீவியினர் தமிழ்நாட்டை கெடுப்பது மட்டுமில்லாமல், தற்பொழுது ஐரோப்பாவையும்,ஆஸ்திரேலியாவையும் கெடுக்கிறார்கள்.
ஆனால் இலங்கைத் தமிழர்களால் ஐரோப்பாவில் நடத்தப்படும் வெக்டொன் தழிழுக்கு மிகச் சிறப்பான சேவை செய்கிறது. தொகுப்பாளர்கள் அனைவரும் சுத்தமாக, அழகாக செய்திகள் வாசிக்கிறார்கள். ஒரு மணி நேரம் செய்தியில் இந்தியா, இலங்கை, ஐரோப்பா,அமெரிக்கா மற்றும் விளையாட்டுச் செய்திகள் அழகாகத் தொகுக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன். நேர்மையாவும், உண்மையாகவும் சொல்கிறார்கள். கருத்து கருணாநிதி உள்ளவரை உண்மையான செய்தி என்பதை சன் டீவியில் எதிர்பார்க்கமுடியாது போலும்.
ஒரு கருத்தரங்கில் ஒரு இலங்கைப் பேச்சாளர் சொன்னார், "இனி இலங்கைத் தமிழர்கள் தான் தமிழை வளர்ப்பார்கள்". அது உண்மையாகி விடும் போலுள்ளது.

முதல் பதிவில் சுவாரசியமாக என்ன பதிவது?

முதல் பதிவில் சுவாரசியமாக என்ன பதிவது என்று சில தினங்களாக குழம்பியபோது, முதலில் என்னைப் பற்றியும், என் சி ல நண்பர்களைப் பற்றியும் சொல்லிவிடுவது என்று முடிவெடுதேன்.

என்னுடைய பெயர் மகேந்திரன் மகேஸ். இது எனக்கு நான் வைத்துக் கொண்ட பெயர்??. என் அப்பா பள்ளியில் பெயர் சேர்க்கும் பொது, என்னிடம், மகேஸ் என்று பெயர் வேண்டுமா அல்லது மகேந்திரன் என்று பெயர் வேண்டுமா என கேட்க, மகேந்திரன் தான்பா நல்லா இருக்குனு சொல்ல, அந்த ஒரு நிமிடத்தில் பெயர் மாறிவிட்டது.
சொந்த ஊர் கமுதி, ராமநாதபுரம் மாவட்டம் (கமுதிக்காரர்கள் தொடர்புகொள்ளலாம்). (அடிக்கடி தினத்தந்தியில் வரும் ஊர்)
12ம் வகுப்பு வரை படித்தது கமுதியில், இளங்கலை இயற்பியல்,சிவகாசி அய்ய நாடார் கல்லூரி, MCA காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி. தவமாய் தவமிருந்து படத்தில் வரும் கல்லுரி. சேரன் தங்கியிருந்த 308 வது அறை என்னுடயது. அந்த விடுதி அரை வட்டமாக இருக்கும். கிழக்குப் பக்கமாக 320 வது அறை வழியே நுழைந்தால் 310 வது அறை வடக்குப் பார்த்து இருக்கும், 301 வது அறை மேற்குப் பார்த்து இருக்கும். முதல் இரண்டு மாதம் ஒரே குழப்பம். நான் படிக்கும் போது (1998-2001) அழகப்பாவில் கட்டணம் மிகவும் குறைவு. அப்போது செமஸ்டர் கட்டணம் 1000 ரூபாய். எனக்கு முன் படித்தவர்கழுக்கு 175 ரூபாய்.( அதயும் நேரத்திற்கு கட்டாமல் அபராதம் கட்டுவார்கள்) . இவ்வாறு என்னுடய படிப்பிற்கு இந்திய அரசு நிறைய உதவியுள்ளது. எனவே என் வருமான வரியை சரியாக செலுத்தி விடுவேன் மற்றும் பணம் அனுப்பும் போது வங்கிகள் மூலம் அனுப்புவேன்.

பின்னர் சென்னை polaris software ல் மூன்று ஆண்டுகள் பணி செய்தேன் . கடந்த ஒரு ஆண்டாக லண்டனில் பணி.

லண்டனில் நான் தங்கியிருப்பது நண்பர் ஜெயக்குமாருடன். இவர் அழகப்பாவில் எனக்கு 2வருடம் சீனியர்,மானாமதுரைக்காரர் . இவர் சினிமா பாடல்களை வரிகளை மாற்றி "வேறு" அர்த்ததுடன் பாடுவார். கல்லூரி விடுதியில் 306 வது அறையில் தினமும் ஒரே கச்சேரிதான். அவரை நாங்கள் database என்று கூறுவோம். விஜயகாந்த் சிவப்பு சட்டை போட்டு நடித்த படம் என்ன? என்று query போட்டால், resultset ல் 4 அல்லது 5 படமாவது வரும். விஜயகாந்த் ரசிகர் மன்ற லண்டன் மாநகர தலைவர் மாதிரி பேசுவார்.
எங்களுடன் தங்கியிருக்கும் மற்றொரு நண்பர் ராஜேஸ். இவர் ஒரு legacy database. 1970க்கு முந்தய சினிமா செய்திகள் மட்டும் அவருக்கு நினைவு இருக்கும். சன் டீவியில் சிம்ரன் ஆடிக்கொண்டு இருப்பதைக் காட்டி, யாருப்பாஇது?, ஜோதிகாவா? நல்லா அழகா இருக்கே! என்பார். இல்லண்ணா இது சிம்ரன் இது கூட தெரியலயா? என்போம். மறுநாள் மறுபடியும் அதே கேள்வியை கேட்பார்.உடனே நாங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைச்சிருச்சி, தெரியுமாண்ணா? என்போம்.

என்னைப்பற்றி தெரிந்துகொள்ள இவ்வள்வு போதும்.
இவ்வாறு எதப்பத்தியும் கவலைப் படாமல், பின்னால் வரப்போகும் திருமணம் எனும் பிரச்சினையை எதிர்நோக்கி,ஒடுற பாம்பை மிதிக்கிற வயசில் உள்ள 27 வயசு இளவட்டம் நான்.

முதல் பதிவு

முதல் பதிவு