Wednesday, March 29, 2006

செய்திகள்.

நம்முடய தமிழ் மக்கள் உண்மையான/முழுமையான அன்றாடச் செய்திகளை அறிந்து கொள்கிறார்களா? எனக்குத் தெரிந்தவரை இல்லை என்பேன். லண்டனில் சில இலங்கைத் தமிழர்களுடன் பேசும் பொழுது, அவர்கள் நம்மளை விட நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். பல நேரங்களில் அவர்கள் தமிழ் மற்றும் தமிழ்ர்களின் பிரநிதிகளாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு முழுமையான பாரபச்சமற்ற செய்திகள் கிடைக்கின்றன.
உதாரணமாக நாம் சன் டீவியை எடுத்துக்கொள்வோம். அரை மணி நேர செய்தியில் 10 நிமிடம் விளம்பரம், அரசியல் செய்திகள் அனைத்தையும் தி.மு.க விற்கு ஆதரவாகவே வாசிக்கிறார்கள். இரண்டே இரண்டு உலகச் செய்திகள் மற்றும் ஒரே ஒரு விளையாட்டுச் செய்தி. செரீனா, ஐடியல் மற்றும் குஸ்பு ஆகியோர் மீதியிருக்கும் சில நிமிடங்களை அடைத்துக் கொள்கிறார்கள். வாரம் இரு முறை நம் கருத்து கருணாநிதி ஏதாவது முரசொலியில் சொன்னதை(பினாத்தல்) மீண்டும் சொல்வார்கள். பெரும்பாலும் இவை தான் நம்முடய செய்திகள். உலகில் வேறு எதுவுமே நடக்கவில்லயா? சன் டீவியினர் தமிழ்நாட்டை கெடுப்பது மட்டுமில்லாமல், தற்பொழுது ஐரோப்பாவையும்,ஆஸ்திரேலியாவையும் கெடுக்கிறார்கள்.
ஆனால் இலங்கைத் தமிழர்களால் ஐரோப்பாவில் நடத்தப்படும் வெக்டொன் தழிழுக்கு மிகச் சிறப்பான சேவை செய்கிறது. தொகுப்பாளர்கள் அனைவரும் சுத்தமாக, அழகாக செய்திகள் வாசிக்கிறார்கள். ஒரு மணி நேரம் செய்தியில் இந்தியா, இலங்கை, ஐரோப்பா,அமெரிக்கா மற்றும் விளையாட்டுச் செய்திகள் அழகாகத் தொகுக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன். நேர்மையாவும், உண்மையாகவும் சொல்கிறார்கள். கருத்து கருணாநிதி உள்ளவரை உண்மையான செய்தி என்பதை சன் டீவியில் எதிர்பார்க்கமுடியாது போலும்.
ஒரு கருத்தரங்கில் ஒரு இலங்கைப் பேச்சாளர் சொன்னார், "இனி இலங்கைத் தமிழர்கள் தான் தமிழை வளர்ப்பார்கள்". அது உண்மையாகி விடும் போலுள்ளது.

No comments: