இந்த பதிவின் நாயகன் அமர் என்ற அமர்நாத். சினிமா மற்றும் கதைகளுக்கு மட்டும் தான் கதாநாயகன் உள்ளார்களா என்ன?.
அமரை எனக்கு கடந்த 5 வருடங்களாகத் தெரியும். என்னுடன் என் பழைய கம்பெனியில் மூன்று வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். அமர் back-end ம், நான் front-end ம் கவனித்துக் கொள்வோம். (கம்ப்யூட்டரில் மட்டும் தான் ;-) )
அமரின் வீட்டுச் சமையல் என்க்கும் என் மற்ற team mates கும் ரெம்பப் பிடிக்கும். இட்லியையும், சாம்பார் மற்றும் சாதத்தையும் தினமும் ஒரு கை பார்ர்த்து விடுவோம். எனக்கு தொப்பை போட்டதிற்கு அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். நான் முதன் முதலில் வேலையில் சேர்ந்த போது, சென்னை யைப் பற்றியும், அதன் சந்து பொந்துகளையும் சுற்றிக்காட்டியவன். பதிலுக்கு நான் அவனுக்கு அசைவம் சாப்பிடக் கற்றுக் கொ(கெ)டுத்தேன்.
சரி இப்போது சில சுவாரசியாமான நிகழ்ச்சிகளுக்கு வருவோம்.
எங்கள் team ல் ஒரு வடநாட்டு நண்பண் ஒருவனுக்குத் திருமணம். நானும் அமரும் போவது என முடிவானது.
நாங்கள் இருவரும் மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜயினிக்குப் பக்கத்தில் உள்ள கிராமமும் அல்லாத நகரமும் இல்லாத நாக்தா என்ற ஊருக்குப் பயணமானோம். எனக்கு அதுதான் தமிழ்நாட்டை விட்டு முதல் வெளிநாட்டுப் பயணம். எனக்கு ஹிந்தி தெரியாததன் பலனை ஆந்திராவின் நெல்லூரைத் தாண்டியவுடன் அனுபவிக்க ஆரம்பித்து விட்டேன். அமர் ஹிந்தியில் சூரப்புலி என்பதால் ஓரளவுக்குச் சமாளித்தேன்.
நாக்தாவில் அமர் ஹிந்தியில் பொளந்து கட்டினான். நான் அவனின் வாய் பார்த்து, வாயில் 'ஈ' போவது தெரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் கெட்ட நேரம் அந்த ஊரில் 99% பேருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஒரு ஹோட்டலில் hotwater கேட்டு சர்வ்ர், முதலாளி அனைவரும் திருதிரு என் முழிக்க ஒரே சங்கடமாய் போய்விட்டது. அப்புறம் பக்கத்துத் தெருவில் இருந்த அமரை செல்போனில் கூப்பிட்டு சுடுதண்ணிக்கி ஹிந்தியில் என்னடான்னு கேட்டு 'கரம் பாணி' ன்னு சொன்னா ஹோட்டலில் அனைவரும் இதுக்கா இவ்வளவு சிரமப்பட்டேன் என்று சிரிக்க ஆரம்பித்து விட்டன்ர். தங்கிருந்த முதல் இரண்டு நாளில் அமரின் புகழ் நாக்தா முழுவதும் பரவிவிட்டது.அமர் ஒருவரிடம் தனக்கு பூர்வீகம் ஆந்திரா என்பதால் தெலுங்கு தெரியும் என்றும், தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் தெரியும் என்றும், கேந்திரிய வித்தியாலாவில் படித்தால் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியும் என்றும், தாத்தா சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்ததாகவும், ஆர்வமுடன் ஷ்பானிஸ் படிததாகவும், மலையாளம் பிறர் பேசினால் புரியும் என்றும் சொல்ல அஹா பையன் பயங்கரமாக பில்டப் பண்றானே! என்ன பண்ணி அவனைக் காலி பண்ணலாம்னு என யோசிக்க ஆரம்பித்தேன். ஓன்றும் புரியவில்லை.அன்று மாலை மாப்பிள்ளை ஊர்வலம். கொட்டு, டிரம்ஸ் வாத்தியம் முழங்க மாப்பிள்ளை குதிரையில் வந்து கொண்டிருந்தான். சிலர் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தது. அந்த டிரம்ஸ் வாசிப்பவரிடம் 'fast beat' னு சொல்ல, டண்டணக்க, ரண்டக்க என ஒரு கலவையில் ஆரம்பிக்க ஒரு குத்தாட்டம் போட்டேன். குத்தாட்டம்னா சும்மா சொல்லகூடாது, பின்னி பிரிச்சி எடுத்துப்புட்டேன். மாப்பிள்ளையின் மாமா 100 ரூபாயை எடுத்து என் தலையைச் சுற்றி கொட்டுக்காரனிடம் கொடுக்க beat எகிற ஆரம்பித்தது. அவ்வவுதான் ஊர்வலம் அந்த இடத்தில் அரை மணி நேரம் நின்றுவிட்டது. அந்த ஊரின் அனைத்து இளவட்டங்களும் ஒரு எகிறு எகிற அரை மணி நேரத்தில் என் குத்தாட்டம் பிரபலமாகி விட்டது.மறுநாள் காலை ஷாம்பூ வாங்க கடைக்குப் போனால் நமக்கு நல்ல வரவேற்ப்பு. ஷேவிங் பண்ணப் போனால் இலவசம். அமரிடம் காசு வாங்கி விட்டார்கள். இப்போது கூட நண்பர் ஊருக்குப் போனால் சிலர் என்னைப் பற்றி விசாரிக்கிறார்களாம். இப்படி நம்ம ஹீரோவை ஜீரோ ஆக்கியாச்சு.இதே மாதிரி நம்ம ஹீரோ ஒரு தடவை வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார். எங்கள் team ல் செந்தில் என்று ஒரு நண்பர் இருந்தார். ஒரு முறை செந்திலுக்கும் நம்ம ஹீரோவுக்கும் ஒரு வாக்குவாதம். தமிழ் பெருசா? ஹிந்தி பெருசான்னு? செந்திலிடம் மாட்டிக்கொண்டால் நம்மை 'டர்ராக்காமல்' விடமாட்டான்.பேசிக்கொண்டு இருக்கும்போதே அமர், ஹிந்தியில் 'கல்' என ஒரு வார்த்தை இருக்குன்னும், அது நேற்று அல்லது நாளையைக் குறிக்கும் என்றும் கூறினான். அதாவது இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரு பொருள் படவும் உபயோகப்படுத்தலாம் எனக் கூறினான். எங்கே தமிழில் இரு பொருள் வரும் படி ஏதாவது வார்த்தை இருந்தால் சொல்லுடானு சொல்ல, நம்ம செந்தில் அடுத்த வினாடியே ஒரு வார்த்தை கூறினான். 'கொட்டை'. சுற்றியிருந்த அனைவரும் சிரிக்க நம்ம ஹீரோ தலையில் அடித்துக் கொண்டே escape.
Wednesday, March 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//what is meant by "Kottai//
அதுக்கெல்லாம் இந்த இடத்துல விளக்கம் சொல்ல முடியாதுங்க. உங்க நண்பர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. :)
Post a Comment