முதல் பதிவில் சுவாரசியமாக என்ன பதிவது என்று சில தினங்களாக குழம்பியபோது, முதலில் என்னைப் பற்றியும், என் சி ல நண்பர்களைப் பற்றியும் சொல்லிவிடுவது என்று முடிவெடுதேன்.
என்னுடைய பெயர் மகேந்திரன் மகேஸ். இது எனக்கு நான் வைத்துக் கொண்ட பெயர்??. என் அப்பா பள்ளியில் பெயர் சேர்க்கும் பொது, என்னிடம், மகேஸ் என்று பெயர் வேண்டுமா அல்லது மகேந்திரன் என்று பெயர் வேண்டுமா என கேட்க, மகேந்திரன் தான்பா நல்லா இருக்குனு சொல்ல, அந்த ஒரு நிமிடத்தில் பெயர் மாறிவிட்டது.
சொந்த ஊர் கமுதி, ராமநாதபுரம் மாவட்டம் (கமுதிக்காரர்கள் தொடர்புகொள்ளலாம்). (அடிக்கடி தினத்தந்தியில் வரும் ஊர்)
12ம் வகுப்பு வரை படித்தது கமுதியில், இளங்கலை இயற்பியல்,சிவகாசி அய்ய நாடார் கல்லூரி, MCA காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி. தவமாய் தவமிருந்து படத்தில் வரும் கல்லுரி. சேரன் தங்கியிருந்த 308 வது அறை என்னுடயது. அந்த விடுதி அரை வட்டமாக இருக்கும். கிழக்குப் பக்கமாக 320 வது அறை வழியே நுழைந்தால் 310 வது அறை வடக்குப் பார்த்து இருக்கும், 301 வது அறை மேற்குப் பார்த்து இருக்கும். முதல் இரண்டு மாதம் ஒரே குழப்பம். நான் படிக்கும் போது (1998-2001) அழகப்பாவில் கட்டணம் மிகவும் குறைவு. அப்போது செமஸ்டர் கட்டணம் 1000 ரூபாய். எனக்கு முன் படித்தவர்கழுக்கு 175 ரூபாய்.( அதயும் நேரத்திற்கு கட்டாமல் அபராதம் கட்டுவார்கள்) . இவ்வாறு என்னுடய படிப்பிற்கு இந்திய அரசு நிறைய உதவியுள்ளது. எனவே என் வருமான வரியை சரியாக செலுத்தி விடுவேன் மற்றும் பணம் அனுப்பும் போது வங்கிகள் மூலம் அனுப்புவேன்.
பின்னர் சென்னை polaris software ல் மூன்று ஆண்டுகள் பணி செய்தேன் . கடந்த ஒரு ஆண்டாக லண்டனில் பணி.
லண்டனில் நான் தங்கியிருப்பது நண்பர் ஜெயக்குமாருடன். இவர் அழகப்பாவில் எனக்கு 2வருடம் சீனியர்,மானாமதுரைக்காரர் . இவர் சினிமா பாடல்களை வரிகளை மாற்றி "வேறு" அர்த்ததுடன் பாடுவார். கல்லூரி விடுதியில் 306 வது அறையில் தினமும் ஒரே கச்சேரிதான். அவரை நாங்கள் database என்று கூறுவோம். விஜயகாந்த் சிவப்பு சட்டை போட்டு நடித்த படம் என்ன? என்று query போட்டால், resultset ல் 4 அல்லது 5 படமாவது வரும். விஜயகாந்த் ரசிகர் மன்ற லண்டன் மாநகர தலைவர் மாதிரி பேசுவார்.
எங்களுடன் தங்கியிருக்கும் மற்றொரு நண்பர் ராஜேஸ். இவர் ஒரு legacy database. 1970க்கு முந்தய சினிமா செய்திகள் மட்டும் அவருக்கு நினைவு இருக்கும். சன் டீவியில் சிம்ரன் ஆடிக்கொண்டு இருப்பதைக் காட்டி, யாருப்பாஇது?, ஜோதிகாவா? நல்லா அழகா இருக்கே! என்பார். இல்லண்ணா இது சிம்ரன் இது கூட தெரியலயா? என்போம். மறுநாள் மறுபடியும் அதே கேள்வியை கேட்பார்.உடனே நாங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைச்சிருச்சி, தெரியுமாண்ணா? என்போம்.
என்னைப்பற்றி தெரிந்துகொள்ள இவ்வள்வு போதும்.
இவ்வாறு எதப்பத்தியும் கவலைப் படாமல், பின்னால் வரப்போகும் திருமணம் எனும் பிரச்சினையை எதிர்நோக்கி,ஒடுற பாம்பை மிதிக்கிற வயசில் உள்ள 27 வயசு இளவட்டம் நான்.
Wednesday, March 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வருகைக்கு நன்றி சிவம் அவர்களே.
வலைப் பதிவுலகத்திற்கு வருகை தரும் மகேஸ் அவர்களை வரவேற்கிறேன்.
வருக! வாழ்க!
நிறைய அருமையான பதிவுகளைத் தருக!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/04/06-2006.html)
வாழ்த்துலளுக்கு நன்றி சிபி அவர்களே.
நான் வலைப்பதிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதஙகள் ஆகிவிட்டன.
Post a Comment