Friday, March 31, 2006

எண்ணஅலைகள் பற்றி என் கருத்து.

இன்று சுகவனப்பியரின் பதிவைப் படித்தவுடன் எனக்குத் தேன்றியதை எழுதுகிறேன்.
மனிதன்(விலங்கு) இறந்தவுடன் என்னவாகிறான்(து) எனத் தெரிந்தால் உலகத்தில் பல குழப்பங்கள் தீர்ந்துவிடும். அது யூகங்களாக இல்லாமல் அனைவரும் நம்பும் படி இருக்க வேண்டும். அதாவது அறிவியியல் முறைப்படி நிரூபணம் செயயப் பட வேண்டும்.
எனக்கு எண்ணஅலைகள்(thought waves) மீது நம்பிக்கை உண்டு. எப்படி நம் கண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட அலை நீளம் உள்ள ஒளியை கிரகித்துக்கொண்டு அதை நாம் உணரும் படிச்செய்கிறதோ, அது போல வேறு ஏதொ ஒரு உறுப்பு நம் உடலின் உள் இருந்து கொண்டு வேறு ஒரு அலை நீளம் உள்ள கதிர்களை கிரகித்துக் கொண்டும், வெளியிடவும் செய்கின்றன.அப்படிப்பட்ட உறுப்பு எல்லோருக்கும் இயங்கிக் கொண்டிருக்காமல் ஒரு சிலருக்கு மட்டும் எச்ச உறுப்பாக(குடல் வால் போல) இயங்கிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட அலைகலேசிலருக்கான முற்பிறவி நினைவுகளுக்கும் காரணமாக இருக்கலாம். அதாவது வேறு ஒருவரின் எண்ணஅலைகளை மற்றொருவர் கிரகிக்கும் போது அவரைப்பற்றிய செய்திகள் மற்றவருக்குத் தெரியவரலாம்.
இது என்னுடைய சொந்தக் கருத்துதான். பலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால் இதை எப்படி நிரூபிப்பது என்று எனக்குத் தெரியாது. அது குறித்த சிந்தனை உள்ளவர்கள் விவாதம் செய்து கொள்ளலாம். கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களில் இந்த அலைகள் அதிகம் காணப்படலாம். பலரும் ஒருமுகமாக வழிபடுவதால் அந்த அலைகளின் தாக்கமும் அதிகம் இருக்கலாம்.

1 comment:

supersubra said...

எண்ண அலைகள் பற்றிய உங்கள் கருத்து மிகவும் ஒத்துக்கொள்ளக்கூடியதே. இதைப்பற்றி விரைவில் நான் ஒரு பதிவு போடுகிறேன். என்னுடைய மறு பிறவி பற்றிய கருத்தையும் பார்க்கவும்

http://yennottam.blogspot.com/2006/03/blog-post_31.html

Kirlian photography என்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று ஒரு பதிவாகப்போடவும்