Sunday, December 31, 2006

என் மைசூர் சுற்றுலாப் பயணம் - சில புகைப்படங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு மைசூர் சுற்றுலா சென்றிருந்தேன். அது ஒரு நாள் பயணம் என்பதான் மைசூர் விலங்குகள் பூங்காவும், பிருந்தாவன் தோட்டம் ஆகியவைகள் மட்டுமே சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு பயணம் நல்ல முறையில் அமைந்தது. இதோ அந்தப் பயணத்தின் சில நினைவுகள்.

வெள்ளை மயில். சாதாரணமாகப் பல இடங்களில் காணப்படுவதில்லை. திருப்பரங்குன்றத்தில் இவைகளை நான் பார்த்திருக்கிறேன். பெண் மயிலைப் பார்க்கும் போது பெரிய பிராய்லர் கோழியின் நினைவு ஏனோ வந்து போனது.

இவைகள் நம்முடைய முன்னோர்கள். கொரில்லா குரங்குகள் இந்தியாவில் மைசூரில் மட்டுமே பாதுகாத்து வரப்படுகிறது.

காண்டாமிருகம். வெயிலின் சூடு தாங்காமல் தண்ணீர்த் தொட்டியைத் தேடி வருகிறார்.

வரிக்குதிரை. நிழலில் ஓய்வு எடுக்கிறார். நம்ம ஊர் கழுதைகளுக்குச் சூடு போட்டால் அவைகள் வரிக்குதிரை ஆகிவிடுமா?

இவரும் நம்ம முன்னோர் தான். எங்களைப் பார்த்தவுடன் கைதட்டி தாவிக்குதித்து நடனமாடி மகிழ்வித்தார்.

ஆப்பிரிக்க யானை. இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ளது என்கிறார்கள். வேறு யானைகள் எதுவும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் வந்திறங்கியதாகத் தகவல்கள் இல்லை எனவே இந்தியாவில் உள்ள இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் இதுவும் ஒன்று. இந்தப் புகைப்படம் ஆனந் அவர்களின் இந்தப் பதிவை மனதில் நினைத்துக் கொண்டே எடுத்தேன். யானையாரும் நன்கு ஒத்துழைத்ததால் புகைப்படமும் நன்றாக அமைந்துள்ளது.

மைசூர் பிருந்தாவன் பூந்தோட்டத்தின் அழகிய தோற்றம். பிருந்தாவனம் என்றதும் அது தனியாரால் நடத்தப்படும் பூங்கா என்று தவறாக இந்தனை நாட்கள் நினைத்திருந்தேன். அது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டின் நிர்வாகத்தில் இருக்கின்றது என்று சென்றவாரம் தான் தெரிந்தது. பூங்கா ரம்யமாக இருக்கிறது.

டிஜிட்டல் காமிரா என்பதால் நினைபதை, பார்ப்பதையெல்லாம் சுட்டதில் சுமாரக வந்த பூக்கள்.



கே.ஆர்.எஸ் அணைக்கட்டில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடல் போல் விரிந்து கிடக்கும் காவிரி நீர் கே.ஆர்.எஸ் அணைக்கட்டில். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர் தான்.

இரவில் இசைக்கு ஏற்ப நடனமாடிய நீர்வீழ்ச்சி. நேரில் பார்க்க மிக அருமையாக இருந்தது. டிஜிட்டல் கேமராவில் mode செட் செய்யத் தெரியாததால் இரவில் நகரும் பொருட்களைத் துல்லியமாகப் படமெடுக்க முடியவில்லை.

Thursday, December 21, 2006

ஒரு நீதிக்கதை.

ஒரு நாள் மாலை ஒரு தாத்தா தன் பேரனுக்கு நீதிக்கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதாவது, நம்மிடையே எப்பொழுதும் இரு விலங்கு போன்ற குணங்களுடன் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

ஒன்று மிகவும் நல்ல பண்பு,பாசம்,நேசம்,மனிதத்தன்மை,உண்மை போன்ற குணங்கள்.

மற்றொன்று கோபம்,பொறாமை,பொய், தான்மட்டுமே எல்லாமும் எனப்படும் ஈகோ போன்ற குணங்கள் என்று கூறினார்.

அப்போ இதில் எந்த விலங்கு ஜெயிக்கும் என்று கேட்டான் சிறுவன்.தாத்தா நீ எதற்கு உணவு கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும் என்றார்.

நீதி :
நாம் எப்போதும் நல்லவற்றையே நினைப்போம் செய்வோம் , நல்லதே நடக்கும்.

இது இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

Wednesday, December 13, 2006

உஷாரய்யா உஷாரு!!!

நேற்று மதிய உணவு இடைவேளையில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது ஒருவர் தன்னிடம் டிஜிட்டல் வீடியோ கேமரா இருப்பதாகவும் விலைக்கு வாங்கிக் கொள்ள முடியுமா என்று அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டார்.

சரி காண்பியுங்கள் என்று கேட்ட பொழுது ஒரு ஓரமாகக் கூட்டிச் சென்று காண்பித்தார். அது நிக்கான் எஸ்.எல்.ஆர் கேமரா போல இருந்தது(நிக்கான் காமிரா அல்ல). காமிராவைக் காட்டி இதன் மூலம் 4 மணி நேரம் வீடியோ பதிவு செய்யலாம் என்று சொன்ன போது, சரி டேப் எப்படி கேமராவில் மாட்டுவது என்று கேட்ட போது அது அவர் உளற ஆரம்பித்தார். வுடு ஜூட் என்று எஸ்கேப் ஆனேன். அவரோ என்னைத் துரத்திக் கொண்டே அலுவலகம் வரை வந்தார்.

இது போல இரண்டு முறை மயிரிழையில் ஏமாற்றலில் இருந்து தப்பியிருக்கிறேன்.

ஒரு முறை அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் ஒருவர் தான் குடும்பத்துடன் ஊரில் இருந்து வந்ததாகவும் பணம் இல்லாததால் ஒரு கைக்கடிகாரத்தைக் காட்டி அதன் விலை 1000 ரூபாய் என்றும் அதனை வைத்துக் கொண்டு 700 ரூபாய் மட்டும் தருமாறுகேட்டார்.

அப்போது திடீரென் ஆஜரான மற்றொருவர் தான் தான் அருப்புக்கோட்டையில் பிரபலமான கைக்கடிகாரக் கடையின் உரிமையாளர் என்றும் மதுரை செல்வதற்காக பேருந்துக்குக் காத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு அந்தக் கடிகாரத்தை வாங்கிப் பார்த்தார். இது ஒரிஜினல் கடிகாரம் என்றும் 1000 ரூபாய் விலை பெறும் என்றும் கூறினார்.

நான் உடனே, மதுரை பஸ் அங்கிட்டு(வேறுபக்கம்) அல்லவா நிற்கும். மேலும் மதுரை செல்லக் காத்துக் கிடக்கத் தேவையில்லையே? நீங்கள் சுமார் அரை மணிநேரமாக இந்தப்பக்கமாகவே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டதுதான் தாமதம் , இருவரும் தலைதெறிக்க ஓட்டம்
பிடித்தனர்.(நமக்கு நன்கு தெரிந்த ஊர்களில் இது போல அடிச்சு ஆடலாம்.:)))) ).

மற்றொரு முறை சென்னை வடபழனியில் பேருந்துக்காக் காத்துக் கொண்டிருந்த போது ஒருவர் தன்னிடம் தங்கம் இருப்பதாகவும் குறைந்த விலைக்குத் தருவதாகவும் கூறினார்.

அப்போது என்னிடம் கையில் ஐம்பது ரூபாய் மட்டுமே இருந்தது.எனவே என்னை எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் அவருடன் ஓரமாக ஒதுங்கினேன். அப்போது மற்றொருவர் தனக்கும் தங்கம் வேண்டும் என்று கூறி என்னுடன் சேர்ந்து கொண்டார்.

அவர் ஒரு பையில் இருந்து ஒரு தங்கக் கட்டியை எடுத்துக் காட்டினார்.உடனே என்னுடன் சேர்ந்து கொண்ட மற்றொருவர் தங்கத்தை வாங்கி உள்ளங்கையில் உரசிப்பார்த்துப் பின்னர் அதனை முகர்ந்து பார்த்தார். உடனே அது சுத்தமான தங்கம் என்று சர்டிபிக்கேட் கொடுத்தார்.

எனக்கோ உரைகல்லில் உரசிப்பார்த்தாலே போலிகளைக் கண்டறிய சிரமமாக உள்ள காலத்தில், உள்ளங்கையில் உரசிப்பார்த்து சொல்வதைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

உடனே, சார் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார், நான் ஐம்பது ரூபாய் இருக்கிறது என்றேன். சார் செயின் மோதிரம் ஏதாவது இருந்தால் நாம் தங்கத்தைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று கேட்டவுடன் எதுவும் இல்லையே என்றேன். கடுப்பாகிப் போய் இருவரும் திட்டிக் கொண்டே சென்றனர்.

ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் அவனை வெறுப்பேற்றுவதிலும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.

Saturday, November 18, 2006

கணிணித் துறையிலும் பரவிவிட்ட ஊழல்!

சென்ற வாரம் கணிபொறி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் தொலைபேசி செய்து, தனக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னார். நான் வாழ்த்துக்களைச் சொன்ன போது , அந்த நிறுவனத்தில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் அலுவலர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்பதாகச் சொன்னார். நான் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும் சில மின்னஞ்சல் முகவரிகள் கொடுத்து மேலதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் கொடுக்கும்மாறு அறிவுறுத்தினேன்.

இதே போன்று எனக்கும் ஒரு அனுபவம் நடந்தது.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்த போது பல நிறுவனங்கலுக்கும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றுள்ளேன்.அப்போது அனுபவம் குறைவாக இருந்தாலும் தொழில் நுட்ப அறிவு அதிகம் இருந்த காரனத்தால் பல நிறுவனங்களில் நான் அதிகச் சம்பளம் கேட்டிருக்கிறேன். எனவே பல இடங்களில் தேர்வாகாமல் சென்றிருக்கிறேன்.

கடந்த 2004 ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிர்லாசாப்ட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் முடிவில் என்னைத் தேர்வு செய்ய அந்த நிறுவனத்தின் HR சேவியர்/ஜோசப் என்னிடம் ரூபாய் 5000 லஞ்சமாகக் கேட்டார். நான் யோசித்து மறுநாள் காலையில் சொல்வதாகச் சொல்லி அந்த இடத்தில் இருந்து நழுவிவேன். மறுநாள் காலை ஒரு திட்டத்துடன் நான் 5000 ரூபாய் செக் தருகிறேன் என்று சொன்னதும் அவர் பயந்து போய் பணமாகக் கொடுக்குமாறு என்று கேட்டுக் கொண்டார். சரி என்று சொல்லி இரண்டு நாட்கள் இழுத்தடித்தேன். பின்னர் நான் அவருக்குப் போன் செய்து பணம் தரமுடியாது திட்டவட்டமாகச் சொன்னதும், மறுநாள் அப்பாயிண்ட் கடிதத்தை தபாலில் அனுப்பி வைத்தார்(ஏன் இப்படிச் செய்தார் என்று எனக்குப் புரியவில்லை).

பின்னர்,இன்னும் ஒரு மாதத்தில் வேலையில் சேர்ந்து கொள்கிறேன் என்று தகவல் சொல்லிவிட்டு, செய்யும் வேலையையும் விட்டு விட்டேன். இருந்தாலும் மனதில் இருந்த ஒரு உறுத்தலின் காரணமாக வேறு ஒரு நிறுவனத்திலும் நேர்முகத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பெங்களூருக்குச் வர முடிவு செய்து விட்டேன். இதற்குள் வேறு யாரோ ஒருவர் மூலம் பிர்லா சாப்ட் நிறுவனத்திற்குத் தகவல் சென்று சேவியர்/ஜோசப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதில் தோல்வி அடைந்து பலர் வேலையில் இருந்து துரத்தப்பட்டனர்.

ஆனால் இப்போது பல இடங்களிலும் இது போல தில்லு முல்லு வேலைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. மிகப் பெரிய நிறுவனங்களில் அதிகாரங்கள் பலரிடம் இருப்பதால் இது போல எளிதில் தவறுகள் நடக்கின்றன. ஒரு HR நினைத்தால், டம்மியாக ஒரு நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு யாரையும் பணியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடக்கின்றன. மேலும் சம்பளம் அதிகம் கிடைப்பதால் லஞ்சம் கொடுப்பதற்கும் யாரும் தயங்குவதும் இல்லை.

திறமையான கணிப்பொறி வல்லுநர்களே தங்களின் வேலைக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள். பிடிபட்டால் வேலை போவதுடன் அடுத்த வேலைக்குச் செல்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன. ஆகவே உஷார்.....

Wednesday, October 18, 2006

வரி நீக்கத்தால் தமிழ் வளர்ந்ததா??

நேற்று பெங்களூரில் என் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் டி.வி.டி வாங்கச் சென்றேன். எம்டன் மகன் என்ற படம் இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ அப்படி ஒரு படமே வரவில்லை என்று சொன்னார்.

என்னடா இது வம்பாப் போச்சு என்று என் நண்பனைத் தொலைபேசியில் அழைத்து "என்னாடா, எம்டன் மகன் படத்துல பரத் படத்துல நல்லா நடிச்சுருக்காருன்னு சொன்னீயே, கடைக்காரர் அப்படி ஒரு படமே வரலன்னு சொல்றார்டா என்றேன்." எம்டன் மகன் படத்தை எம் மகன் என்று தமிழ் வளர்சிக்காக பெயர் மாற்றப்பட்டதையும், அதற்காக திரையுலகினரின் பாராட்டுவிழா என்று குத்தாட்டத்தை தாத்தா கலைஞ்ர் ரசித்ததையும் அதற்குப் போட்டியாக ஜெயா டீ.வி யும் புரட்சித் தலலவியும் குத்தாட்டத்தை ரசித்து பார்த்த மற்றொரு நிகழ்சியை போட்டுக் காட்டியதை சொல்லி அங்கிருந்தபடியே காறித் துப்பினான். நமக்கு எதுக்குப்பா அரசியல் என்று 'எம் மகன்' படத்தை வாங்கிப் பார்த்தேன். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் 'எம்டன் மகன்' 'எம் மகன்' ஆனதால் தமிழ் வளர்ச்சி அடைந்ததா என்று குண்டக்க மண்டக்க நினைத்துப் பார்த்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.

இந்த பெயர் மாற்றத்தால் ஒரு மண்ணாங்கட்டி வளர்சியும் இல்லை. கலைஞருக்கு நல்ல வருமானம் மற்றும் 80+ வயதிலும் இளைஞராக இருந்து நமீதாவின் கவர்சியை ரசிக்க நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.

உண்மையிலெயே தமிழ் மீது கலைஞருக்கு பற்று இருந்திருந்தால் பிற மொழி கலப்பு இல்லாத வசனங்களோடு வரும் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்து இருக்கலாம். ஐந்து ஆண்டுகள் பிற மொழிக்கலப்பு இல்லாத படங்கள் வெளிவந்தால் பல ஆங்கில வார்த்தைகள் சாதாரணப் பேச்சு வழக்கில் இருந்து அழிந்து போகும். தமிழுக்குப் பல புது வார்த்தைகளும் கிடைக்கும்.

இதில் கருவிகளின் பெயர்கள்,அறிவியல் சொற்கள் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக 'வாங்க டாக்டர்' என்பதற்கு 'வாங்க வைத்தியரே' என்று சொல்லலாம். 'டீ.வி யை ஆப் பண்ணு' என்பதை 'தொலைக்காட்சியை நிறுத்து' என்று சொல்லலாம். இப்படிச் சிறிது சிறிதாக தமிழ் சொற்களைப் பழக்கத்தில் கொண்டு வரலாம்.

Wednesday, October 11, 2006

யார் மனதில் யார்? அவங்களுக்கு என்ன பெயர்?

G.S.பிரதீப்... தி கிராண்ட் மாஸ்டர். இவர் பெயர்களின் புதையல்.

உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமானவர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பான செய்திகள் அவர்களைப் பற்றிய தகவல்களையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளார்.
ஆம் நான் சொல்லிக் கொண்டிருப்பது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கிராண்ட் மாஸ்டர் நிகழ்சியைப் பற்றித்தான்.

இது ஒரு மிகவும் அருமையான தொலைக்காட்சி நிகழ்சி.

நிகழ்சியில் கலந்து கொள்பவர்கள் ஒரு பிரபலமானவரை மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். கிராண்ட் மாஸ்டர் உங்களிடம் 21 கேள்விகள் கேட்பார்.
அதற்கு ஆம், இல்லை என பதில் சொல்ல வேண்டும். முடிவில் நம் மனதில் உள்ள அந்தப் பிரபலமானவரை அவர் 99 சதவீதம் சரியாகச் சொல்லி விடுவார்.

கிராண்ட் மாஸ்டரால் கண்டறிய முடியாத பெயர்களை நாம் மனதில் நினைத்திருந்தால் நமக்குப் பரிசு இருபத்து ஐந்தாயிரம், ஐம்பதாயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு.

நான் கடந்த 10 வாரங்களாக நிகழ்சியைப் பார்த்து வருகிறேன். அதில் அவரால் மார்க்கோபோலோ மற்றும் தமிழ்வாணன்(மணிமேகலை பிரசுரம்)ஆகிய பெயர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த விளையாட்டில் நடுவராக மூன்று பேர் அமர்ந்திருப்பார்கள். நிகழ்சியின் ஆரம்பத்தில் நாம் நினைத்திருக்கும் பெயரை அவர்களிடம் ரகசியமாகச் சொல்ல வேண்டும். அவர்கள் அந்தப் பெயரை அனுமதித்தால் நாம் விளையாடலாம். மேலும் நடுவர்கள் நம்முடைய பதில்களை உடனுக்குடன் சரிபார்த்து , நம் பதில் தவறு என்றால் உடனே எச்சரிக்கை செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு நம் அறிவுக்குத் தீனி போடும் நிகழ்சியாகும்.

கடையில் நான் சொல்ல வந்ததைச் சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள். இந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்குபவர் நடிகை காயத்திரி ஜெயராம். வழு வழுப்பாக அழகாக இருக்கிறார்.குரலும் அழகாக வசீகரமாக இருக்கிறது. இது தான் அவருடைய உண்மையான குரலா அல்லது மாற்றிப் பேசி தொகுத்து வழங்குகிறாரா என்று தெரியவில்லை. அருமை.

லண்டனில் நான் இருந்த போது வேறு வழியே இல்லாமல் சன் டீவியில் கோலங்கள், செல்வி போன்ற கொடுமையான தொலைக்காட்சிகளை நிகழ்சிகளை வேறு வழியில்லாமல் பார்த்தேன்.பெங்களூரில் இப்போது அதில் இருந்து எனக்கு விடுதலை.

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டீவியில் தான் அருமையான நிகழ்சிகள் இருக்கின்றன.

யார் மனதில் யார்?, ஹட்ச் கலக்கப் போவது யார்?, தீபாவளி கலாட்டா போன்றவைகள் அருமையாக இருக்கின்றன. இவைகளைப் பார்ப்பதற்காகவே அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சீக்கிரம் கிளம்பி விடுகிறேன்.

Sunday, August 06, 2006

என் ஆசிரியர் - 2

பாகம் 1 - அறிவுச் செல்வன்

நான் பள்ளியில் படித்துக் ஒன்பதாம் வகுப்பு கொண்டிருந்த போது எங்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தவர் எங்கள் பள்ளியின் தாவரவியல் ஆசிரியரான திருமதி ராஜேஸ்வரி அவர்கள்.ஆங்கிலப் பாடம் எடுக்க ஆசிரியர் பற்றாக்குறை வந்ததால் தாவரவியல் ஆசிரியரை ஆங்கில ஆசிரியராக வாரம் ஐந்து மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொல்லியிருந்தார் தலைமை ஆசிரியர்.

உரைநடை, ஆங்கில இலக்கணம் இது போன்ற பாடங்களை அவர் வேறு ஆசிரியர்களின் துணையின்றி இலகுவாக கற்பித்தார். ஆங்கிலச் செய்யுள்களுக்கு வேறு சில ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு வந்து எங்களுக்குப் போதனை செய்தார்.

அவரின் வகுப்புகள் மிகவும் எளிமையாகவும் ஆங்கிலம் என்று பயந்து கொண்டிருந்த எங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதகவும் அமைந்திருந்தன. வகுப்பில் கடைசி மாணவன் கூட ஆங்கிலத்தில் நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள் பெற்றனர்.

ஆங்கில வகுப்பு எடுப்பதற்காகவே தினமும் இரண்டு மணி நேரம் தன்னைத் தயார் செய்து கொள்வார். ஒரு மாணவனின் நிலையில் இருந்து வகுப்பில் என்னன்ன சந்தேகங்கள் வருமோ அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார்.

ஆங்கிலத்தில் சுமாராகப் படிக்கும் எல்லோருக்கும் வகுப்பெடுக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே ஆங்கிலத்தில் வினைச்சொற்கள் அடங்கிய ஒரு லிஸ்ட் கொடுத்து அதன் ஒவ்வொன்றின் அர்த்தமும் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒரு அஸைன்மெண்ட் கொடுத்தார். யாரிடமும் கேட்கக் கூடாது, தெரியாத வார்த்தைகளுக்கு அகராதியில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பது கட்டளை. இந்தப் பயிற்சி எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

அந்த ஆண்டு கல்வி அதிகாரியின் பள்ளிச் சோதனையின் போது எங்களின் ஆங்கில வகுப்பை மட்டும் சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்தார். ஒவ்வொறு மாணவர்களின் ஆங்கில அறிவு, ஆசிரியரின் பாடம் கற்பிக்கும் முறை,ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க எடுத்துக் கொண்ட குறிப்புகள் இவை அனைத்தையும் கண்டு மிகுந்த மகிழ்சியுடன் இந்த வகுப்பறைதான் தான் ஆய்வு செய்த வகுப்புகளிலேயே தன்னை 200 சதவீதம் திருப்தி அடையச் செய்தது என்று குறிப்பிட்டார்.

அன்றிலிருந்து ஒன்பதாம் வகுப்பின் நிரந்தர ஆங்கில ஆசிரியராக மாற்றப்பட்டார். அவரின் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்களால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் மாணவர்க்ளின் தேர்ச்சி விகிதம் அதிகமானது.

என் போன்ற வசதியில்லாத மாணவர்களுக்காக வீட்டில் இலவசமாக டியூசன் எடுத்து ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களைப் பயிற்றுவித்தார். அவரின் கணவர் வேறு ஒரு பள்ளியில் விலங்கியல் ஆசிரியர் என்பதால் கூடுதலாக உயிரியல் பாடங்கள் நன்றாகப் படிக்க முடிந்தது.

தாவரவியல் ஆசிரியர் என்பதால் அவரின் வீட்டுத் தோட்டம் அழகாக இருக்கும். செம்பருத்திச் செடியின் கீழே உள்ள கிளைகளில் இருந்து வரும் பூக்கள் வெள்ளையாகவும், மேலே உள்ள கிளைகளில் இருந்து வரும் பூக்கள் சிவப்பு நிறமாகவும், நடுப்பகுதியில் இருந்து வரும் பூக்கள் இரண்டும் கலந்த நிறமாகவும் இருக்கும். வீட்டில் விதவிதமான போன்சாய் மரங்கள் கண்ணைக் கவரும். போன்சாய் ஆலமரம் விழுதுகளுடன் மிகவும் அருமையாக இருக்கும்.
மீன்கள், பாம்புகள் ஆகியவற்றை வெந்நீரில் போட்டு நன்கு அவியவைத்து அதன் எலும்புகளை மட்டும் உடையாமல் தனியே எடுத்து அதில் பல வண்ணம் பூசி அழகாக வீட்டு ஹாலில் மாட்டிவைத்திருப்பார் விலங்கியல் ஆசிரியர்.

இன்று வெள்ளைக்காரர்களுடன் ஓரளவு உருப்படியாக ஆங்கிலம் பேசமுடிகிறது என்றால் அதற்கு திருமதி. ராஜேஸ்வரி அவர்களும் ஒரு காரணம். அவரின் சேவைகளை நினைத்துப் பார்க்கும் இந்த நேரத்தில் அவரை வணங்குகிறேன்.

Friday, July 28, 2006

மித வேகம் மிக நன்று

நாம் பலமுறை பேருந்துகளில் செல்லும் போது நினைத்திருப்போம் "டிரைவர் வண்டிய உருட்டுராரு".பலபேர் டிரைவரின் காதுபடவே இதனைச் சொல்வார்கள். சில டிரைவர்கள் வீராப்பு கொண்டு வேகமாக வண்டியை ஓட்டுவார்கள்.சிலர் என்னதான் சொன்னாலும் "எருமை மாடு மேலே மழை பெய்த்தது போல ஆடி அசைந்த்து ஓட்டிச் செல்வார்கள்".கடந்த ஆண்டு வரை நம்ம ஊர் பஸ் டிரைவர்கள் பற்றிய என் எண்னமும் இப்படியே இருந்தது.

கடந்த ஆண்டு இந்தியா வந்த பொழுது, பெங்களூரில் இருந்து மதுரை வருவதற்காக பஸ் ஏறினேன். திட்டமிடாத பயணம் என்பதால் வந்த வேலை முடிந்ததும் பஸ்பிடித்து சேலம் வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 1 மணி. சேலம் - மதுரை பயணம். அரசு பஸ் டிரைவரும் கண்டக்டரும் "திண்டுக்கல் மதுரை மட்டும் ஏறிக்குங்க நாமக்கல் கரூர் நிக்காது" என்று சொல்லியவுடன் விரைவாக மதுரை சென்றுவிடலாம் என்று மனம் குதூகலித்தது.

பஸ்ஸின் முன்புறம் டிரைவருக்குப் பக்கத்தில் சீட். வசதியாகத்தான் இருந்தது. சேலம் பஸ்டாண்டை விட்டு வெளியே வந்ததுமே அசுர வேகத்தில் பஸ்ஸை இயக்கினார் டிரைவர். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நேஷனல் ஹைவே - 7ல் சுமார் 100கி.மீ வேகத்தில் பல தடைகளைத் தாண்டி பஸ் பறந்து கொண்டிருந்தது. நாமக்கல் தாண்டி ஒரு இடத்தில் லாரியை ஓவர் டேக் செய்ய வேண்டும். டிரைவர் வேகத்தைக் குறைக்காமல் எதிரே லாரி வருவதைக் கணக்கிட்டு வேகத்தை அதிகப்படுத்தி ஒரு ' H ' கட் அடித்து லாரியை முன்னேறிய போது முன்னே விழித்திருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அரண்டு போய்விட்டேன். ஒரு வினாடி நேரம் பிசகியிருந்தால் பஸ்ஸின் ஒரு பகுதி சின்னா பின்னமாகியிருக்கும். அப்போதுதான் நான் சுதாரித்து, இது சாதாரணமாக வேகமாக ஓட்டும் டிரைவரின் செயல் அல்ல என்று எனக்கு உரைத்தது. கொஞ்ச நேரத்தில் யாரோ ஒரு கரூர் டிக்கட் டிரைவருக்குத் தெரியாமல் ஏறி அமர்ந்திருக்கிறார்.

"டிரைவர் சார் என்னை கரூர் விலக்கு ரோட்டில் இறக்கி விட்டு விடுங்கள்" என்று சொன்னதுதான் தாமதம்டிரைவருக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. "ஏன்யா என் உயிரை வாங்குறீங்க?" என்று வசவு செய்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

"சார் இவனுங்க தொல்லை தாங்க முடியல சார்" என்று என்னைப் பார்த்துக் கூறினார்,"நைட் நேரம். நிறுத்தித்தான் போகலாமே சார்?" என்றேன் நான்."நான் தூங்கி கிட்டத்தட்ட 36 மணி நேரம் ஆகிவிட்டது தெரியுமா சார்" என்றார் டிரைவர்.

தூக்கி வாரிப் போட்டது எனக்கு.

"ஆமாம் சார் டிரைவர் பற்றாக்குறை என்று அடிக்கடி ஓவர் டியூட்டி போட்டுடுராங்க சார். என்னால கண்ணை முழிச்சுப் பார்க்க முடியல சார். கண்ணெல்லாம் எரியுது"

"மெதுவாகப் போனால் தூங்கிவிடுவேன். அதனால் தான் வெறியுடன் வண்டியை விரட்டுரேன்"

"சீக்கிரம் மதுரை போய்விட்டால் தூங்கிவிடலாம்" என்றார் டிரைவர்.

"புலம்பாம வண்டியை ஓட்டுய்யா" என்று சொல்லிவிட்டு கண்டக்டர் தலையச் சாய்த்து விட்டார்.

என்ன விபரீதம் இது. அரசு நிர்வாகம் டிரைவர்களுக்கு ஓவர் டியூட்டி கொடுத்து பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதே என்று ஆத்திரம் வந்தது. அதற்குள் என் பக்கதில் இருந்த பெரியவர் விழித்துக் கொண்டு விட்டார். டிரைவர் சார் அருகில் ஏதாவது டீக்கடை வந்தால் நிறுத்துங்க, டீ சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்றார். சிறிது தூரத்தில் ஒரு டீக்கடை வந்தது. டிரைவருக்கு நல்ல ஸ்டிராங்காக இரண்டு டீ சொன்னோம்.

நன்றாக முகத்தைக் கழுவிவிட்டு சிறுது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். நெடுந்தூரப் பயண ஓட்டுநர்களுக்கு நல்ல ரெஸ்ட் வேணும் சார், இல்லேண்ணா, தூக்கத்தில் வண்டி பள்ளத்தில் இறங்கிவிடும் என்றார். எங்க கஷ்டத்தை யாரும் புர்ந்துகிட மாட்டேங்கிறாங்க சார். எனக்கு 20 வருட அனுபவம் அதனால் சமாளிக்கிறேன். சின்னப் பசங்க என்றால் இந்நேரம் அந்த லாரியில் வண்டியை நுழைத்திருப்பாங்க என்றார்.

உங்களுக்கு ஓவர் டியூட்டி ஏன் போடறாங்க? வண்டிய எடுக்க முடியாதுன்னு மேனேஜரிடம் சொல்லலாமே என்றேன்.

பேன் காத்துலேயும், ஏசியிலேயும் உக்கார்ந்து வேலை செய்றவங்களுக்கு எங்க கஷ்டம் புரியாது. நாங்களும் முடியாதுன்னு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னா வேற ஏதாவது விசயத்தில கோர்த்து விட்டுப் பழிவாங்கிடுவான் அந்த ஆள், என்றார். மேலும் அரசு டிரைவர்கள் பற்றாக்குறை மற்றும் திருவிழாக்காலங்களில் விடப்படும் சிறப்புப் பேருந்துகளால் ஏற்படும் பணிச்சுமை இது போல பல காரணங்கள் இருக்கிறது என்றார்.

தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களிலும் சில நேரம் டியூட்டி போட்டுவிட்டால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட முடியாது. இது போன்ற நாட்களில் எங்களுக்கு அலவன்ஸ் கிடைத்தாலும் அது குடும்பதினருடன் செலவிட நினைக்கும் சந்தோசத்திற்கு இணையாகாது பணம்.

இது போல தூக்கத்தைக் கட்டுப்படுத்ததான் டிரைவர்கள் சிகரெட், பான்பராக் போன்ற பழக்கத்தை ஆரம்பிக்கிறாங்க. பிற்காலத்தில் அதற்கு அடிமையாகி உடல் நலம் கெட்டு பாதிக்கப்படுறாங்க என்றார்.

சார் எங்களுக்கும் குழந்தைகள் குடும்பம் எல்லாம் இருக்கு. உங்களுக்கெல்லாம் வேலைக்குப் போனால் மாலையில் வீடு திரும்பலாம் என்ற உத்திரவாதம் இருக்கு. ஆனால் எங்களுக்கு இல்லை.

நாங்க தவறு செய்தாலோ, இல்லை எதிரே வருகிறவன் தவறு செய்தாலோ, மெக்கானிக் தவறு செய்தாலோ எங்கள் உயிருக்குத்தான் ஆபத்து என்றார். அவரின் தொழில் பற்றிய கருத்துகள் முற்றிலும் நியாயமானவையே.

உண்மையிலேயே சொல்லப் போனால் நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்ங்கதான் ரூல்ஸ் பாலோ பண்ணி வண்டி ஓட்டுவாங்க. அவங்க வேகம் எப்போதுமே 50கி.மீ தாண்டாது. வண்டியும் கண்டிஷனாக இருக்கும். மேலும் எல்லா இடத்துலேயும் பொறுமையாக செயல்படுவாங்க. ஆனா நாங்க அப்படியில்லை. எங்களுக்கு நேரம் முக்கியம். அதனால் தான் அவசரப்பட்டு வேகமாக ஓட்டி சில நேரங்களில் விபத்துக்குக் காரணமாகிவிடுகிறது என்றார்.

எங்களுக்கும் நல்ல ஓய்வு, தினமும் 8 மணிநேரம் வேலை, நல்ல கண்டிஷனில் வண்டிகள் அப்படீன்னு இருந்தா எங்கலாலேயும் விபத்துகள் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்.

வண்டி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நுழைந்த பொழுது காலை 6.30 மணி. டிரைவர் சார் வாங்க டீ அடிக்கலாம் என்று அழைத்தேன். அவர் சிரித்துக் கொண்டே என்னுடன் சேர்ந்து ஒரு டீ குடித்து விட்டு நட்புடன் விடை பெற்றார். ராமநாதபுரம் செல்ல இன்னும் மூன்று மணி நேரப் பயணத்தை நினைத்து அலுப்பாக வந்தது எனக்கு.

Saturday, July 22, 2006

குழந்தையின் மேல் வன்முறை





இரண்டொரு நாட்கள் முன்பு சில சாமான்கள் வாங்குவதற்காகத் தமிழ்கடைக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்தக் கடையில் ஒரு அழகான இரண்டு வயதுக் குழந்தையும் அப்பாவும் கடையில் ஏதோ பொருளைத் தேடிக் கொண்டிருந்தனர். அழகான குழந்தை அவ்வப்போது என்னைப் பார்த்துச் சிரித்தது. நானும் முகபாவனைகள் மூலம் சில விளையாட்டுகாட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் குழந்தை அழும் சப்தம் கேட்டது. நான் எட்டிப் பார்த்த போது அந்த அப்பா குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். ஒரு கணம் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.(ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிப்பது குற்றம். இதற்குச் சிறைத் தண்டனையோ அல்லதுமனநோய் மருத்துவரிம் ஒரு கலந்துரையாடலோ அரசால் ஏற்படுத்தப்படும்.) அந்தக் குழந்தை கடையில் அடுக்கி வைத்திருந்த சில பொருட்களைத் தள்ளி விட்டுவிட்டு விட்டது என்பதற்காக அந்தத் தந்தை குழந்தையை அடித்திருந்தார்.

குழந்தைகளின் மீது பெற்றோர் வன்முறை காட்டுவது என்பது ஒரு தவறான செயல். அது அவர்களின் ஆழ்மனதில் உள்ள சில சைக்கோத் தனமான எண்ணங்களால் அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டு வடுகிறது. அதற்குக் காரணம் பின்வருவனவற்றில் எதுவாகவும் இருக்கலாம்.

1. மனைவியைப் பிடிக்காத கணவர்கள் குழந்தைகள் மீது காட்டும் வன்முறை.(அதற்குக் குழந்தை என்னங்க செய்யும். பாவம்)

2. பணியால் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால், அதனை அடக்க முடியாமல் சில நேரங்களில் குறைந்த ஆற்றல் உள்ளவர்களிடம் பீறிட்டு வெளிவருவது. (மன அழுத்தம் என்றால் என்ன என்பதும் கூட தெரியாமல் அதனால் அவஸ்தைப்படுவர்கள் அதிகம்)

3. தன்னுடைய குழந்தையின் செயல்களை/கல்வித் திறனை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் போல இல்லையே என்ற ஒரு வித ஈகோ மனப்பான்மையால் ஏறபடுவது.(தன்னுடைய குழந்தைக்கு என்ன ஆர்வம் என்று கண்டுபிடித்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை)

4. உண்மையிலேயே ஒரு நல்ல காரணத்திற்காக வன்முறை காட்டுவது. (உதாரணமாக, எனக்கு ஐந்து வயதிருக்கும் போது 'முண்டை' என்ற சொல என் பேச்சில் அடிக்கடி வரும். என் அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததால் விறகுக் கட்டை உடையும் வரை அடி வாங்கியது. அதன் பின்னர் அது போன்ற சொற்களைச் சொல்வதற்கு இன்றும் பயம்)

ஆக இதில் பெரும்பாலான தவறுகள் பெற்றோரிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் செய்யும் செயல்களை ரசிப்பது நம்மை மேலும் இளமையான மனநிலையில் வைத்திருக்கும். இன்றைய குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் நேற்று நாம் செய்ததின் தொடர்சியாக நினைத்து பாருங்கள், உங்களுக்குச் சிரிப்பு வரும்.

நான் மேலே சொன்ன நிகழ்ச்சி தொடர்ந்து சில முறைகள் நடந்தால் குழந்தையின் பிற்கால நடவடிக்கை எப்படி இருக்கும்? எந்த ஒரு பொருளையும் எடுப்பதற்கு யோசிக்கும். அதனால் அதில் என்ன இருக்கிறது என்ற ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் குறைந்துவிடும். அதன் தொடர்சியாக பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் ஒரு வழியிலான சிந்தனைகளே அந்தக் குழந்தையிடம் இருக்கும்.எதனையும் மாற்றுக் கோணத்தில்(Lateral thinking) ஆராயும் குணமும் குறைந்து விடும். அதுவே இந்தப் போட்டி நிறைந்த உலகில் பின் தேக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இன்றைய வலைப்பூ வாசகர்கள், படைப்பாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதில் சிறுவர்மலர், அம்புலிமாமா, கலைக்கதிர் போன்ற இதழ்களை விரும்பிப் படிப்பவர்களாக இருந்திருப்பார்கள். அதன் தொடர்சியாகவே இன்று நல்ல வாசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் விளங்குகிறீர்கள். பத்து வயதில் என்ன எப்போதும் கதைப் புத்தகம்? என்று பெற்றோர்களால் தடுக்கப்பட்டிருந்தீர்கள் என்றால் வாசிக்கும் தன்மைகுறைந்தவர்களாகவே இன்றும் இருந்திருப்பீர்கள்.

எனவே குழந்தைகளை அவர்கள் உலகிற்குச் சென்று ரசியுங்கள். அன்பால் சொல்லி நல்ல வழியைக் காட்டுங்கள். நாளைய நல்ல மனிதர்களை உருவாக்குவது இன்றைய பெற்றோர்களின் கையில்.

Sunday, July 16, 2006

லண்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

டிரிங்.. டிரிங்..
..
"சொல்லுங்க அண்ணே..."
"மகேந்ரா எப்ப வர்ற.."
"இன்னக்கி மதியம் ஒரு மூணு மணியில இருந்து நாலுக்குள்ள வந்துடுறேன்."
"சரி அப்படியே மதன் வந்துருக்கானுல்ல அவனையும் கூட்டிட்டு வந்துரு."
"சரிண்ணே."

இது எனக்கு JK என நான் அழைக்கும் நம்ம ஜெயக்குமாருடன் என்னுடைய உரையாடல், நேற்று ஞாயிறு காலை 11 மணிக்கு

JK வீட்டிற்குள் நுழையும் போது 4.30 மணி.
வீட்டிற்குள் நுழையும் போதே, "எண்ணணே இன்னக்கி நண்டுக் குழம்பா.." என்று கேட்டுக்கொண்டே நுழைந்தேன்.
"இல்லப்பா, உங்களுக்காக prawn பிரியாணி."

அப்படியா ன்னு கேட்டுக் கொண்டே வீட்டில் அவரது குழந்தையுடன் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு
prawn பிரியாணியும், ஆட்டு ஈரல் வறுவலையும் ஒரு பிடி பிடித்தேன்.

அப்படியே தமிழ்மணத்தின் லேட்டஸ்ட் நிலவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

"ஏண்ணே இப்ப எழுதுறத விட்டுட்டீங்க?"
"இல்லப்பா, என் குழந்தையுடன் விளையாடுவதற்கே நேரம் சரியா இருக்கு.
எழுதனும்.. ஒரு ஆறு மாதம் ஒரு வருசம் கழிச்சு" என்றார் JK.

அப்புறம் செல்வி, கோலங்கள் போன்ற சீரியல்களில் என்ன கதை இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுக் கொண்டேன்.

அப்போது சன் நியூஸில் முத்தையா முரளிதரன் நிருபர்களுக்கு விமான நிலைய வாசலில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தது ஒளிபரப்பானது.

நம்ம லக்கிலுக்கை ரெம்ப விசாரித்தார்.

கொஞ்ச நேரம் கழித்து "அப்படியே நைட் சாப்பாடும் சாப்டுட்டுப் போயிருங்க" என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
"வந்த நோக்கத்தை கரக்டாக கண்டு பிடிச்சுட்டீங்க போல.." அப்டீன்னு கொஞ்சம் காமெடி பண்ணிவிட்டு...

அவசர வெளி வேலைகள் இருப்பதால் போய்ட்டு வர்றேன் என்று விடை பெற்றோம்.

இப்படியாக லண்டனில் ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இனிதே நிறைவேறியது.


பின் குறிப்பு : JK எனக்கு 1998 ம் ஆண்டில் இருந்து தெரியும். அவர் எனக்கு கல்லூரியில் 2 வருடம் சீனியர்.

Saturday, July 15, 2006

அனுபவம் - மிக்சர் - 1

நான் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்த போது எங்கள் கல்லூரியில் பி,ஈ மாணவர்களுக்கும் மாணவிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை வந்து விட்டது. வேறெ ஒன்னுமில்லீங்க, நம்ம பசங்க வேலி தாண்டிட்டாங்க. சும்மா, வேலியத் தாண்டி லேடிஸ் ஹாஸ்டலுக்குள்ள போயி மாட்டிக்கிட்டாங்க.

ரெம்ப நாளா இதெல்லாம் ஒரு பிரச்சனையின்னு காலேஜே ரெம்பக் கலங்கிப் போயி இருந்துச்சு.

அப்பத்தான் cultural program நடத்துறக்குப் பிரின்ஸி கூப்டாரு. எப்படியாவது பொண்னுங்களைப் பழி வாங்கிடனும்மா மச்சிகளானுட்டு பசங்களெல்லாம் கிளம்பிட்டாங்க.

cultural programல் கடைசி நாள் பாட்டுக் கச்சேரி. ஒரு பையனும் பொண்ணும் பாட்டு படிகிறாங்க. அது தான் இப்ப நீங்க கேட்டுக்கிட்டு இருகிற பாட்டு.

இந்தப் பாட்டை ஒரு போட்டிக்காக பையனும் பொண்ணும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதாக நினைத்துக் கொண்டு கேளுங்கள்.

"திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடான்னு" பசங்க ஆரம்பிக்க
.......
"எங்கூருப் பொண்ணுகள மோப்பமிட வந்தவனை எங்க சீயான் மூக்கறுத்தாக.." ன்னு பொண்னு படிக்க பிள்ளைகலெல்லாம் ஒரு ஆட்டம் ஆடி பின்னெயெடுத்துட்டாங்க.

"நாங்க குளிச்சு அனுப்பி விட்ட கொறட்டாத்துத் தண்ணியில் ஏண்டியம்மா கறி சமைச்சீங்க" ன்னு பையன் பாட

லேடீஸ் ஹாஸ்லகுக்கு தண்ணீர் பசங்க ஹாஸ்டலில் இருந்து தான் போய்க்கிட்டு இருந்தத நினைச்சு ஒரு ஆட்டம் போட்டோம் பாருங்க.

"அட களவானிக் கோத்திரமே காளமாட்டு .த்திரமே" ன்னு படிக்க விசிலு பின்னி பெடலெடுத்துட்த்துட்டோம்.

இனையத்துல இந்தப் பாட்டைக் கேட்டதும் பழைய நினைவெல்லாம் வந்துட்டுதுங்க.


சூடு தணிய!!

இப்போது இங்கே நல்ல கோடை காலமாக இருப்பதால் சூடு தணிய சில யோசனைகள். தமிழ்மணம் படித்துவிட்டும் சாப்பிடலாம்.

1. தினமும் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் கண்ணை மூடிக்கொண்டு கசப்பை மறந்து மென்று தின்று விடவும்.

2.கால்கரி சிவா சொன்னபடி ஜிகர்தண்டா செய்து பருகிவந்தால் சூடு உடணே தணியும்.

3.சின்ன வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டு நன்று மென்று விழுங்கவும்.

இது தாங்க சூடு பிடித்துக் கொண்டால் நான் செய்யும் வைத்தியம். நீங்களும் தமிழ்மணம் படித்து விட்டுச் செய்து பாருங்கள். உடல் உடனே குளிர்ச்சியடையும்.

அப்படியே சித்த வைத்தியத்திற்கான கட்டணதை paypal மூலம் செலுத்திவிடவும்.

Sunday, July 02, 2006

பூவும் புஸ்தகமும்

---------------------------------------------------------
இந்தச் சிறுகதை தேன்கூடு ஜூலை மாத சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
--------------------------------------------------------

"அம்மா.. "

"என்னடா செல்லம்?"

"அப்பா இன்னக்கி எனக்குப் புஸ்தகம் எல்லாம் வாங்கிட்டு வருவாராம்மா?"
"கட்டாயம் வாங்கிட்டு வருவாருப்பா. அப்பா இன்னைக்கி சவாரி எல்லாம் முடிச்சிட்டு வரும் போது உனக்குப் புத்தகம் உனக்குப் பிடிச்ச பூந்தி எல்லாம் வாங்கிட்டு வருவார்."
"இப்ப நீ நல்ல பிள்ளையா இத சாப்பிடுவியாம் அப்புறம் அம்மா உனக்கு ஒரு கதை சொல்லுவேன். கதை கேட்டுக்கிட்டே நல்ல பிள்ளையாகத் தூங்கிடனும் சரியா."

"சரிம்மா."

ராம், இவன் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவன். அப்பா ஆட்டோ ஓட்டுநர் நடராஜ். அவரின் சொற்ப வருமானத்திலேயே குடும்பம் நடக்கிறது.

"ஆட்டோ... சீக்கிரம் சென்ட்ரல் போகனும் இன்னும் அரைமணி நேரத்தில கல்கத்தா டிரெயின் புறப்பட்ரும். உடனே போகனும் வர்றீயா?"

"போயிரலாம் சார்..அரைமணி நேரம் இருக்குல்ல. ஏதாவது போட்டுக் கொடுங்க சார். "

"நீ மட்டும் சரியான நேரத்துக் போயிட்டீன்னா மீட்டருக்கு மேலே ஐம்பது ரூபாய் தர்ரேன்."

சார் நீங்க சீக்கிரம் ஏறுங்க. நடராஜுக்கு இன்று மகனுக்கு புத்தகமும் பூந்தியும் வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

ஆட்டோவை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நடராஜ். பல ஸ்கூட்டர், பைக் ஓட்டும் நடுத்தர மக்களிடம் சாவுகிராக்கி போன்ற வசவுகளைக் கேட்டுக் கொண்டே முன்னேறிச் செல்ல ஆரம்பித்தார்.

அங்கே ஒரு திருப்பதில் எதிரே வந்த பைக் மீது மோதுவதைத் தவிர்க்க எண்ணி வண்டியைத் திருப்பும் போது வண்டி குடை சாய்ந்து தலையில் அடிபட்டு நடராஜ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

"அம்மா.. இன்னைக்கி எனக்குப் புதுப் புத்தகம் வாங்கனும்மா. "

"அப்பா நாளைக்கு வாங்கித் தர்றேன்ன்னு சொல்லியிருக்காருப்பா."

"சரிம்மா டீச்சர் இந்த வாரத்துக்குள்ள எல்லோரும் புத்தகம் வாங்கிடனும்னு சொல்லியிருக்காங்கம்மா. "

"அப்பா கண்டிப்பா வாங்கிக் கொடுத்துவிடுவார். கவலைப்படாதே.நீ இப்பத் தூங்கு ராஜேஷ்,"

ராமும் ராஜேசும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரின் வீடும் பக்கக்த்துப் பக்கதில் தான்.

நடராஜின் உடல் அன்று இரவே வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. பலத்த அலறல், அழுகை, கண்ணீர் அந்தத் தெருவையே நனைத்தது. பலருக்கும் நடராஜ் நண்பர்.
அந்தத் தெருவில் உள்ள குழந்தைகளை பள்ளியில் கொண்டு சென்று விடுபவரும் அவரே. பல குழந்தைகளுக்கு என்ன என்று சொல்லிப் புரிய வைக்க முடியாத நிகழ்வு அது.

மறுநாள்,

"ராம், உங்க அப்பாவுக்கு என்னடா ஆச்சு? "

"அவர் இறந்துட்டாருடா. "

"அப்படீன்னா அவர் திரும்பி வரமாட்டாராடா? "

"இல்லடா அவர் இருபது வருசம் கழிச்சு சாமிகிட்ட இருந்து திரும்பி வந்துடுவாருன்னு எங்க அம்மா சொன்னாங்க."

"எங்க தாத்தா கூட செத்துப் போயிட்டாருடா. அவரும் சாமிகிட்டப் போயிட்டுத் திரும்ப்பி வந்துட்டாருடா" என்றான் ராஜேஷ்

அடுத்த வாரம் ராஜேஸ் அம்மாவிடம் சொன்னான்

"இன்னைக்கி புத்தகம் இல்லாதவங்க எல்லோரையும் டீச்சர் கை தூக்கச் சொன்னாங்கமா"

"அப்படியா? உனக்குத்தான் புத்தகம் இருக்குதே"

"ஆனா ராம் கை தூக்குனாம்மா. அப்புறம் டீச்சர் என்னுடைய புத்தகத்தை ராமையும் சேர்ந்து வாசிக்கச் சொன்னாங்கம்மா."

"அப்படியா, சரி நீ போய் தூங்கு ராஜேஸ்."

"சரிம்மா."

ஏங்க கண் கலங்குறீங்க என்று ராஜேஸின் அம்மா ராஜேஸின் அப்பாவிடம் கேட்டார்.

"தெருமுனையில இருக்கிற என்னோட பூக்கடையில தான் அன்னைக்கு நடராஜிக்குப் போட எல்லோரும் மாலை வாங்குனாங்க. அந்தப் பணத்துல தான் நான் நம்ம ராஜேஸுக்குப் புத்தகம் வாங்கினேன், இப்ப அத நினைச்சுத்தான் நான் கண்கலங்கினேன்" என்றார் ராஜேஸின் அப்பா.

Sunday, June 25, 2006

உலகம் இவ்ளோ சின்னதா?

லண்டனில் நானும் என் நண்பர் ராஜேஸும் தனியாக வாடகைக்கு வீடு பார்த்துத் தங்க முடிவு செய்து கடந்த வாரம் புதிய வீட்டிற்குக் குடியேறினோம். கல்யாணம் ஆகாத(ஆயினும்) பிரம்மச்சாரிகள் நான்கு பேர்கள் சேர்ந்து தங்கினால்தான் வீட்டு வாடகை கட்டுபடியாகும். எனவே வேறு நண்பர்களைத் தேடினோம்.

ராஜேஸின் நண்பரின் நண்பர் லண்டன் வருவதாகச் சொன்னதும் அவரையும் வீட்டின் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டோம். கடந்த ஒரு வாரம் சேர்ந்து தங்கினாலும் வேலைப் பளு காரணமாக புதிய நண்பரைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை. இந்த வாரயிருதி விடுமுறையில் அவரைப் பற்றிக் கேட்டதும் எனக்கு எழுந்த கேள்விதான் 'உலகம் இவ்ளோ சின்னதா?'

புதிய நண்பர் சந்தோஷ் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1997-2000 MCA படித்தவர்(ன்)(அவரே வாடா போடா நீ வா போ என்று சொல்ல உரிமை கொடுத்து விட்டார்). நான் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி 1998-2001 MCA படித்தவன். பல்கலைக்கழகமும் பொறியியல் கல்லூரியும் ஒரே சாலையில் தான் அமைந்துள்ளது.

எனக்குப் பல்கலைக்கழகத்தில் பல நண்பர்கள் உண்டு. என்னுடைய நண்பர்கள் பலர் அவருக்கும் நண்பர்கள். என்னுடைய B.Sc சீனியர் மாணவர் அவருக்கு MCA வகுப்புத் தோழர் என்று இருவருக்குப் பொதுவாகப் பல நண்பர்கள். அவரின் MCA ஜுனியர் மாணவர்கள் எனக்கு நண்பர்கள். பேசிக் கொண்டே போகும் போது, உங்களுக்கு இவரைத் தெரியுமா? அவரைத் தெரியுமா? என்று கேட்கக் கேட்க ஒரே ஆச்சயர்யம் பலரையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார், அல்லது நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.

ஆக ஒரு புதிய நண்பரும் அவரின் மூலம் பல பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இப்பச் சொல்லுங்கள் உலகம் இவ்ளோ சின்னது தானே?

Friday, June 16, 2006

தில்லுமுல்லு தில்லுமுல்லு-நீங்களும் சாமியார் ஆகலாம்-1



சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் டீவியில் மேஜிக் நிபுனர்கள் எப்படி மேஜிக் செய்கின்றனர் என்று அவர்களின் பின் முகத்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பும், மேஜிக் செய்பவர்களிடம் எதிர்ப்பும் கிடைத்தது நினைவிருக்கலாம்.

நம் முத்து தமிழினி சாய்பாபாவின் முகத்தை உரித்துக் காட்டினார். நான் சில சாமியார்களின் சித்து வேலைகள் சிலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். முடிந்தால் நீங்களும் சாமியார் ஆகி கோடி கோடியாகச் சம்பாதித்து அனுபவங்களை வலைப்பதியலாம்.

சில சாமியார்களிடம் போகும்போது அவர் நம்முடைய விபரங்களை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தால் அவர் அதில் இருந்து ஒவ்வொரு சீட்டாக எடுப்பார். அந்தச் சீட்டைப் பிரித்துப் படிக்காமலேயே அவர்கள் எழுதிக் கொடுத்த குறிப்பை ஞான திருஷ்டியால் படித்துக் கூறுவார், இது எப்படிச் சாத்தியம்? அவர் சரியான விளக்கங்களைச் சரியாகச் சொன்னதும் பணக்காரர்கள் பணத்தை அவரிடம் அள்ளிக் கொட்டுவார்கள். இந்த வித்தை மிகச் சுலபம் உங்களுக்கு வேகமாகப் படிக்கும் திறனும், ஞாபக சக்தியும் அதிகம் இருந்தால்.

சரி இப்போது வித்தைக்கு வருவோம்.

தேவையானவைகள்
1. உங்களின் ஞாபகசக்தி,
2. நம்பிக்கையான மூன்று சிஷ்யர்கள்
3. ஒரு பெரிய தாம்பாளத் தட்டு
3. பூக்கள் பக்தர்களின் காதுகளின் வசதிக்கேற்ப.
5. நல்ல பழங்கள்(கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கும் பக்தனுக்கு ஒரு வாழைப் பழமாவது கொடுக்க வேண்டாமா?)

சாமியார் ஒரு அறையிலும் பக்தர்கள் மற்றொரு அறையிலும், சுவாமிகளின் பூஜை முடிவதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களுடன் சாமியார்களின் வேஷம் போட்ட இரண்டு சீடர்களும் பாலோடு கலந்த தண்ணீர் போல ஒன்னுமே தெரியாதது போல பவ்யமாக இருக்க வேண்டும்.

மற்றொரு சீடர் அவர்களிடம் இருந்து குறிப்புகள் எழுதிய சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். சுவாமிகள் பூஜையை முடித்தவுடன் அனைவரும் மொத்தமாக சுவாமிகளின் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். மூன்றாவது சீடர் குறிப்புகள் எழுதிய சீட்டுகளை சுவாமிகளின் முன்னால் பவ்யமாக வைக்க வேண்டும்.

இப்போது சுவாமிகள்(அட நீங்க தாங்க) பிடித்த கடவுளை வணங்கி விட்டு முதலில் ஒரு சீட்டை எடுத்து ஞானதிருஷ்டியால் உங்களின் முதல் 'ஆமாம் சாமி' சீடரின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். சீட்டைப் பிரிக்காமலேயே அவரின் விபரங்களை புட்டுப் புட்டு(சாப்பிடுற புட்டு இல்லீங்க) வைக்க வேண்டும். கடைசியாக சீட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு நிமிடம் அவருடன் பேசிக் கொண்டே சீட்டில் எழுதியிருக்கும் குறிப்புகளைப் படித்து ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தச் சீட்டு அங்கு அமர்ந்திருக்கும் யாருடைய சீட்டாகவாவது இருக்கலாம். பின்னர் பின்னால் நிற்கும் மூன்றாவது சீடரிடம் கொடுத்துவிட வேண்டும்.

சிறிது நேரக் கழித்து மூன்றாவது சீடர் மூலம் அடுத்த சீட்டை எடுத்துத்தரச் சொல்ல வேண்டும். சீட்டைப் பிரிகாமலேயே முதல் சீடர் எடுத்துக் கொடுத்த சீட்டின் விபரங்களை வைத்துக் கொண்டு அடுத்த பக்தரை அழைக்க வேண்டும். ஞாபகத்தில் உள்ள விபரங்களின் முலம் குறி சொல்லிக் கொண்டே அவர் எடுத்துக் கொடுத்த சீட்டைப் பிரித்துப் படிக்க வேண்டும்.அவரை அனுப்பி விட்டு அடுத்த சீட்டை எடுக்க வேண்டும். இப்படியே தொடந்து நீங்கள் களைப்படையும் வரை நாள் முழுவதும் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

இடையில் முந்தய சீட்டின் விபரங்கள் மறந்து விட்டால் கூட்டத்தில் இருக்கவே இருகிறார் உங்களின் இரண்டாவது சீடர். அவரை அழைத்து விளையாட்டைத் தொடருங்கள். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து திறமையை வளர்த்துக் கொண்டு திறமையாகப் பெரிய அளவில் செய்யலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.

எனக்கு நீங்கள் சம்பாதித்த பணத்தில் ராயல்டி மட்டும் கொஞ்சம் கொடுதால் போதும். :))

அடுத்த சித்து இன்னும் சில நாட்களில். stay tuned...

Monday, June 12, 2006

நானும் 8 ம் நம்பரும்

8
நம்ம ஞானியாருக்கு மட்டும் தான் நம்பர்கள் ஆச்சர்யம் கொடுக்குமா என்ன?. எனக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 8 என்ற என் என்னைத் தொடர்ந்து வருகிறது. தவிர்க்க நினைத்தாலும் அது தான் கடைசியில் அமைகிறது.

நான் வீட்டில் இருந்து தனியே வந்து 11 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது முதல் நான் தங்கியிருக்கும் அறை மற்றும் வீடுகளின் எண்கள் அல்லது அவற்றின் கூட்டுத் தொகை எட்டு என்றே வருகின்றது.

நான் B.Sc முதலாண்டு படிக்கும் போது விடுதியில் நான் தங்கியிருந்த அறை எண் - 8.
நான் B.Sc இரண்டாம் படிக்கும் போது நான் தங்கியிருந்த அறை எண் - 48.

நான் B.Sc மூன்றாம் படிக்கும் போது நான் தங்கியிருந்த அறை எண் - 9 அதாவது அந்த விடுதியில்(என் கல்லூரியில் நான்கு விடுதிகள் உள்ளன) அதில் எட்டாம் அறை வார்டனுக்கானது. அந்த அறையின் நேர் மேலே உள்ள அறை தான் 9.

MCA படித்த போது என் விடுதி அறையின் எண் 308. மூன்று ஆண்டுகளும் ஒரே அறையில் தான் இருந்தேன்.

நான் சென்னையில் இருந்த போது என் மேன்சன் அறையின் எண் 17. கூட்டுத்தொகை எட்டு.

லண்டனில் முதலில் நான் தங்கியிருந்த வீட்டின் எண்ணும் எட்டு. இப்போது தங்கியிருக்கும் வீட்டின் எண் 107. அடுத்த வாரம் நான் மாறப் போகும் வீட்டின் என் 86. இதிலும் 8 வருகிறது.

இப்படியாக நான் தங்கியிந்த/யிருக்கின்ற இடத்தில் எல்லாம் எட்டு என்ற என் துரத்திக் கொண்டே வருகிறது. என்ன காரணமாக இருக்கும்?

Saturday, June 10, 2006

இனியெல்லாம் சுகமே

ஏதாவது ஒரு பதிவு போடனும், எனக்கு ஏத்த மாதிரி விஷயம் கிடைக்காததால் நான் தினசரி ஒரு முறையாவது கேட்கும் பாடலை நம் மக்களுடன் பகிந்து கொள்கிறேன். அந்தப் பாடல் அவள் அப்படித்தான் என்ற திரைப் படத்திலிருந்து "உறவுகள் தொடர்கதை. உணர்வுகள் சிறுகதை". நானும் எத்தனையோ பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை இது என் உயிரை உருக்குகிறது.

பாடலின் வரிகளும் அதன் அர்த்தமும் அதன் பின்னனி இசையும் குரலும் இனைந்து ஒரு மேஜிக் உண்டாகிறது.

நான் இன்னும் அந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லையென்றாலும் காதலனும் காதலியும் இணையும் போது உள்ள சூழ்நிலையில் படமாக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

பாடலுக்கு இசை அமைத்தவர் யார், படத்தில் நடித்தவர்கள் யார் யார் போன்ற மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

இனி அந்தப் பாடலை என்னுடைய தளதில் இருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்

---
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்.
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே


வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே

--
இப்போது ஒரு காற்று என்னை வந்து தழுவிச் சென்றது போல உணர்கிறேன்.

Thursday, May 25, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 7

இரண்டாம் நம்பர் காய்கறிகள். பழைய உருளைக்கிழங்கு, உடைந்த தக்காளி, முற்றிய முருங்கைக்காய்,பூச்சி விழுந்த கத்தரிக்காய் இன்னபிற காய்கறிகள் தான் இரண்டாம் நம்பர் காய்கள். யார் இவைகளை வாங்குவார்கள்? அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஹோட்டல்காரர்கள். ஆமாம் மக்களே, பெரும்பாலான சிறிய ஹோட்டல்களில் இன்றைய நிலைமை இதுதான். நாங்களும் பல ஹோட்டல்களுக்கு இது போன்ற காய்களை சப்ளை செய்கிறோம். கேட்கலாம் எங்களுக்கு மனசாட்சி இல்லையா? இருக்கிறதய்யா. நாங்கள் விற்காவிட்டால் வேறு கடைகளில் வாங்கிக் கொள்ளப்போகிறார்கள். வருகிற வரைக்கும் வரட்டும் என்றே விற்பனை செய்கின்றோம்.

என் சித்தி ஊருக்குச் செல்லும் போதெல்லாம் நானும் என் சித்தப்பாவும் ஹோட்டலில் தான் சாப்பிடுவோம். அந்த நாட்களில் மட்டும் அந்தக் குறிப்பிட்ட ஹோட்டலுக்கு மட்டும் நல்ல காய்கறிகளை இரண்டாம் நம்பர் காய்கறிகளின் விலைக்கே அனுப்புவோம். ஹோட்டல்காரரும் நாங்கள் சாப்பிட வருவதைத் தெரிந்து கொண்டு ஸ்பெசல் சாப்பாடு தருவார். என்ன செய்றதுங்க சுயநலம் தான். நான் எப்போதும் நல்லவன் என்று சொல்லிப் புனித பிம்பமாக விரும்பவில்லை. ஹோட்டல்காரர்கள் கேட்டால் நல்ல காய்கறிகள் தரத் தயாராவே இருக்கிறோம். இது போன்று தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லையெனில் அவர்களால் அளவுச் சாப்பாடு 15 ரூபாய்க்குத் தரமுடியாது. கோடம்பாக்கம் டாடா உடுப்பி ஹோட்டலில்லேயே இது தான் நிலைமை(ஒரு முறை நான் வண்டியில் இருந்து காய்களை இறக்கும் போது பார்த்து விட்டேன்). இருந்தாலும் காரக் குழம்பின் சுவைக்காக மூன்று வருடங்களில் பலமுறை அங்குதான் இரவுச் சாப்பாடு சாப்பிட்டேன். :)))

பிரியாணி ஐந்து ரூபாய்க்குத் தருவதானால், காக்கா பிரியாணிதான் தரமுடியும். காக்கா பிரியாணி சாப்ட்டா காக்கா குரல் வராம உன்னிக் கிருஷ்ணன் குரலா வரும்.

எனவே மக்களே, சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடுவதைத்த் தவிருங்கள்.

Tuesday, May 23, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 6


காய்கறிக்கடையில் சில்லறை விற்பனை செய்வது கொஞ்சம் சிரமம் தான். மொத்த வியாபாரம் என்றால் வியாபாரிகள் வேணும் காய்கறிகளை எழுதிக் கொடுத்து விடுவார்கள். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் கேட்ட காய்கறிகளை எடை போட்டுக் கொடுத்துவிடுவோம். ஆனால் சில்லறை வியாபாரத்தில் நம் பெண்மணிகளுடன் தினம் தினம் போராட்டம் தான். இந்த வியாபாரத்தில் பீக் ஹவர்ஸ் காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரையும் மாலை 7 மணிமுதல் 9மணி வரையிலும். காலை 9.30 மணி முதல் 12.30 வரை வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளும், மாலை 7 மணிமுதல் 9மணி வரையில் அலுவலகம் செல்லும் பெண்களும் அதிகம் வருவார்கள். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இங்கு கணக்குப் பார்த்து காசு வாங்கிப் போடுவதும் அனுபவம் இல்லையெனில் சிரமம் தான். கூட்டம் அதிகமான நேரங்களில் யார் யாருக்கு என்னென்னெ காய்கள் கொடுத்தோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் சிரமம் தான். பெரும்பாலும் அவர்களையே என்னென்ன காய்கள் வாங்கினீர்கள் என்று கேட்டுத்தான் பணத்தைக் கணக்கிடுவோம். அவர்கள் பெரும்பாலும் 99% ஏமாற்ற மாட்டார்கள். ஏமாற்ற நினைத்து மாற்றிச் சொல்ல ஆரம்பித்தால் தடுமாற ஆரம்பித்து விடுவார்கள். அதனை வைத்தே நாங்கள் உஷாராகி கொஞ்சம் அழுத்திக் கேட்க ஆரம்பித்தால் சரியாகச் சொல்லிவிடுவார்கள்.

கணக்கீடு செய்வதும் மனக்கணக்குதான். அவர்கள் வாங்கிய காய்கறியின் அளவைச் சொல்லச் சொல்ல உடனே கூட்டிக் காசை வசூலிப்போம்.
கத்தரிக்காய் கால் கிலோ - 2.50
தக்காளி 100 - 1.25
காரட் 100 - 2.00
பச்ச மிளகாய் 1.00
உடனே கூட்டி 6.75 என அடுத்த 3 நொடிகளில் சொல்லி மீதப் பணம் அடுத்த 5-10 வினாடிகளில் கொடுத்து அடுத்த வாடிக்கையாளரைப் பார்க்க வேண்டும். இந்தக் கணக்கையெல்லாம் அனுபவித்துச் செய்தால் சோர்வு வராது. வெகு சில நேரங்களில் கூட்டுதல் தவறாகி ஒரு ரூபாய்/இரண்டு ரூபாய் கூடவோ குறையவோ ஆகலாம். யாராவது வந்து திருப்பிக் கேட்டால் மறுபேச்சு இல்லாமல் திருப்பிக் கொடுத்து விடுவோம். குறைவாகக் கண்க்கீடு செய்திருந்தால் யாரும் காசைத் திருப்பித் தர வரமாட்டார்கள். இது தானே உலக நியதி.

மேலும் பெண்கள் தேவையான எல்லாக் காய்களையும் மொத்தமாக எடைபோட எடுத்து வரமாட்டார்கள். ஒவ்வொன்றாகவே போய் எடுத்துவருவார்கள். சரியாகக் கணக்கு வைத்துக் கொள்ள அதுவும் எங்களுக்குச் சிரமம் தான். பல பெண்கள் காய்கறிகடைக்கு வந்துதான் என்ன சமையல் செய்யலாம் என யோசனை செய்வார்கள்(என்னக்கிதான் முன் யோசனையுடன் செய்தார்கள் என்கிறீர்களா?? :)) ). சிலரோ அடுப்பில் பருப்பு கொதிக்குது சீக்கிரம் காய்கறி தாங்க என்று காலில் வெந்நீரை ஊற்றியது போல பரபரப்பாக வந்து நிற்பார்கள், அவர்க்களையும் வேகமாகக் கவனித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சில ஆண்களும்/குழந்தைகளும் கடைக்கு வருவார்கள். ஆண்களுக்கு எடை போட்டுக் கொடுக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருந்து அழுகிய/பூச்சி விழுந்த காய்கறிகளையோ எடுத்து வந்திருந்தால் அவற்றை எடுத்துப் போட்டுவிடுவோம். இல்லையெனில் அடுத்த பத்தாவது நிமிடம், விவரம் தெரியாதவரை(??!!) ஏமாற்றி விட்டதாக அவரின் வீட்டுக்காரம்மா சண்டைக்கு வந்து விடுவார். சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

குழந்தைகள் வந்தால் நாங்களே நல்ல காய்கறிகளாகப் போட்டு அனுப்புவோம். எடையும் சற்று அதிகமாகவே போடுவோம். இல்லையெனில் சிறு குழந்தைகளை எடையில் ஏமாற்றி விட்டார்கள் என்ற அவச்சொல் எங்களுக்கு வரும். குழந்தைதைகளிடம் சிறு பிரச்சினை என்னவெனில் மீதக் காசைக் கொடுத்து அனுப்புவது தான். சில சமயங்களில் தவற விட்டு விட்டார்களெனில் சில சமையங்களில் தாய்மார்கள் நாங்கள் தான் ஏமாற்றி விட்டதாகச் சண்டைக்கு வருவார்கள். விளக்கமாகச் சொல்லிச் சமாளிக்க வேண்டும் நேர விரயமாகும். எங்களை நன்கு புரிந்து கொண்டவர்கள் அடுத்த முறை பெரியவர்கள் கடக்கு வரும்போது காசு தருவதாகச் சொல்லி அனுப்புவார்கள். நாங்களும் கேட்கும் பொருட்களைக் கொடுத்து அனுப்புவோம்.

அடுத்த பதிவு இரண்டாம் நம்பர் காய்கறிகள் பற்றி..

Saturday, May 20, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 5




காய்கறிக்கடையில் என் சித்தப்பாவின் நிர்வாகத் திறமையை இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து ஒரு அரசையே கவிழ்த்தது பலருக்கு நினைவிருக்கலாம். அந்தச் சூழ்நிலையில் வெங்காய வியாபாரம் செய்வதே சிரமமாக இருந்தது. ஒரே நாளில் 10 முறை விலை மாற்றம் ஏற்பட்டது. ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு நாள் வெங்காயம் கிலோ 27 ரூபாய் விலை இருந்தது. அப்போது ஒரு விவசாயி 300கிலோ வெங்காயத்துடன் விற்பனைக்கு வந்தார். நான் சித்தப்பாவிடம் 22 ரூபாய்க்கு வாங்கி 27 ரூபாய்க்கு விற்று விடலாம் என்று கூறினேன். உடனே லேசாக்ச் சிரித்து விட்டு அந்த விவசாயியை மதுரைக்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்தார்.

அன்று இரவு காரணம் கேட்ட போது, தற்போதய நிலவரத்தில் 300 கிலோ வெங்காயம் விற்க ஒரு வாரம் ஆகும். இன்னும் மூன்று நாளில் வெங்காயம் விலை 10 ரூபாய்க்கு வரும் என்று ஆருடம் கூறினார். எனக்கோ அச்சர்யம். அது எப்படிச் சரியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்ட போது இன்னும் மூன்று நாட்களுக்குள் மழை பெய்யும் என்றும், அப்படி மழை பெய்தால் ஏற்படும் காலநிலை மாற்றத்தில் சில பெரிய வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கும் வெங்காயம் அழுக ஆரம்பிக்கும். உடனே அவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வரும் போது விலை சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது விளக்கம் கொடுத்தார்.

அவர் சொன்னபடியே மூன்றாவது நாள் மதுரையைச் சுற்றிய பகுதிகளில் நல்ல மழை. வெங்காயமும் விலை குறைந்தது. இந்திய அரசாங்கமும் ஈரானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவெடுத்திருப்பதாகச் சொன்னதும் விலை குறைந்ததற்குக் காரணம் ஆனது. அது சரி எப்படி மழை பெய்யும் என்பதைக் கணிப்பது? அவர் சொன்ன இரண்டு வழிமுறைகள். 1. தட்டான்கள்(தும்பி) தாழ்வாகப் பறந்து செல்வது மற்றும் தெளிவான வானத்தில் நிலாவைச் சுற்றி நெருக்கமான வட்டங்கள் ஏற்படுவது.

மற்றொருமுறை ஒரு வெங்காய விவசாயி வந்து சாம்பிள் வெங்காயம் காண்பித்து , இது போன்ற வெங்காயம் தன்னிடம் 500 கிலோவிற்கு இருப்பதாகவும் என்ன விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள் என்றும் கேட்டார். நாங்கள் அதனை ஒரு கிலோ ரூபாய் 5.50க்கு வாங்கிக் கொள்வதாக ஒத்துக் கொண்டோம். அவர் அடுத்த நாள் சுமார் ஒரு டன் வெங்காயத்தை மாட்டுவண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்துவிட்டார். அனைத்தும் கடை வாசலில் இறக்கி வைக்கப்பட்டது. உடனே சித்தப்பா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அனைத்து வெங்கயத்தையும் ஒன்றாகக் கலந்துவிட்டு பின்னர் எடை போடலாம் என்று சொன்னார். அதற்கு அந்த விவசாயி ஒத்துக் கொள்ளவில்லை.என் சித்தப்பாவோ விடவில்லை. ஒன்றாகக் கலந்து எடை போடுவது என்றால் வாங்கிக் கொள்கிறேன் இல்லையென்றால் திருப்பி எடுத்துச் செல்லலாம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

அப்போது அந்த விவசாயி பாதி மூட்டைகள் வெங்காயத்தை மட்டும் எடை போட்டுக் கொண்டு மீதியை வேறு இடத்தில் விற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். சரி என்று சொல்லி வாங்கிக் கொண்டோம். நானோ என்ன நடக்கிறது எனப் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்த்து அவரே சொன்னார். அந்த விவசாயி தன்னிடம் உள்ள வெங்காயம் போக தன் பக்கத்துத் தோட்டத்தில் விளைந்த சற்றுத் தரம் குறைந்த வெங்காயத்தையும் ரூபாய்5.50கு விற்று விடலாம் என வண்டியில் ஏற்றிக் கொண்டுவந்துவிட்டார். முதல் மூட்டையைப் பிரித்துக் காண்பித்த போது முந்தய நாள் சாம்பிள் காட்டிய அதே வெங்காயம். அந்த மூட்டைகள் அனைத்தும் அடையாளத்திற்காகச் சணலில் கட்டப்பட்டிருந்தன. பக்கத்துத் தோட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மூட்டைகள் எல்லாம் அடையாளத்திற்காகத் துணியால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு மூட்டையாக எடை போடும் போது யாருடைய வெங்காயம் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். ஆனால் ஒன்றாகக் கலந்து எடை போடும் போது யாருடைய வெங்காயம் எவ்வளவு என்பது தெரியாமல் போய்விடும். இதனைத் தடுக்கவே கலந்து எடை போடுவது என்ற உத்தியைப் பயன்படுத்தி அந்தப் பிராடுத்னத்தைக் முறியடித்தார். நான் வியந்தது என்னவெனில் ஒரு கணப் பார்வையிலேயே இவை அனைத்தையும் கணித்து, அதைத் தடுக்க முடிவெடுத்த வேகத்தையும் நினைத்துத்தான். சுமாவா, அவருக்கு 40 ஆண்டுகள் காய்கறி வியாபாரத்தில் அனுபவம் உள்ளதே.

காய்கறி விற்பனையிலும் நாள் நேரம் எல்லாம் பார்க்க வெண்டும். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காரட்,முள்ளங்கி, முருங்கைக்காய் போன்ற காய்கள் மற்ற நாட்களை விட மூன்று மடங்மு அதிகமாக விற்பனையாகும். ஏனெனில் வெள்ளிக் கிழமையன்றுதான் சாம்பார், காய்கறிகள் என் சுத்த சைவமாக இருக்கும். எனவே அந்த நாட்களை அனுசரித்து மொத்தமாக காய்கள் வாங்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அடுத்த பகுதியில்.

Friday, May 19, 2006

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய ஏகாதிபத்தியம்

நான் முந்தய பதிவு ஒன்றில் நம்முடைய நாட்டின் சில்லறை வர்த்தகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுவது எவ்வளவு ஆபத்தானது என்று சொல்லியிருந்தேன். அதனை உறுதிப்படுத்துவது போல ஜெயக்குமார் அவர்களின் பதிவும் அமைந்துள்ளது. அதற்கு மேலும் பன்னானாட்டு நிறுவனம் ஒன்றின் செயல்பாட்டினை கடந்த இரு மாதங்களாக கவனித்து வருகின்றேன்.
என்னுடைய அலுவலகத்தின் அருகே டெஸ்கோ இருக்கிறது. அங்குதான் கடந்த ஒரு வருடமாக மதிய உணவு வாங்குவது வழக்கம். அங்கு பணிபுரியும் பணியாளர்களில் சிலர் நன்கு பழக்கமாகி விட்டனர். கடந்த இருமாதமாக கடையில் பல மாற்றங்கள். சுமார் நாற்பது பணியாளர்கள் பில் போடும் பணியில் இருந்தார்கள். தற்போது 30 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் புதிதாக 20 automatic checkout பாயிண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அனைவரும் automatic checkoutக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இங்குதான் அவர்களின் தந்திரம். அந்தக் கடையில் நிரந்தர வாடிக்கையாளர்களே அதிகம். அவர்களுக்கு automatic checkout உபயோகிக்கப் பழக்கப் படுத்தப்படுகின்றனர். இன்னும் சில மாதங்களில் இந்த automatic checkout மிஷின்கள் அதிகப்படுத்தப்பட்டு பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப் படுவார்கள். இப்பொழுதே பெரும்பாலான பணியாளர்கள் வேலை போய்விடும் என்ற பயத்தில் உள்ளனர்.

நான் சொல்ல வருவது என்னவெனில் தங்களின் சொந்த நாட்டுப் பணியாளர்களின் மீதே இரக்கம் காட்டாமல், லாபத்திற்காக வேலையை விட்டுத் துரத்துகின்ற நிறுவனம் தான் இந்தியாவிலும் தங்களின் கிளையை நிறுவ அனுமதி கேட்டு நிற்கிறது. நம் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்தப்படும் என்று சொல்லி வாசலைத் தட்டி நிற்கிறது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நம் நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சி தன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல வந்து நிற்கிறது. டெஸ்கோவின் கடந்த ஆண்டு லாபம் 2.2 பில்லியன் பவுண்டுகள். அதனை 3 பில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்பது அதன் குறிக்கோள். அதற்குத்தான் இந்த இயந்திர மயமாக்கம், பணிநீக்கம் எல்லாம்.

என் தாய்நாட்டை ஒரு வளர்ந்த நாடாகப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. இது போன்ற நிறுவனங்களை அனுமதித்து அதில் மண்ணைப் போட்டு விடாதீர்கள் அரசியலவாதிகளே.

திராவிடமும் நானும்

தேர்தல் முடிந்து விட்டது எனவே தமிழ்மணத்திலேயும் சூடு குறைந்திருக்கும் எனச் சில நாட்கள் தமிழ்மணத்திற்கு வருகை தராமல் இருந்தேன்.
சில முக்கியமான நிகழ்சிகள் வேகமாக நடந்துள்ளன.
முதலாவது :
நம்ம விஜயகாந்த் போல புதிதாக திராவிடத் தமிழர்கள் இயக்கம் ஆரம்பித்து முத்து & கோ வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். மகிழ்ச்சி.திராவிடன்(ம்) என்ற வார்த்தையை சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்தவன். ஆனாலும் இதுவரை அதற்குச் சரியான அர்த்தம் எது என்று தேடியதில்லை.எனக்குத் தெரிந்தவரை திராவிடத் தமிழர்கள் என்றால் என்றால் பூர்வீகத் தமிழர்கள் என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கின்றேன்.நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆசை. உங்கள் குழு அது குறித்து சில பதிவுகள் வெளியிடும் என நம்புகிறேன்.மேலும் என்னைப் பொருத்தவரை இலங்கைத் தமிழர்களும் திராவிடர்கள் என்பதில் அடக்கம். அது குறித்து தங்களின் குழுவின் கொள்கைகள் என்ன என்று விளக்குங்கள். நான் இந்தியன் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பவன். ஆனால் விடுதலைப் புலிகளை அல்ல.

இரண்டாவது :
நம்ம போலி முதல் முறையாக நேரடியாக மாயவரத்தானிடம் பிடிபட்டது. நான் போலியைத் தடுக்கத் தயாரித்து வரும் மென்பொருளின் முதல் பகுதி என்னிடம் சோதனையில் உள்ளது. என்னுடைய வலைப்பதிவில் பின்னூட்டம் இடுபவர்களிம் ip-address களைச் சேகரிக்கிறேன். அதில் அநாகரிகப் பின்னூட்டம் வந்தால் அந்த ip-adderess களை மட்டும் குறித்துக் கொண்டு மற்றவற்றை அழித்து விடுவேன். என்னுடைய பின்னூட்டச் சாளரத்தில் (ஜன்னல் என்பது போர்துகீசிய வார்த்தையாக்கும்) நீங்கள் ஜோதிகாவை ஒரு பார்வை நீங்கள் பார்த்து முடிப்பதற்குள் உங்களின் ip-address ம், மற்றும் அப்போதய நேரமும் எனக்கு வந்துவிடும். பின்னர் பின்னூட்டச் சாளரம் திறந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்குத் தகவல் வரும். இது முதல் கட்டம். மென்பொருளின் இரண்டாவது கட்டமும் என்னுடைய நண்பரின் வேறு ஒரு வலைத் தளத்தில் சோதனையில் உள்ளது. இவை இரண்டையும் இணைக்கும் போது நல்ல மென்பொருள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

இன்று இரவு என் காய்கறிக் கடையின் அடுத்த பகுதியை எழுதிவிட்டு உங்களைச் சந்திக்கிறேன்.

Sunday, May 07, 2006

நெசவாளர்கள்->கஞ்சித்தொட்டி<-வணிகர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி திறந்தும் அதற்கு எதிர்ப்பாக பிரியாணி வழங்கி ஒரு அரசியல் கட்சி நம்முடைய மானத்தை வாங்கியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

நெசவுத் தொழிலுக்கு என்று பல நவீன ஆலைகள் வந்துவிட்டன். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் செய்யும் வேலையை இயந்திரங்கள் செய்துவிடுகின்றன அதுவும் மிகுந்த தரத்துடன். இந்தக் காரணம் நாம் பள்ளியிலேயே படித்ததுதான். இந்தத் தொழிற்புரட்சியில் நம்முடைய நெசவாளர்கள் வருகின்ற விபரீத்ததை உணர்ந்து வேறு சில தொழில்களைக் கற்று தொழிலை மாற்றியிருக்க வேண்டும். எல்லோருமே குறைந்த செலவில் தான் எதையும் வாங்க விருப்புவார்கள். இயந்திரப் புரட்சி அதற்குத் துணை போய்விட்டது. இது தவிர்க்க முடியாதது தான்.

1950களில் இந்தியாவில் இயந்திர நெசவுக்கூடங்கள் நிறுவப்பட்ட போது நிலைமையை உணர்ந்து வேறு சில தொழில்களுக்கு மாறியிருக்க வேண்டும். சமீபத்தில் நெசவாளர் ஒருவரின் பேட்டியைக் கண்ட போது, தாங்கள் ஆறு தலைமுறைகளாக நெசவுத் தொழில்செய்து வருவதாகவும் தங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்றும் கூறினார். அவரின் மகன்களும் அதே தொழிலில் இருப்பதாகவும் மிகவும் கஷ்டப் படுவதாகவும் கூறியவுடன் அவர் மீது என்க்குக் கோபம் வந்தது. ஆரம்ப காலம் முதல் ஒரே வேலையை எந்த வித மாற்றமும் இல்லாமல் செய்து வந்தால் எப்படி முன்னேறுவது? நெசவுத் தொழிலில் சிரமம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே தெரியவந்தது. அதை உணர்ந்து அவரின் பிள்ளைகளை வேறு தொழில்களுக்கு மாற்றியிருந்தால் நிலைமை இவ்வளவு தீவிரமாக இருந்திருக்காது.

இது பற்றிய விழிப்புணர்ச்சியை அரசாவது செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களுக்கு மானியம், அரசே கைத்தறித் துணிகளை வாங்குவது போன்ற தற்காலிக நடவடிக்கைகளை எடுத்து தற்போது நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன். இங்கு வணிகர்கள் எங்கு வருகிறார்கள்?

சில்லரை வணிகத்தில் வால்மார்ட், டெஸ்கொ போன்ற நிறுவனங்கள் அனுமதிகோரி மன்மோகன் சிங் அரசை அனுகியிருக்கிறது. அரசு அனுமதித்தால் வணிகர்கள் 10 ஆண்டுகளில் தெருவுக்கு வருவதைத் தடுக்க முடியாது. வால்மார்ட், டெஸ்கொ போன்ற நிறுவனங்கள் பல வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று சொல்வார்கள். ஆம் அவைகள் பல தொழிலாளர்களை உருவாக்கும். முதலாளிகளை அல்ல. முதலாளிகளே அரசுக்கு வரி செலுத்துபவர்கள். டெஸ்கோ போன்ற நிறுவனங்களும் வரி செலுத்தும், ஆனால் லாபத்தை இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்லும். அது மிகவும் ஆபத்தானது. நம்முடைய வணிகர்கள் வரி ஏய்ப்புச் செய்தாலும் பணம் நம்முடைய நாட்டை விட்டு வெளியே செல்லாது. விதிகள்/சட்டங்கள் கடுமையாக்கப் பட்டால் வரி ஏய்ப்பைத் தடுத்து விட முடியும். ஆனால் அவர்களை உள்ளே விட்டால் கூடாரத்தினுள் ஒட்டகத்தை விட்ட கதை தான்.கூடாரம்/நம்முடைய நாடு சாயாமல் இராது.

இதற்குச் சிறந்த உதாரணமாக பெப்ஸி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவு காரணமாக நம்ம ஊர் மாப்பிள்ளை விநாயகர், கோல்ட் ஸ்பாட் போன்ற நிறுவனங்கள் மறைந்து விட்டன. மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடாவின் சுவையை பெப்ஸி, கோக் போன்றவற்றில் காணமுடியுமா?

அப்போது நம்முடைய சிறு மற்றும் குறு வணிகர்களுக்கும் கஞ்சித் தொட்டி வைக்க வேண்டிய நிலை வரும்.
வணிகர்களே நீங்களும் குடும்பத் தொழில் என்று உங்களின் வாரிசுகளை ஒரே விதமான வணிகத்திலேயே ஈடுபடுத்துகிறீர்கள். தொலைநோக்கில் இது மிகவும் ஆபத்தானது.

நம்முடைய அரசின் சில செயல்பாடுகள் புரிந்து கொள்ள முடியாதபடி உள்ளன. ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை முன்னெற்ற குடும்பத்தலைவி செலவுகளைக் குறைக்கிறார். பக்க வருமானத்தைப் பெருக்க வழியேதும் உள்ளதா எனப் பார்ப்பார். பொதுவாக தன்னுடைய குடும்பத்தின் பணம் வெளியே போகாமல் பார்த்துக் கொள்வார். சாதாரணப் படிப்பு படித்த பெண்ணிற்குச் தெரிந்த இந்தச் சிறிய அடிப்படை கூடத் தெரியாமல் அந்நிய நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடுகிறார்கள்.

உங்களில் பல பேர் கேட்கலாம், பல இந்திய இளைஞர்கள் அமெரிக்கா/ஐரோப்பிய நாடுகளில் வேலை பார்த்துப் பணம் சம்பாதிக்கிறார்கள், எனவே அந்நாட்டு நிறுவனத்தை நம் நாட்டில் அனுமதிப்பது தானே தர்மம்/நியாயம் என்று. மக்களே தர்மம் நியாயம் பார்த்தால் நம்முடைய நாட்டை முன்னேற்ற முடியாது. தர்மம் நியாயம் பார்த்தா நம்முடைய நாட்டை 300 ஆண்டுகள் சுரண்டினார்கள்?

லண்டனில் ஜிகர்தண்டா

கால்கரி சிவா அவர்களின் பதிவைப் பார்த்து ஜிகர்தண்டா செய்து பருகிவிடுவது என்று ஒருவித ஆர்வத்துடன் கடல்பாசியையும், நன்னாரி சர்பத்தையும் தேடி அலையத் தெடங்கினேன். நான் வாடிக்கையாக வாங்கும் ஸ்ரீலங்கன் தமிழ்கடையில் கடல்பாசியும், சர்பத்தும் கிடைக்கவில்லை.
இன்று முடிதிருத்த அல்பர்டான் சென்ற போது ஈலிங் ரோட்டில் உள்ள கணபதி ஸ்டோரில் கடல்பாசி கிடைத்தது. அங்கேயே நன்னாரி சர்பத்தையும் தேடி கடைகடையாக அலையத் தொடங்கினேன். இன்னும் கிடைத்த பாடில்லை. நேரம் கிடைக்காததால் ஈஸ்ட்ஹாம் பகுதிகளுக்குச் சென்று விசாரிக்க முடியவில்லை. ஈஸ்ட்ஹாம் அன்பர்கள் சுவாதி ஸ்டோர்சில் நன்னாரி சர்பத் குறித்து விசாரித்துச் சொல்லவும்.
இருப்பினும் நன்னாரி சர்பத்துக்குப் பதில் ரோஜா எசன்ஸ் சேர்த்த சர்பத் கிடைத்துள்ளது. அது வைத்து இன்னும் 6 மணி நேரத்தில் ஜிகர்தண்டா தயாராகிவிடும். யாராவது வந்தால் அவர்களுக்கும் ஜிகர்தண்டா வழங்கி சோதனை செய்யப்படும் :))).

காய்கறிக்கடை அனுபவங்கள் - 4

காய்கறி மொத்த வியாபாரம் கொஞ்சம் எளிதானது என்றேன். தேவைக்கேற்ப மொத்தமாக வாங்கி சிறிது லாபம் வைத்து விற்று விடலாம். மொத்தமாக விற்பதற்கு ஏற்ப சில்லறை வியாபாரிகளைப் பிடிக்கவேண்டும். அவர்கள் கடனுக்குத்தான் வாங்கிச் செல்வார்கள். அன்றன்றைக்கு மாலையோ அல்லது வாரம் ஒரு முறையோ பணத்தைச் செலுத்துவார்கள். மொத்த வியாபாரிகளிடமும் நாங்களும் கடனுக்குத்தான் வாங்கியிருப்போம். வாரம் ஒருமுறை பணத்தை வந்து வாங்கிச் செல்வார்கள்.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை வாங்கி விற்பது கொஞ்சம் வேறுமாதிரியானது. விவசாயிகள் எங்களிடம் விவசாயத்திற்குத் தேவையான பணத்தைக் கடனாக வாங்கிச் செல்வார்கள். அவர்கள் விளை பொருட்களை வேறு எந்த வியாபாரிகளிடம் கடன் தீரும் வரை விற்பனை செய்யக்கூடாது என்பது எழுதப்படாத ஒப்பந்தம். அதற்காக விவசாயிகளிடம் காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம் என்பது அர்த்தமல்ல. அன்றைய மார்க்கெட் விலைக்கு பொருட்களை வாங்கிக் கொள்வோம். கொடுத்த பணத்திற்கு வட்டியில்லாம் கிடையாது. இதுதான் எங்கள் கடையின் பாலிசி. வேறு சில கடைகளில் பணத்திற்கு வட்டி போட்டு அதற்கும் காய்கறிகள் தரவேண்டும் எனக் கூறுவார்கள். காய்கறிகளை விற்றுக் கடனை அடைத்து விற்றால் வேறு யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். பெரும்பாலும் வேறு யாரிடமும் செல்ல மாட்டார்கள், ஏனெனில் வேறு எங்கு சென்றாலும் மார்க்கெட் விலைக்கே வாங்குவார்கள், அதற்குப் பதில் எங்களிடமே விற்று விடுவார்கள்.

விவசாயிகளிடம் இருந்து பெரும்பாலும் கத்தரி, தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய், கறிவேப்பிலை போன்ற காய்கறிகளே வரும். கத்தரிக்காய் வந்தவுடன் அதிலிருந்து பூச்சி விழுந்த சூத்தைக் காய்கறிகளைப் பிரித்து எடுத்து நல்ல கத்தரிகாய்க்கு ஒருவிலையும், சூத்தைக் காய்க்கு ஒரு விலையும் வைத்து வாங்கப்படும். சூத்தைக் காய்களை மாடுகளுக்கு உணவாக வாங்கிச் செல்வார்கள். தக்காளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்க வேண்டும். நல்ல தக்காளிகள், உடைந்த தக்காளிகள், அளவில் சிறிய தக்காளிகள் மற்றும் சூத்தைக் தக்காளிகள் என்று.

எல்லா விவசாயிகளுடனும் எனக்கு நல்ல பழக்கமும் , நல்ல வியாபார உறவும் இருந்தது அந்தக் கறிவேப்பிலை வியாபாரியைத் தவிர. எங்கள் வீட்டில் வளர்ப்பதற்காக ஒரு கறிவேப்பிலை மரக்கன்று தருமாறு அவரிடம் கேட்டேன். அவர் இல்லையென்று சொல்லியிருந்தாலோ, பிறகு தருகிறேன் என்று சொல்லியிருந்தாலோ புரிந்து கொண்டிந்திருப்பேன். அவர் நேரடியாக, நான் கறிவேப்பிலைக் கன்று தந்து, சில ஆண்டுகளில் மரம் பெரிதாகிவிட்டால் தன்னுடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்று நேரடியாகக் கூறவும் எனக்கு ஒரு வித தர்மசங்கடமாகிவிட்டது. ஆனால் வேறு ஒரு கத்தரிக்காய் விவசாயி மறுநாள் கறிவேப்பிலைக் இரண்டு கன்றுகளைத் தந்தார். அவைகள் இன்று தளதளவென வளர்ந்து நிற்கின்றன.




படத்தில் இந்தியாவில் எங்கள் வீட்டு மாமரமும், அதன் பின்னால் கறிவேப்பிலை, வாழை மற்றும் சப்போட்டா பழ மரங்களும்.

இன்னும் வரும்...

Thursday, May 04, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 3

மளிகைக் கடையில் வேலை பார்த்தது என் பள்ளி விடுமுறை நாட்களில். நான் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்து முதுகலைப் பட்டப்படிபிற்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்த 3 மாதங்களில் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமமும் இல்லாத டவுனும் இல்லாத ஊரான திருச்சுழியில் என் சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போதெல்லாம் வெட்டி ஆபீசரான நான் காலை 10 மணிக்குத்தான் எழுந்திருப்பது வழக்கம். பார்த்தார் என் சித்தப்பா. இப்படியே விட்டால் சோம்பேறிப் பயலாப் போயிருவான்னு நினைத்து என் சித்தியிடம் சொல்லிக் கடைக்கு வரும்படி உத்தரவு வந்தது. முதல் நாள் கொஞ்சம் வெறுப்புடனே கடைக்குச் சென்றேன்.

எங்கள் கடை மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்யப்படும் கடை.
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் குளுமையான இடத்தில் தான் எங்கள் கடை அமைந்திருந்தது. சுற்றுப்பட்டு விவசாயிகள் தங்கள் காய்கறிகளை எங்கள் கடையில் வந்து விற்று விட்டுச் செல்வார்கள். அருப்புக்கோட்டையில் வாங்கப்படும் விலையில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி அருப்புக்கோட்டை, நரிக்குடி, மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி போன்ற ஊர்களில் உள்ள வியாபாரிகளுக்கு பேருந்துகளில் காய்கறிகளை மொத்தமாக அனுப்புவார். சுற்றுப்பட்டு கிராம மக்கள் எங்கள் கடையில் வந்து அனைத்து காய்கறிகளையும் புத்தம் புதிதாக நியாயமான விலையில் வாங்கிச் செல்வார்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக என் சித்தப்பா 15 வயதில் இருந்து வியாபாரம் செய்து வருகிறார். விசயத்திற்கு வருவோம்.

என்னை முதலில் மொத்த வியாபாரப் பகுதியில் வேலை செய்யச் சொன்னார். சுமார் 20 கிலோ முதல் 60 கிலோ வரையிலான எடையைத் தூக்க வேண்டும். முதல் 5 நாட்கள் உடல்வலி பின்னியெடுத்துவிட்டது. பின்னர் பழகிவிட்டது.

அந்தக் கடைக்கும் எனக்கும் ஒரு ராசியுள்ளது. எப்போது கடைக்கு விடுமுறையில் வந்தாலும் என்னிடம் ரத்தப்பலி வாங்காமல் விடாது. தராசு முள் கையில் குத்தி ரத்தம் வரும். அல்லது படிக்கல் காலில் விழுந்து ரத்தம் வரும் அல்லது முட்டைக்கோஸ் வெட்டும் போது கையையும் சேர்த்து வெட்டி ரத்தம் வரும். எப்படியாவது ரத்தம் வரும்படியான காயமாகிவிடும். ஒரு முறை கடைக்குள் எலி ஒன்று ஓடியது. அதைக் கண்டவுடன் முட்டைக் கோஸ் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்தேன். அது எலியின் மீது சரியாக விழுந்தது. எலி செத்துப் போயிருக்கும் என முட்டைக்கோஸை எடுத்த போது கையில் எலி கடித்து ரத்தக் காயமாகிவிட்டது. இப்போது கடைக்குப் போனாலும் ஏதாவது ஒன்று நடந்து விடுகிறது.

காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபமானது. தக்காளி விலை ரூபாய் 20 இருக்கும் போது தக்காளி விவசாயத்தை ஆரம்பிப்பார். தை மாதத்தில் தக்காளி விளைந்து வரும்போது கிலோ ரூபாய் 2 க்கு விற்பனையாகும். அவர்கள் மாட்டுவண்டி முழுவதும் 150 கிலோ தக்காளி கொண்டுவந்து, வெறும் 300 ரூபாய்க்கு விற்றுச் செல்வார்கள். பெருத்த நஷ்டம் அவர்களுக்கு. நாங்களும் இது போன்ற சூழ்நிலையில் 2 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சீசன் இல்லாத நேரங்களில் தக்காளி ஆண்டிப்பட்டியில் இருந்தும், கத்தரிக்காய் ஒட்டன்சத்திரத்தில் இருந்தும், முருங்கைக்காய்கள் தாராபுரத்தில் இருந்தும், காரட், முள்ளங்கி, கோஸ், காலிப் பிளவர் போன்ற காய்கறிகள் கொடைக்கானலில் இருந்தும் கடைக்கு வரும்.

மொத்த வியாபாரப் பிரிவில் வேலை மிக எளிதாக இருக்கும். கேட்ட காய்கறிகளை நிறுத்துப் போட்டுவிட்டு பில் எழுதி என் சித்தப்பாவிடம் அனுப்பிவிடுவேன் அவர் விலை சரிபார்த்துவிட்டு காசு வாங்கிவிடுவார். மூளைக்கு வேலையெல்லாம் இல்லை. ஒரு மிஷின் மாதிரியானது. சில்லறை வியாபாரம் இதற்கு நேர்மாறானது. அது பற்றி அடுத்த பதிவில்...

Wednesday, May 03, 2006

அந்நியன் முயற்சி! தேவைப்படும் மாற்றங்கள்

நம்முடைய அந்நியன் அவர்கள் போலிப் பின்னூட்டங்களைத் தடுக்க சில வழிமுறைகளைச் செய்திருக்கிறார். அது மிகவும் நல்ல முயற்சி. வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் சில தொழில் நுட்ப ஓட்டைகள் உள்ளன.
அவரின் ப்ளாக்(http://anniyan2006.blogspot.com/) முழுவதையும் பிரித்துப் போட்டுப் பார்த்ததில், XSS (Croos site scripting) எனப்படும் குறுக்கு வழித் தொழில் நுட்பம் மூலம் உபயோகிப்பவர்களின் user id மற்றும் password ஆகியவற்றை போலி திருடிக் கொள்ளும் வாய்ப்புகள் 100 சதவீதம்.

நம்ம போலி கம்ப்யூட்டர் கில்லாடி என்று சொல்லிக் கொள்கிறார்கள். எனவே இது குறித்து கலந்தாலோசனை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அந்நியன் அவர்களே உங்களின் E-Mail முகவரியைப் இந்தப் பதிவில் பின்னூட்டம் இடுங்கள், நான் தொடர்பு கொள்கிறேன், அதை வெளியிட மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

வாருங்கள், போலியை ஒரு கை பார்ப்போம்

Sunday, April 30, 2006

Sorry, என்ன ரெம்ப கடிக்கிறேனா?

சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா washing சோடாவாகுமா?

தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது

உலகம் தெரியாமவளர்ரவன் வெகுளி Cricketதெரியாம வெளையாடுறவன் Ganguly

என்ன தான் Karateல Black Beltவாங்கினாலும் சொறி நாய்தொறத்தினால் ஓடித்தான்ஆகனும்

என்ன தான் மீனுக்குநீந்த தெரிஞ்சாலும் அதாலமீன் கொழம்புல நீந்தமுடியாது

Quarter அடிச்சிட்டுகுப்புற படுக்கலாம் ஆனாகுப்புற படுத்துட்டு Quarterஅடிக்க முடியாது

நீஎவ்வளவு பெரிய Dancerஆஇருந்தாலும் உன் சாவுக்குஉன்னால ஆட முடியுமா?

பணம்வரும் போகும் பதவி வரும்போகும் காதல் வரும் போகும்கவலைவரும் போகும் ஆனா AIDSவரும், போகாது!!

Poison பத்துநாளானாலும் பாயசம் ஆகமுடியாது ஆனா பாயசம் பத்துநாளானா Poison ஆகிடும்

வாயால"நாய்" ன்னு சொல்ல முடியும் நாயால "வாய்"ன்னு சொல்லமுடியுமா?

Cycle Carrierல Tiffin வைக்கமுடியும் ஆனா Tiffin Carrierல Cycleவைக்க முடியுமா?

Bus போனாலும்Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே போகும்

Train எவ்வளவுவேகமா போனாலும் கடைசிபெட்டி கடைசியா தான் வரும்

Ticket வாங்கிட்டு உள்ளேபோகுறது Cinema Theatre, உள்ளேபோயிட்டு Ticket வாங்குறது Operation Theatre

Busலநீ ஏறினாலும் Bus உன் மேலஏறினாலும் Ticket வாங்க போறதுநீதான்

Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை ஒடைஞ்சா தான் Omlet போடமுடியும்

காக்கா என்ன தான்கறுப்பா இருந்தாலும் அதுபோடுற முட்டை வெள்ளைமுட்டை என்ன தான் வெள்ளையாஇருந்தாலும் அதுக்குள்ளஇருக்குற காக்கா கறுப்புதான்


யப்பா, மெயில்ல இதப் படிச்ச வொடனே, இப்படிக் கண்ணக்கட்டுதே!!

Saturday, April 29, 2006

நிலவு ஒரு பெண்ணாகி

பெண்களை ஏன் நிலவிற்கு ஒப்பிட்டார்கள் என்ற சந்தேகம் இந்தப் படங்களைப் பார்த்தும் தீர்ந்து விட்டது. வலைப் பதிவு மக்களே நிலவு பற்றிய கவிதைகளை எடுத்து விடுங்கள்.

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ..

பாதிமுகம் மறைத்த நிலவே
ஒரு பார்வை பார்க்க மாட்டாயோ
தூரத்தில் இருக்கும் நிலவே
நீ எனைக்கண்டு தூர விலகிப் போவதும் ஏனோ
முதல் முறையாக ஒரு கவிதை முயற்சித்தேன் உனக்காக
பாதிமுகம் மறைத்த நிலவே
ஒரு பார்வை பார்க்க மாட்டாயோ






கவிதை எழுதுவதும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது. மேலும் முயற்சிக்கிறேன்.

காய்கறிக்கடை அனுபவங்கள் - 2

கலப்படம். இது இரண்டு வகைப்படும். ஒன்று தரமான ஒரு பொருளுடன் அதனைவிடத் தரம் குறைந்த அதே பொருளைக் கலந்து விற்பது. மற்றொன்று ஒரு பொருளுடன் அதே நிறம் அல்லது மணம் அதே போன்ற தன்மையுடைய வேறு ஒரு பொருளைக் கலந்து விற்பது ஆகும்.

முதலாவதில் நுகர்வோருக்கு எதுவும் உடல் ரீதியான பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் தரம் குறைந்த ஒரு பொருளை தரமான பொருளின் விலையில் வாங்குகிறார். நான் பார்த்தவரையில் எல்லாப் பொருட்களிலும் இந்த வகைக் கலப்படம் செய்யப்பட்டது. இல்லையென்றால் வியாபாரத்தில் போட்டியைச் சமாளிக்க முடியாது என்பது என் முதல்லளியின் எண்ணம்.

இரண்டாவதில் லாபம் மட்டுமே நோக்கம். கடலை எண்ணையில் விளக்கெண்ணையைக் கலப்பது போன்ற செயல்கள். இதில் கலப்பட அளவு என்பது மிகவும் முக்கியம். 15கிலோ கடலை எண்ணையில் ஒன்னேகால் கிலோ வரை விளக்கெண்ணை கலந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. ஒரு முறை மனசாட்சிக்குப் பயந்து விளக்கெண்ணை கலப்பது பாவம் இல்லையா முதலாளி என்று கேட்டுவிடேன். அதெல்லாம் இல்லப்பு, விளக்கெண்னை நல்ல மலமிளக்கி. அதனால் உடலுக்கு மிகவும் நல்லது என்று சப்பைக்கட்டு கட்டினார்.

இனிப்புத் தன்மை அதிகமாக உள்ள முதல் தர சர்க்கரையில்(சீனி), இனிப்புத்தன்மை குறைந்த சர்க்கரையைக் கலப்பது,கடுகில் ஆர்கிமோன் விதைகளைக் கலப்பது, நெய்யில் வனஸ்பதியைக் கலப்பது போன்றவை நான் சாதாரணமாகக் கண்ட கலப்படங்கள்.

இது போன்ற கலப்படங்கள் பெரும்பாலும் 100கிராம், 50 கிராம் என்று வாங்கும் அன்றாடம் காய்ச்சி மக்களைக் குறிவைத்துதான்.

சென்னையில் நான் இருந்த போது சில பெரிய கடைகளில் பாக்கெட்டில் அடைத்து வைத்திருக்கும் பொருட்களில் நான் இது போன்ற கலப்படங்களைப் பார்த்தது இல்லை. ஆனால் அவற்றின் விலையும் சற்று அதிகம்தான். காசுக்கேற்ற தரம்.

முடிந்தவரை தெருவோரக் கடைகளில் விற்கும் மிக்சர், பக்கோடா போன்ற எண்ணைப் பலகாரங்களை வாங்கி உண்ணாதீர்கள். அவைகள் அனைத்தும் கலப்பட எண்னை, மற்றும் மாவுப் பொருட்களில் செய்யப்பட்டவை.

என் முதலாளியிடம் எனக்குப் பிடித்தது, ஒரு மாதச் சம்பளமாக 350 ரூபாய் கொடுத்தார். கொடுக்கும் போது சாப்பிட்ட பேரீச்சம் பழங்களுக்கெல்லாம் கணக்குப் பார்த்தால் நீதாம்பு காசு தரணும். ஒரு வாட்ச் வாங்கனுமுன்னு சொன்னீயே, இத வச்சி வாங்கிக்கோன்னு சொன்னார். தொழிலாளிகளிடம் வேலை வாங்கத் தெரிந்த மனிதர்.

ஒரு மாதம் மளிகைக்க்டையில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்தான் இவைகள். அடுத்த பதிவு என் காய்கறிக்கடையில் இருந்து.

Monday, April 24, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 1

செய்யும் தொழிலே தெய்வம். இதை மிகவும் நம்புபவன் நான். இன்று ஒரு கணிப்பொறியாளராக இருக்கும் நான் மளிகைக்கடையிலும், காய்கறிக்கடையிலும் வேலை செய்திருக்கிறேன் என்று சிலரிடம் சொல்லும் போது சிலர் அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். சிலர் முகம் சுளித்திருக்கிறார்கள். எப்போதும் அதுபற்றிக் கவலைப் பட்டதில்லை.
இந்தத் தொடரில் நான் வேலை செய்த இடங்களில் சந்தித்த புத்திசாலியான வியாபாரிகள், ஏமாற்ற நினைக்கும் வியாபாரிகள், கிராமத்து விவசாயிகளின் கஷ்டங்கள், வியாரிகளின் பொதுவான தகிடுதத்தங்கள் ஆகியன பற்றி நேரம் கிடைக்கும் போது சுருக்கமாக எழுதுகிறேன். ஆதரவை வேண்டுகிறேன்.

நான் பதினென்றாம் வகுப்பின் முழு ஆண்டு விடுமுறையின் போது எல்லோரும் கோச்சிங் கிளாஸ் போய்க் கொண்டிருந்த போது நான் மட்டும் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சென்றேன். அது குடும்பச் சூழ்நிலையால் அல்ல. பன்னிரண்டாம் வகுப்பிற்கு கோச்சிங் எல்லாம் தேவையில்லை, சாதாரணமாகவே படிக்க முடியும் என்ற தன்னம்பிகைதான். படிப்பிலும் பள்ளியில் மூன்றாவது ரேங்க் வாங்கிக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் தராசு பிடிக்கக் கற்றுக் கொண்டேன். அது ஒரு மொத்த வியாபாரம் செய்யப்படும் மளிகைக்கடை. என் பக்கத்து வீட்டுக்காரரின் கடை. எனவே சம்பளம் எல்லாம் பேசவில்லை. தினமும் இரண்டு ரூபாய் பேட்டாக் காசாகக் கொடுப்பார்கள். வேலையெல்லாம் எனக்கு எளிதான வேலை தான். ஒரு கிலோ இரண்டுகிலோ போன்ற சிறிய அளவிளான நிறுவைகளை நான் நிறுத்துக் கொடுப்பேன். ஆனால் அதைப் பொட்டலமாக மடிக்கத் தெரியாது. வேறு சில வேலைக்காரர்களை வைத்துச் செய்வார் என் முதலாளி.

கடையின் மாடியில் தான் டால்டா,நெய், பேரீட்சை போன்ற பொருட்களை ஸ்டாக் வைத்திருப்பார்கள். பேரீட்சை பாக்கெடுகளை ஒரு மூலையில் கோணிப்பைகளுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்து அவ்வப்போது மாடிக்குப் போகும் போது தின்றுவிட்டு வருவேன்.

கைத்தராசில் நிறுக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். நமக்கே தெரியாமல் குண்டுஏறிவிடும். அதாவது தராசின் சங்கிலி மேலை உள்ள சட்டத்தில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளும். அதை நாம் அவசரத்தில் கவனிக்காவிட்டால் சில நேரம் லாபம் நமக்கு அல்லை யென்றால் வாங்குபவருக்கு. அதாவது தராசுச் சட்டத்தின் சங்கிலி, படிக்கல்(எடைக்கல்) உள்ள பக்கத்தில் சுற்றிக் கொண்டால் போட்ட எடைக்கு அதிகமான பொருள் நிற்கும். அப்போது நஷ்டம் நமக்கு. அதே நேரம் தராசுச் சட்டத்தின் சங்கிலி பொருள் உள்ள பக்கத்தில் சுற்றிக் கொண்டால் போட்ட எடைக்கு குறைவான பொருள் நிற்கும். அப்போது வாங்குபவர் ஏமார்ந்து போவார்.

சில நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் வியாபாரம் செய்பவர்கள் அரைக்கிலோ பொருளின் விலை மிகவும் மலிவாகக் கொடுப்பதாகச் சொல்லுவார்கள். அவரின் தராசைப் பார்த்தால் நான் மேலே சொன்ன மாதிரி தராசுத் தட்டின் சங்கிலி மேலே சுற்றிக் கொண்டிருக்கும். பொருளின் எடை சுமார் ஒரு கிலோவிற்கு 300 கிராம் வரை குறைவாக இருக்கும். என்வே அடுத்த முறை காய்கறிகள், பழங்கள் நிறுத்து வாங்கும் போது கவனித்து வாங்குங்கள்.

கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் நின்று கொண்டிருந்த போது ஒருவர் திராட்சைப்பழம் அரைக்கிலோ 5 ரூபாய்க்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் தாராசில் நான் மேற்கூறிய பித்தலாட்டத்தைச் செய்து வைத்திருந்தார். அவர் நிறுக்கும் போது அதைச் சரி செய்து அரைக்கிலோ தரும்படிக் கேட்ட போது, வியாபாரம் நடக்குற இடத்தில் பிரச்சனை பண்ணாதப்பா என்று அடிக்காத குறையாகத் துரத்திவிட்டார்கள்.

இன்னும் வரும்....

Sunday, April 23, 2006

கலைஞருக்கு சில கேள்விகள்

கலைஞருக்கு சில கேள்விகள். இதற்கு கலைஞரோ அவரது தொண்டர்களோ சரியான பதில் தந்து விட்டால் என் குடும்பத்தினரை தி.மு.க விற்கு ஓட்டுப் போடும்படிக் கேட்டுக் கொள்வேன்.

1. பா.ஜ.க கூட்டணியில் 5 ஆண்டுகள் மாறன் சாகும் வரை பதவியில் இருந்து விட்டு கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?

2. ராஜபாளயம் பொதுக் கூட்டத்தில் நெசவாளர்களுக்கு பா.ஜ.க வாஜ்பாய் அரசு பல துன்பங்களைக் கொடுத்தது எனக் கூறினீர்கள். நீங்களும் தானே அரசில் 5 ஆண்டுகள் பங்கெடுத்தீர்கள். அந்தக் கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம் என்று கூறுகிறேன். என்ன பதில்?

3.சுமங்கலி கேபிள் டீ.வி விவகாரத்தில், அவசரமாக கட்சி எம்.பிக் களுடன் கவர்னரைச் சந்தித்தது ஏன்?. மேலும் பாலாறு அனை விவகாரம் தொடர்பாக நீங்கள் மத்திய அரசில் இருந்து கொண்டு என்ன செய்திருக்கிரீர்கள்?

4.அறிவாலயத்தை அடமாணம் வைத்து சன் டீ.விக்காக வங்கியில் கடன் வாங்கினீர்கள் என்ற வை.கோ வின் குற்றச்சாட்டிற்கு உங்களின் பதில் என்ன?(என் அப்பா 1982ம் ஆண்டில் தி.மு.க உறுப்பினராகச் சந்தா செலுத்தியுள்ளார். எனவே அவர் சார்பாக எனக்கு அறிவாலயம் பற்றிக் கேட்க உரிமை உள்ளது.)

5.கடந்த 5 ஆண்டுகளில் சட்ட சபைக்கே போகாமல் தவிர்த்தது ஏன்?
(இதே கேள்வியை ஜெ.யிடம் கேள் என்றெல்லாம் பதில் சொல்லக் கூடாது. அப்படித்தான் சொல்வேன் என்றால் ஜெ.க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?)

6.மத்திய அரசில் ம.தி.மு.க எம்.பிக்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் காட்டி மத்திய அமைச்சர் பத்விகளைப் பெற்றீர்கள் என்ற வை.கோ வின் குற்றச்சாட்டிற்கு என்ன பதில்? இது குறித்து பிரதமரும் எதுவும் பதில் கூறாதது உங்களின் மீது தவறு உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறேன், உங்களின் பதில் என்ன?

7. தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்கள் அறிவித்துளீர்கள். அரசின் வருமானத்தைப் பெருக்க ஒரு வழியையும் சொல்லவிலையே?, வரவு இல்லாமல் எப்படிச் செலவுசெய்ய முடியும்.

Saturday, April 22, 2006

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா....

நம்ம கலைஞர் பற்றி பொதுமக்கள் இந்தப் பாடலைப் பாடினால்

ஜெயா ஓகோ... வைகோ ஆகா
ஜெயா வைகோ ஜெயா வைகோ ஆகா ஓகோ..
ஜெயாவின் கலரென்ன நெறமென்ன கலைஞர் வெறும் கறுப்புக் கண்ணாடிதானே..
no problem அத விட்ரு.
ஜெயாவின் கலரென்ன வெள்ள, கலைஞர் கருப்பு, இருந்தாலும் பரவாயில்ல கருப்பும் வெள்ளையும் சேர்ந்து தானே பழைய எம்.ஜி.யார் படமெல்லாம் பாத்தோம் அட ஆமா.
கலைஞர் பெரும் பணக்காரர், நாம யாரு அவருக்கு நாம ஓட்டுப் போட்டா இன்னும் பணக்காரர் ஆவார், அவர் ஆனா நாம ஆனா மாதிரி, நாம ஆனா எல்லாரும் ஆன மாதிரி தானே.. அதுக்கு.
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா
கலர் டீவி தார்றாராம்...ரெண்டு ரூபாக்கு அரிசி தார்றாராம்
தேர்தலுல ஜெயிச்சாசிசுனா, எதுக்கு
(அடுத்து வைகோ பாடுகிறார்)
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. அவங்க சொல்லுறதில் உண்மயில்ல சீனிவாசா
அவருக்கு சன் டீவி இருக்குய்யா. பரதேசி நானுய்யா. எனக்கு மட்டும் ஓட்டுப் போடய்யா
(பொது மக்கள்)
எதுக்கு?
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா

..

...
...
..
..

(பொது மக்கள்)
கூட்டணியிலாம தேர்தலில்லே, பா.ம.கா அடிக்காத பல்டியில்லே ..
கூட்டணியிலாம தேர்தலில்லே, பா.ம.கா அடிக்காத பல்டியில்லே ..
அந்த பி.ஜே.பியக் கேக்க நாதியில்ல.

.....
....


-------------------------
பாட்ட forward , rewind பண்ணி பாட்ட மாத்தி யெழுதுரதுகுள்ள தாவு தீந்திடிச்சி.
பாட்ட வச்சி நான் தி.மு.க ஆதரவாளர் என் நினைத்து விட வேண்டாம்

Tuesday, April 11, 2006

நான் நாத்திகவாதியா? ஆத்திகவாதியா?

திரு.ஜோசப் அவர்களுக்கும், முத்து தமிழினிக்கும் நடைபெற்றுவரும் விவாதங்களைப் படித்த போது நான் நாத்திகவாதியா? ஆத்திகவாதியா? திராவிடனா? எனக் கேள்வி எழுந்தது, என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

பல காலமாக எனக்கு இது பெரும் குழப்பமாகவே இருந்து வந்துள்ளது. கோவிலுக்கு எப்போதாவது போவது உண்டு, ஆனால் மனதை
ஒரு முகப்படுத்தி கடவுளை வணங்குவது இல்லை. கடவுளிடமும் எதுவும் பெரிதாக வேண்டிக் கொள்வதும் இல்லை.
தினமும் விபூதி, குங்குமம் பூசிக் கொள்வது இல்லை. நண்பர்கள் கோவிலுக்கு அழைக்கும் போது அங்கு கூடும் மக்களைப்
பார்ப்பதற்கே பெரும்பாலும் செல்கிறேன்.

நாள் கிழமை பார்த்தெல்லாம் சைவம்/அசைவம் எனச் சாப்பிடுவது கிடையாது. நினைத்ததை பிடித்தபோது சாப்பிடுகிறேன்.

தீபாவளி/பொங்கல் போன்ற பண்டிகைகள் கொண்டாட விருப்பம் இருப்பதிலை. வீட்டாரின் வற்புறுத்தலின் பேரிலே புத்தாடைகள் அணிகிறேன்.
ஆனால் பல நேரங்களில் அலுவலகத்திற்குப் பயணிக்கும்போது கடவுளை(எங்கள் ஊரில் உள்ள முத்துமாரியம்மனை)
மனதில் நினைத்துக் கொள்வது உண்டு. ஆனால் கடவுளிடம் எந்தக் கோரிக்கையும் வைப்பது இல்லை.

சில முக்கியமான விசயங்களைத் தொடங்கும் போது முத்துமாரியம்மனை மனதில் நினைத்துக் கொள்வது உண்டு.

அதவது இந்த விசயத்தில், பண்டிகைகள் கொண்டாடியோ, கோவிலுக்குச் சென்றோ கடவுளைத் தேட வேண்டியது இல்லை. கடவுளை
நினைத்த இடத்தில் இருந்தே நினைத்துக் கொண்டாலா, மனதில் வணங்கிக் கொண்டாலோ போதும் என் நினைப்பவன்,

என்னைப் போன்றவர்களை நாத்திகவாதிகள் என்றும் சொல்ல முடியாது. கடவுளே இல்லையென்று சொல்பவ்ர்கள் அவர்கள்.
ஆத்திகவாதியும் கிடையாது. கடவுள் இருக்கிறார் என்று சொல்லி அவருக்கு என்று உள்ள சில விதிமுறைகளையும்(விரதம், பண்டிகைகள் கொண்டாடுவது etc..) கடைபிடிப்பது இல்லை.

ஆனால் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு நான் தரும் ஒரு வடிவம் நான் நினைத்துக் கொள்ளும் முத்துமாரியம்மன்.
வேறு சிலருக்கு வேறு வடிவங்கள் இருக்கலாம். அந்த சக்திக்கு 'கடவுள்' என்ற ஒரு பொதுப்பெயரும் உண்டு.

எனக்கு இருக்கும் இத்தகைய சிந்தனைகளை யாரிடமும் தினிப்பதும் இல்லை.

என்னைப் போன்ற சிந்தனை உள்ளவர்களை எந்த வகையில் சேர்ப்பது?

Thursday, April 06, 2006

சன் டீ.வி யின் சிறப்புப் பார்வை

இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவது பிடிக்காமல்
யாரோ ஒருவர் யோசிக்காமல் திமுக மீது வழக்குத் தெடர்த்து விட்டால், நீதிமன்றமும் அதனை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டது என வைத்துக் கொள்வோம் . அப்போது சன் டீ.வியில் என்ன சொல்வார்கள்.

சன் டீ.வின் சிறப்புப் பார்வை வழங்குவோர் சிந்த்தால்.

இன்று திமுக மீது தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்க்கட்சிகள் பொறாமையால் தொடரப்பட்ட வழக்கு. மக்களின் பொதுஅறிவைப் பெருக்க தொலைக்காட்சி அவசியமானது.

1930ம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபடிக்கப்பட்டது முதல் இன்றுவரை அதன் பயன்கள் கணக்கில் அடங்காதவை.
செய்திகள் முதல் சினிமா வரை அனைத்தும் பொது அறிவை வளர்ப்பவை.

உலகத்தில் எது நடந்தாலும் உடனுக்குடன் நமக்குத் தெரிவிப்பது இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளே.

கிரிக்கட் போட்டி முதல் ஒலிம்பிக் போட்டிகள் வரை நேரடியாக ஒளிபரப்பி அத்தனை நிகழ்சிகளும் பொது அறிவை வளர்ப்பவை

இராமாயணம், மகாபாரதம் போன்ற நிகழ்சிகளை ஒளிபரப்பி ஆன்மீகத்தை வளர்த்வை இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளே.

அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழலை அம்பலப் படுத்தியதும் ஒரு தொலைக்காட்சிதான்.

நாடாளுமன்ற எம்.பி கள் லஞ்சம் வாங்கியதைக் காட்டியதும் தொலைக்காட்சிப் பெட்டிதான்.

சன் டீவியின் சென்றவார உலகம் நிகழ்சியின் மூலம் ஒரு வாரத்தில் உலகத்தில் நடந்ததை அரை மணி நேரத்தில் மக்கள் அறிந்து கொள்ளச் செய்ததும் தொலைக்காட்சிப் பெட்டிதான்.

சித்தி, அண்னாமலை, செல்வி போன்ற தொடர்களை ஒளிபரப்பி மக்களின் அபிமானமான் அந்தஸ்தைப் பொற்று முதல் இடத்தில் இருப்பதும் சன் டீ.வி தான்.

ஆனால் இவைகளை அறியாமல் வாடும் 53 லட்சம் குடும்பங்களின் கதி என்ன?

நாளை பார்க்கலாம்.

Wednesday, April 05, 2006

வருமான வரி ஏன் கட்டணும்?

நம்ம கருத்து கந்தசாமி வீணாப்போன கருணாநிதி எல்லோருக்கும் டீ.வி இலவசமாகக் கொடுக்கப் போறேன்னு சொன்னவுடன், நான் இந்த அரசுக்காக கடந்த 3 வருடங்களாக முறையாகச் செலுத்தி வந்த வருமான வரியினைக் கூட்டிப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் செலுத்தியுள்ளேன். இதில் பல தகிடுதத்தங்கள் செய்து நான் 80ஆயிரம் வரை வரி ஏய்ப்பு செய்திருக்க முடியும். மனசாட்சிக்குப் பயந்து வரி கட்டினால் கட்டிய பணம் ஊழலிழும், வெட்டியான பயனில்லாத திட்டங்களிலும் வீணடிக்கப்பட்டுள்ளதோ/அல்லது வீணடிக்கப் பட்டுவிடுமே என்ற பயமும், ஒரு கையாலாகாத தன்மையும் என்னுள் ஏற்படுகின்றது.
எனவே இந்த முறை நம்ம கைவரிசையைக் காட்டி விட வேண்டியது தான் என முடிவு செய்துள்ளேன்.

53 லட்சம் குடுப்பங்க்ளுக்கும் டீ.வி கொடுக்க 1100 கோடி ரூபாய் செவவழிக்கப் போறாராம்.
அட, வீணாப்போனவரே,
1. 1100 கோடி வைத்து தமிழகத்தில் உள்ள 900 கி.மீ ரயில் பாதையை அகலப் படுத்தலாம்.
2. சென்னைக்கு கடல் நீரை குடிநீர் ஆக்கலாம்.
3. எத்தனை ஆரம்பப் பள்ளிகள் ஆரம்பிக்கலாம்.

ஏன்யா, யார் வீட்டுப் பணத்தில் யாருக்குக் கொடுப்பது. எல்லாம் என்னை மாதிரி ஆட்கள் இரவு பகல் பாக்காமல் கம்யூட்டரைப் பார்த்து கண் வீங்கிச் சம்பாதித்த பணம்.
கொடுக்கனும்னா உன் சொத்த வித்துப் பண்ணுங்கள். இல்ல சன் டீ.வியை அடமானம் வச்சுப் பண்ணுங்கள்.

கருணாநிதி ஜெயித்தால் காந்தி சொன்ன வரி கொடா இயக்கத்தை நான் பின்பற்றுவது என முடிவு செய்துள்ளேன். அப்ப நீங்க?