நேற்று மாலை டோண்டுவுக்கு பின்னூட்டம் இட்டுவிட்டு அலுவலகத்தில் இருந்து ஒரு ஏழு மணியளவில் கிளம்பி லிவர்பூல் ரயில் நிலையம் வந்தேன். வெள்ளி மாலை என்பதால் சுமாரான் கூட்டம். நாளை என்ன செய்யலாம் என நினைத்துக் கொண்டே எதிர் இருக்கையைப் பார்த்தேன். கவர்ச்சியான் உடையில் மத்திய கிழக்குப் பகுதியைப் சேர்ந்த ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். நான் அவளைப் பார்த்தவுடன் உதடை மிக லேசாக குவித்தாள். ஆகா! சிக்னல் கிடைத்து விட்டது என, மனதில் ஒரு மகிழ்ச்சி அல்லது சலனம். Hi, எனப் பேச ஆரம்பித்து முன்னேறிச் செல்லலாம் என்ன, ஒரு 150 பவுண்டு(~12000 ரூபாய்) செலவாகும். ஆனால் முக பாவனையில் எந்த அறிகுறியும் காட்டாமல் நிமிர்ந்து அமர்ந்தேன். உடனே சடாரென மனதில் கல்லூரியில் விரிவுரையாளர் பெண்களின் கவர்சிப் பிரத்தேசங்களைப் பற்றிக் கூறியது நினைவில் வந்தது.
சிவகாசி அய்யநாடார் கல்லூரியில் நான் படிக்கும் போது அறிவுச்செல்வன் என்பவர் விரிவுரையாளராக இருந்தார். அப்போது அவருகு 30 வயது இருக்கும். மிகவும் நட்பாகப் பழகும் மனிதர். மாணவர்களுடன் சரிக்குச்சரியாகப் பேசுவார்.
அறிவுச்செல்வன் கறுப்பாக ஒல்லியாக உயரமாக இருப்பார். அவரின் மனைவி நல்ல நிறமாக இருப்பார். இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். தான் காதலிக்கும் போது கல்லூரி நிர்வாகத்தால் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என வகுப்பறையில் சொல்லுவார். (மனைவியும் அதே கல்லூரியில் விரிவுரையாளர்). அவரது குழந்தையைப் பற்றி சொல்லும்போது அவரைப் போல் அழகுடனும், அவரது மனைவியைப் போல் அறிவுடனும் பிறந்துள்ளதாகக் கூறுவார்.
ஓரு நாள் எங்கள் வகுப்பு மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மாணவியை கிண்டல் செய்து அவரிடம் மாட்டிக் கொண்டார்கள். அடுத்த நாள் வகுப்பில் ஒரு மறக்க முடியாத ஒரு உரையாற்றினார்.
"டேய், உலகத்தில் என்னைப் பொறுத்தவரை ரெண்டே கெட்ட பழக்கங்கள் தான் பசங்களிடம் இருக்கு, ஒன்னு சிகரெட் பிடிபது இன்னேன்னு பொம்பளைகிட்டப் போறது/கேலி பண்றது. இது ரெண்டில் எதுவும் என் பசங்ககிட்ட இருகக்கூடாது. இன்னைகி பொண்ணைக் கேலி பண்ணுவே, நாளைக்கி கேலி பண்ணுண எடத்த(உடல்) பாக்க வேற எங்கேயாவது போவ. டேய் வாரத்துக்கு ஒரு தடவை பீர் அடிடா, அத நா ஒன்னும் சொல்ல மாட்டேன். ஆனா தினம் தினம் சிகரெட்டும், பெண்ணைப் பற்றிய நினைவும் உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும் " சிறிது நேரம் வகுப்பில் ஒரு வித அமைதி.
"திடீரென ஒரு ஆவேசம் வந்தவராக, டேய் பொண்ணுங்க கிட்ட அங்க என்னடா இருக்கு இங்க பாரு என்று சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழற்றி, இதைப் போல கொஞ்சம் பெறுசா இருக்கும், அவ்வளவுதான் " என்று சொல்லி வகுப்பறையில் இருந்து பாதியில் இருந்து வெளியேறினார்.
இன்று ரயிலில் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவர் சட்டைய கழற்றிக் காட்டியது நினைவில் வந்து சென்றது. பின்னர் என் செல்பேசியை இயக்கி பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். ஆனாலும் அவரைப் பற்றிய நினைவுகள் மனதில் ஓடிகொண்டுதான் இருந்தது.
ஒரு முறை டீ.வி யைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த போது, தான் ஒரு புது கலர் டீ.வி வாங்கியிருப்பதாகவும், அதைக் காட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்று, அதன் பாகங்களைத் திறந்து காட்டினார்.
ஒரு முறை collision பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு பிரபலமான விளையாட்டு collision னின் இயற்பியல் விதிகளைப் பின்பற்றியே விளையாடுகிறார்கள், அது என்ன என்று ஒவ்வொறுவராகக் கேட்டுக்கொண்டு வந்தார். அனைவரும் திருதிருவென் விழிக்க ஒருவன் மட்டும் "சார் அது அம்மா அப்பா விளையாட்டு சார்" னு சொல்ல அனைவரும் சிரிக்க எங்கள் வகுப்பை ஒரு வாரம் புறக்கணித்தார். பிறகு நாங்கள் மன்னிப்புக் கேட்ட பின் வகுப்பிற்கு வந்தார். இது அனைதையும் கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரியாமல் எங்களைப் பாதுகாத்தார்.
இப்படி ஒவ்வொறு விதத்திலும் மாணவர்களின் நண்பனாய் பழகினார்.
அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் , அது தன் உடலை கவனிக்க மாட்டார். கண்டதையும் சாப்பிடுவார். coca-cola நிறையக் குடிப்பார். அதனால் மஞ்சள்காமாலை வந்தது கூட தெரியாமல் கோழி சாப்பிட்டு, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து திடீரெனெ இறந்த போது எல்லாம் ஒரு வெறுமையாய் உணந்தேன், அவரைப் பற்றி நினைகும் போதும் அப்படியே உறைகிறேன்.
Wednesday, March 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment