Saturday, November 30, 2013

பா.ஜ.க வுக்கு ஓட்டுப் போடுங்க

பா.ஜ.க வுக்கு ஓட்டுப் போடுங்க.

காரணங்கள்.

உங்கள் வீட்டின் நிதி நிலையை உயர்த்த என்ன செய்வீர்கள்?

1. செலவைக் குறைப்பீர்கள்.

2. பணம் வரும் வழியை அதிகரிப்பீர்கள்.


நாட்டிற்கும் இது தான் அடிப்படை.

கடந்த 5 ஆண்டுகளில் அதிகமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறந்து விட்டு முதலீடு மூலம் அதிகமாக பணத்தின் வரவை அதிகரிக்க நினைத்து, வரிச்சலுகை, மின்சாரக் கட்டணத்தில் சலுகை அளித்துள்ளது.

ஆனால் நடந்தது.

1. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் வட்டிக்குப் பணம் வாங்கி தொழிலைத் தொடங்கின.

2. அதனால் முதலீடு மூலமாக நாட்டிற்குள் வரவேண்டிய பணம் சரியாக வரவில்லை.

3. நம் நாட்டு வங்கிகளிடமே கடன் வாங்கி, வரிச் சலுகை, மின்சாரச் சலுகை பெற்று கடனை அடைத்து , வரும் லாபத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துப் போக ஆரம்பித்து விட்டன. அமெரிக்க டாலர் கையிருப்புக் குறைய ஆரம்பித்து விட்டது. நோகாமல் நுங்கு தின்ன ஆரம்பித்து விட்டார்கள். கண்டிக்க வேண்டிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் என்ன செய்கிறார்?

உதாரணம் சென்னையில் அமைந்துள்ள நோக்க்கியா செல்போன் தொழிற்சாலை.


1. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சீராக விலைவாசி உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. அவ்வப்போது எப்படியாவது சமாளித்துக் கொண்டே வந்தார்கள். உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வது , ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது என்று. எல்லாவற்றிற்கும் முதன்மையான உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது என்ற அடிப்படையை மறந்து விட்டார் ப.சிதம்பரம்.

தொடரும்.

-----------------

this blog post was written on 2010,

மீன் குழம்பு மசாலாப் பொடி தயாரிக்கும் முறை!

மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்வதற்கான மசாலாப் பொடி தயாரிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் : 250 கிராம்
மல்லி : 300 கிராம்
சீரகம் : 200 கிராம்
மிளகு : 25 கிராம்
விரலி மஞ்சள் : 25 கிராம்
அரிசி : 25 கிராம்
உப்பு : 10கிராம்


செய்முறை:
முதலில் மல்லி, மிளகாய் வற்றல்,மிளகு, மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காய வைக்கவும்.

பிறகு மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள்,உப்பு ஆகியவற்றை லேசாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும். (எண்ணை இல்லாமல் வெறும் வாணலியில்)

அரிசியை பொன்னிறமாக வாணலியில் வறுத்து எடுகவும்.

பின்னர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மாவு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பின் குறிப்பு: இந்த மசாலாப் பொடியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் வாசம் மற்றும் நிறம் போகாமல் ஒரு வருடம் வரை வைத்துப் பயன் படுத்தலாம்.

இதே மசாலாப் பொடியை புளிக்குழம்பு, காரக்குழம்பு வைக்கவும் பயன் படுத்தலாம்.


பின்குறிப்பு 2: கடையில் தயாராக விற்கும் மாசாலாப் பொடிகள்(ஆச்.., சக்.. போன்றவை. எனக்குத் தெரிந்த மொத்த விற்பனையாளர் சொன்ன தகவல்) தரமில்லாத மல்லி, சீரகம், கலர் பொடி சேர்த்த மிளகாய் மூலம் தயாரிக்கப் படுவதால் வீட்டிலேயே தயார் செய்து பயன் படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கும்.