Saturday, June 10, 2006

இனியெல்லாம் சுகமே

ஏதாவது ஒரு பதிவு போடனும், எனக்கு ஏத்த மாதிரி விஷயம் கிடைக்காததால் நான் தினசரி ஒரு முறையாவது கேட்கும் பாடலை நம் மக்களுடன் பகிந்து கொள்கிறேன். அந்தப் பாடல் அவள் அப்படித்தான் என்ற திரைப் படத்திலிருந்து "உறவுகள் தொடர்கதை. உணர்வுகள் சிறுகதை". நானும் எத்தனையோ பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை இது என் உயிரை உருக்குகிறது.

பாடலின் வரிகளும் அதன் அர்த்தமும் அதன் பின்னனி இசையும் குரலும் இனைந்து ஒரு மேஜிக் உண்டாகிறது.

நான் இன்னும் அந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லையென்றாலும் காதலனும் காதலியும் இணையும் போது உள்ள சூழ்நிலையில் படமாக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

பாடலுக்கு இசை அமைத்தவர் யார், படத்தில் நடித்தவர்கள் யார் யார் போன்ற மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

இனி அந்தப் பாடலை என்னுடைய தளதில் இருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்

---
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்.
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே


வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே

--
இப்போது ஒரு காற்று என்னை வந்து தழுவிச் சென்றது போல உணர்கிறேன்.

10 comments:

சிந்து said...

உங்கள் வலைப்பூங்கா பார்த்தேன் மகிழ்ந்தேன் நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

பதிவு போட மேட்டர் இல்லைன்னா, போட்டோவை மாத்துங்க.. அப்புறம் ஏன் மாற்றினேன்னு ஒரு பதிவு போட்டுடலாம்!! :))
அத விட்டுட்டு இது என்ன சின்ன புள்ளத் தனமா :)

மகேஸ் said...

வரவுக்கு நன்றி சிந்து. அடிக்கடி வந்து போங்க.

மகேஸ் said...

//போட்டோவை மாத்துங்க.. .//

போன மாசமே நான் போட்டோவ மாத்திட்டேங்க. அத விளம்பரமாக்குற வித்தயெல்லாம் தெரியாததால வலைப்பதிவுல காலம் தள்ளுறது கொஞ்சம் கஷ்டமாத்தாங்க இருக்கு. :)

எல்லப்பன் said...

எழுதியவர் : கண்ணதாசன்
பாடியவர் : ஜெயச்சந்திரன்
படம் : அவள் அப்படித்தான்
நடிகர்கள் : கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா

மென்மையான தாலாட்டாய் வரும். பலரும் அதைப் பாடியது யேசுதாஸ் என்று குழம்பிக் கொள்வார்கள். மறுபடி மறுபடி கேட்கத் தூண்டும் பாடல்கள்.

எல்லப்பன்

துபாய்வாசி said...

பொன்ஸ்,

உங்க ஐடியா எல்லாம் அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு.

பாண்டியராஜன்/செந்தில் ஒரு படத்திலே நாய் கடிச்ச தங்களோட பேன்ட்டை, கிழிச்சி விட்டுட்டு அது தான் ஃபேஷன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரிரிரிரிரிரிரிரி.......

மறுபடியும் அதே மாதிரி செய்துடாதீங்க மகேஸ்!

மகேஸ் said...

அவள் அப்படித்தான் ரஜினியும் கமலும் நடிச்ச படமா? விரைவில் பார்த்து விடுகிறேன்.
நானும் அது ஜேசுதாஸின் குரல் என்று தான் நினைத்தேன்.
நன்றி எல்லப்பன் அவர்களே.

மகேஸ் said...

துபாய்வாசி, நீங்க யார வாருறீங்கன்னு தெரியலேயே? :))

Sanjeevi Kumar S said...

இந்த பாட்டோட ஒரிஜினல் ஹீரோ இசைஞானி இளையராஜா

மகேஸ் said...

ஆமாம் சஞ்சீவி, இளையராஜாவின் இசை பாடலின் வரிகளை மறைக்காமல் தழுவிச் செல்வதில் தான் ஒரு மயக்கம் ஏற்படுகிறது.