Sunday, June 25, 2006

உலகம் இவ்ளோ சின்னதா?

லண்டனில் நானும் என் நண்பர் ராஜேஸும் தனியாக வாடகைக்கு வீடு பார்த்துத் தங்க முடிவு செய்து கடந்த வாரம் புதிய வீட்டிற்குக் குடியேறினோம். கல்யாணம் ஆகாத(ஆயினும்) பிரம்மச்சாரிகள் நான்கு பேர்கள் சேர்ந்து தங்கினால்தான் வீட்டு வாடகை கட்டுபடியாகும். எனவே வேறு நண்பர்களைத் தேடினோம்.

ராஜேஸின் நண்பரின் நண்பர் லண்டன் வருவதாகச் சொன்னதும் அவரையும் வீட்டின் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டோம். கடந்த ஒரு வாரம் சேர்ந்து தங்கினாலும் வேலைப் பளு காரணமாக புதிய நண்பரைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை. இந்த வாரயிருதி விடுமுறையில் அவரைப் பற்றிக் கேட்டதும் எனக்கு எழுந்த கேள்விதான் 'உலகம் இவ்ளோ சின்னதா?'

புதிய நண்பர் சந்தோஷ் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1997-2000 MCA படித்தவர்(ன்)(அவரே வாடா போடா நீ வா போ என்று சொல்ல உரிமை கொடுத்து விட்டார்). நான் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி 1998-2001 MCA படித்தவன். பல்கலைக்கழகமும் பொறியியல் கல்லூரியும் ஒரே சாலையில் தான் அமைந்துள்ளது.

எனக்குப் பல்கலைக்கழகத்தில் பல நண்பர்கள் உண்டு. என்னுடைய நண்பர்கள் பலர் அவருக்கும் நண்பர்கள். என்னுடைய B.Sc சீனியர் மாணவர் அவருக்கு MCA வகுப்புத் தோழர் என்று இருவருக்குப் பொதுவாகப் பல நண்பர்கள். அவரின் MCA ஜுனியர் மாணவர்கள் எனக்கு நண்பர்கள். பேசிக் கொண்டே போகும் போது, உங்களுக்கு இவரைத் தெரியுமா? அவரைத் தெரியுமா? என்று கேட்கக் கேட்க ஒரே ஆச்சயர்யம் பலரையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார், அல்லது நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.

ஆக ஒரு புதிய நண்பரும் அவரின் மூலம் பல பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இப்பச் சொல்லுங்கள் உலகம் இவ்ளோ சின்னது தானே?

5 comments:

துளசி கோபால் said...

அதுவும் இப்ப இந்த இணையம் வந்தபிறகு உலகம் ரொம்பவேஏஏஏஏஏஏஏ சுருங்கிப்போச்சு.

இலவசக்கொத்தனார் said...

எனக்கும் சமீபத்தில் இதே மாதிரி ஒரு அனுபவம்தான். ரொம்ப தெரியாத ஒருத்தரோட பேசிக்கிட்டு இருந்தா அவருக்கும் எனக்கும் பல தொடர்புகள் இருக்கறது தெரிய வந்தது. உண்மையிலேயே இது ஒரு சிறு உலகம்தான்.

dondu(#11168674346665545885) said...

உலகம் சின்னதுதான், என்ன சந்தேகம்? நீங்கள் மரவண்டு கணேஷ் இருக்குமிடத்தை கண்டு கொண்டது கூட அப்படித்தான்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/blog-post_28.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

துளசியக்கா இனையம் வந்த பிறகு உலகமே சுருங்கிப் போச்சு.

இப்போதெல்லாம் வங்கிக்கு நேரில் சென்று ஏதாவது விளக்கம் கேட்கும் பழக்கமும் எனக்கு மறைந்து விட்டது.
எல்லாமே இனையம் மூலமும் தொலைபேசி மூலமுமே முடிந்து விடுகிறது.

மகேஸ் said...

இந்த நேரத்தில் மரவண்டு கணேஷை மறந்து விட்டேன். அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இணையம் மூலம் டோண்டு சார் வழியாகக் கிடைத்தது.