Sunday, December 31, 2006

என் மைசூர் சுற்றுலாப் பயணம் - சில புகைப்படங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு மைசூர் சுற்றுலா சென்றிருந்தேன். அது ஒரு நாள் பயணம் என்பதான் மைசூர் விலங்குகள் பூங்காவும், பிருந்தாவன் தோட்டம் ஆகியவைகள் மட்டுமே சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு பயணம் நல்ல முறையில் அமைந்தது. இதோ அந்தப் பயணத்தின் சில நினைவுகள்.

வெள்ளை மயில். சாதாரணமாகப் பல இடங்களில் காணப்படுவதில்லை. திருப்பரங்குன்றத்தில் இவைகளை நான் பார்த்திருக்கிறேன். பெண் மயிலைப் பார்க்கும் போது பெரிய பிராய்லர் கோழியின் நினைவு ஏனோ வந்து போனது.

இவைகள் நம்முடைய முன்னோர்கள். கொரில்லா குரங்குகள் இந்தியாவில் மைசூரில் மட்டுமே பாதுகாத்து வரப்படுகிறது.

காண்டாமிருகம். வெயிலின் சூடு தாங்காமல் தண்ணீர்த் தொட்டியைத் தேடி வருகிறார்.

வரிக்குதிரை. நிழலில் ஓய்வு எடுக்கிறார். நம்ம ஊர் கழுதைகளுக்குச் சூடு போட்டால் அவைகள் வரிக்குதிரை ஆகிவிடுமா?

இவரும் நம்ம முன்னோர் தான். எங்களைப் பார்த்தவுடன் கைதட்டி தாவிக்குதித்து நடனமாடி மகிழ்வித்தார்.

ஆப்பிரிக்க யானை. இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ளது என்கிறார்கள். வேறு யானைகள் எதுவும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் வந்திறங்கியதாகத் தகவல்கள் இல்லை எனவே இந்தியாவில் உள்ள இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் இதுவும் ஒன்று. இந்தப் புகைப்படம் ஆனந் அவர்களின் இந்தப் பதிவை மனதில் நினைத்துக் கொண்டே எடுத்தேன். யானையாரும் நன்கு ஒத்துழைத்ததால் புகைப்படமும் நன்றாக அமைந்துள்ளது.

மைசூர் பிருந்தாவன் பூந்தோட்டத்தின் அழகிய தோற்றம். பிருந்தாவனம் என்றதும் அது தனியாரால் நடத்தப்படும் பூங்கா என்று தவறாக இந்தனை நாட்கள் நினைத்திருந்தேன். அது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டின் நிர்வாகத்தில் இருக்கின்றது என்று சென்றவாரம் தான் தெரிந்தது. பூங்கா ரம்யமாக இருக்கிறது.

டிஜிட்டல் காமிரா என்பதால் நினைபதை, பார்ப்பதையெல்லாம் சுட்டதில் சுமாரக வந்த பூக்கள்.கே.ஆர்.எஸ் அணைக்கட்டில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடல் போல் விரிந்து கிடக்கும் காவிரி நீர் கே.ஆர்.எஸ் அணைக்கட்டில். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர் தான்.

இரவில் இசைக்கு ஏற்ப நடனமாடிய நீர்வீழ்ச்சி. நேரில் பார்க்க மிக அருமையாக இருந்தது. டிஜிட்டல் கேமராவில் mode செட் செய்யத் தெரியாததால் இரவில் நகரும் பொருட்களைத் துல்லியமாகப் படமெடுக்க முடியவில்லை.

7 comments:

வல்லிசிம்ஹன் said...

அருமையான படங்கள் மஹேஷ்.

லலித மஹால் போகவில்லையா.

Anonymous said...

மைசூர் அரமணைக்கு செல்லவில்லையா?

மகேஸ் said...

நான் கடந்த ஆண்டே மைசூர் அரண்மணை மற்றும் பல இடங்களுக்கும் சென்று வந்து விட்டேன். ஆதலால் ஒரு நாளில் நன்கு சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற நிலையில் வனவிலங்குப் பூங்காவிற்கும், பிருந்தாவனத்திற்கும் மட்டும் சென்று வந்தேன். ஒரே நாளில் பல இடங்களைப் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதை விட, சில இடங்களை நன்றாக ரசித்துப் பார்ப்பது நல்லது என்று நினைத்ததால் இந்த இரு இடங்களை மட்டும் தேர்வு செய்து சென்று வந்தேன்.

தங்களின் வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன் மற்றும் அனானி அவர்களே!

LFC fan! said...

படங்கள் நன்றாக இருக்கின்றன!


Make Money Online

A n& said...

மகேஸ்
இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். படங்கள் நன்றாக இருக்கின்றன. யானைப்படம் மிகவும் அருமை ! சுட்டிக்கு நன்றி

பிரதீப் said...

படங்கள் எல்லாம் சூப்பருங்க... நானும் ஒரு மைசூர் ரசிகன். பெங்களூர்ல இருந்த வரைக்கும் வந்த சொந்தக் காரவுகளுக்கெல்லாம் நாந்தேன் கைடு!

பெங்களூர்ல இருந்து போயிருந்தீகன்னா வழியில ஸ்ரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் எல்லாம் பார்த்திருக்கலாமே...

Arif .A said...

தாங்கள் பயன் படுத்தும் காமிரா வகை ,விலையை தெரிவிக்க முடியுமா!
நானும் ஒரு புதிய காமிர வாங்கு எண்ணத்தில்
star9688@gmail.com