Saturday, February 10, 2007

யார் மனசிலே யாரு. என் மனசிலே யாரு. அவங்களுக்கு என்ன பேரு!

நான் பிரபல வலைப்பதிவர் ஒருவரை மனதில் நினைத்து 11 கேள்விகள் கேட்பேன். அதற்கு ஆம்/இல்லை நானே பதிலும் சொல்லிவிடுவேன். கேள்வியையும் பதிலையும் வைத்து அவர் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

1. உங்கள் மனதில் இருக்கும் அந்த நபர் ஆணா?
ஆம்.

2. இந்திய நாட்டவரா?
ஆம்

3. தென் இந்தியரா?
ஆம்

4. அவர் தமிழ்நாட்டுக் காரரா?
ஆம்

5. அவர் ஆணா?
ஆம்

6. ஐம்பது வயதைத் தாண்டியவரா?
ஆம்

7. வலைப்பதிவில் அவருடைய பெருமைக்குக் காரணம் அரசியல்,பொழுது போக்கு, சுயபுராணம் தானா?
ஆம்

8.அவர் அடிக்கடி சர்சைகளில் சிக்கிக் கொள்பவரா?
ஆம்

09.அவர் உண்மையான பெயரில் மட்டுமே எழுதுபவரா?
இல்லை.

10. உங்கள் மனதில் இருக்கும் அந்த நபர் வலையுலகில் ஒரு விளம்பரப் பிரியரா?
ஆம்.

11.அவருக்கும் டெண்டுல்கருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
ஆம்.

அவ்வளவு தான் மக்களே. பதிலைப் பின்னூட்டங்களாகச் சொல்லுங்கள். மேலும் இது போன்ற கேள்வி பதிவுகளை ஆரம்ப்பித்துக் காலாய்க்க நாமக்கல் சிபி மற்றும் செந்தழல் ரவி அகியோரை அழைக்கிறேன்.

11 comments:

நாமக்கல் சிபி said...

அழைப்பிற்கு நன்றி!

:))

நாமக்கல் சிபி said...

12. சமீபத்தில்(!?) சொ.செ.சூ வைத்துக் கொண்டவரா?

ஆம்!


13. கொசுத் தொல்லையால் அவதிப்பட்டவரா?

ஆம்!

(பாருங்க ஸ்மைலி போட்டுடறேன்)

கோவிச்சிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.

மகேஸ் said...

நன்றி சிபி. நீங்கள் இன்னும் பெயரைக் கண்டுபிடித்துச் சொல்லவில்லையே!.

14. அவர் புல்தடுக்கி பயில்வானா?
ஆம்!

நாமக்கல் சிபி said...

பதிலை சொல்ல வேறு வேண்டுமா?

15. இத்தனை கேள்விகளுக்குப் பிறகும் பதில் தெரியவில்லை என்றால் பதில் தெரியாதவர்களை "இந்த பதிவுலகிற்கே வேஸ்ட்" என்று வர்ணிப்பார்கள். சரியா?

ஆம்!

கோவி.கண்ணன் said...

*don't* know !
:))

மகேஸ் said...

டோண்டு சார், என்னுடைய இந்தப் பதிவு கலாய்க்கலாம் என்று தானே தவிர தங்களின் மனதைப் புண்படுத்த அல்ல.

மேலும் இந்தப் பதிவின் கான்செப்ட் பற்றி சென்ற புதன் கிழமையே முத்து தமிழினியிடம் சொல்லியிருக்கிறேன்.

மேலும் சற்று முன்புதான் தங்களின் நேற்றய பதிவைப் படித்தேன்.
என்னுடைய இந்தப் பதிவு சென்ற சனிக்கிழமை இரவு அலுவலகத்தில் எழுதப்பட்டு, நேற்று பெங்களூரில் விடுமுறை என்பதால்
இன்று வெளியிடப்பட்டது. இந்தப்பதிவை நீங்கள் நீக்கக் கோரினால் நான் நீக்கி விடுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

நல்ல பதிவு மனமார ரசித்து சிரித்தேன். இதை நீக்குவாதா? மூச்? சஜஸ்ட் செய்யும் வேறு கேள்விகளில் ஏதேனும் ஒன்றை கேட்டிருந்தாலும் ஆட்டம் ஒரே நிமிடத்தில் க்ளோசாகியிருக்குமே, ஸ்னேப் ரெஃபரியாக இருந்த ஒரே க்விட்டிச் மேட்சில் ஹாரி பாட்டர் ஸ்னிட்சை உடனேயே பிடித்து மேட்சை முடிவுக்கு கொண்டு வந்தது போல.

கேள்விகள்:
1. அவர் மகரநெடுங்குழைகாதனின் பக்தரா?
2. இஸ்ரேல் என்றாலே உணர்ச்சிவசப்படுபவரா?
3. அரசன் தாவூதின் நட்சத்திரத்தை விரும்புபவரா?
4. சோ, ராஜாஜி பிடிக்குமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கொசுபுடுங்கி said...

கொசுவுக்கு எதிரியா?

ஆமாம்யா ஆமாம்!

பொன்ஸ்~~Poorna said...

:))))

Anonymous said...

நன்றாகத்தான் உள்ளது.

Anonymous said...

I dondu know him