Sunday, May 07, 2006

லண்டனில் ஜிகர்தண்டா

கால்கரி சிவா அவர்களின் பதிவைப் பார்த்து ஜிகர்தண்டா செய்து பருகிவிடுவது என்று ஒருவித ஆர்வத்துடன் கடல்பாசியையும், நன்னாரி சர்பத்தையும் தேடி அலையத் தெடங்கினேன். நான் வாடிக்கையாக வாங்கும் ஸ்ரீலங்கன் தமிழ்கடையில் கடல்பாசியும், சர்பத்தும் கிடைக்கவில்லை.
இன்று முடிதிருத்த அல்பர்டான் சென்ற போது ஈலிங் ரோட்டில் உள்ள கணபதி ஸ்டோரில் கடல்பாசி கிடைத்தது. அங்கேயே நன்னாரி சர்பத்தையும் தேடி கடைகடையாக அலையத் தொடங்கினேன். இன்னும் கிடைத்த பாடில்லை. நேரம் கிடைக்காததால் ஈஸ்ட்ஹாம் பகுதிகளுக்குச் சென்று விசாரிக்க முடியவில்லை. ஈஸ்ட்ஹாம் அன்பர்கள் சுவாதி ஸ்டோர்சில் நன்னாரி சர்பத் குறித்து விசாரித்துச் சொல்லவும்.
இருப்பினும் நன்னாரி சர்பத்துக்குப் பதில் ரோஜா எசன்ஸ் சேர்த்த சர்பத் கிடைத்துள்ளது. அது வைத்து இன்னும் 6 மணி நேரத்தில் ஜிகர்தண்டா தயாராகிவிடும். யாராவது வந்தால் அவர்களுக்கும் ஜிகர்தண்டா வழங்கி சோதனை செய்யப்படும் :))).

13 comments:

குமரன் (Kumaran) said...

நான் வரமுடியாதே மகேஸ். லண்டன் கால்கரியை விட தூரமாச்சே....

எப்படியோ நீங்கள் ஜிகர்தண்டாவை குடித்து அனுபவியுங்கள். ;-)

மகேஸ் said...

வருகைக்கு நன்றி, குமரன். நாளை அலுவலகத்திற்கும் எடுத்துப் போய் என் மேனேஜருக்குக் கொடுத்து ஜிகர்தண்டாவை பிரபலப்படுத்த முடிவு செய்துள்ளேன்.

கால்கரி சிவா said...

மகேஸ்,

ரோஸ் சர்பத் வான்கும் போது இந்திய/பாகிஸ்தானிய தயாரிப்புகளை வாங்கவேண்டாம். ப்ரான்ஸிலிருந்து ஒரு தயாருப்பு வருகிறது. அதை வாங்குங்கள். இந்திய/பாகிஸ்தானிய தயாரிப்புகளில் அநியாத்துக்கு கலர் பொடி. ரோஸ் ஜிகர்தண்டா ஓகே.

நான் வாங்கிய நன்னாரி சர்பத்தின் ப்ராண்ட் ஸ்டார். தயாரிப்பு செய்தவர்கள் பாம்பே ஸ்வீட்ஸ் இலங்கை

கால்கரி சிவா said...

மகேஸ், மானேஜரை இப்படியெல்லாம் "ஐஸ்" வைக்க முடியுமா?!!! :) ஆ.. நல்ல யோசனை

மகேஸ் said...

சிவா, ரோஸ் சர்பத் ஸ்ரீலங்கன் தயாரிப்பு. ஜிகர்தண்டாவை சுவைக்க இன்னும் நான்கு மணி நேரங்கள் இருக்கின்றன.
என் மேனேஜர் குஜராத்தி. நல்ல சப்பாத்தி குருமாவெல்லாம் எனக்குத் தந்திருக்கிறார்.

Anonymous said...

நாளை அலுவலகத்திற்கும் எடுத்துப் போய் என் மேனேஜருக்குக் கொடுத்து ஜிகர்தண்டாவை பிரபலப்படுத்த முடிவு செய்துள்ளேன்.

என் மேனேஜர் குஜராத்தி. நல்ல சப்பாத்தி குருமாவெல்லாம் எனக்குத் தந்திருக்கிறார்.

Mahaeshu!.ithu thaan Panda Matru muraiyoo!!!!!!!

Dubai Raja.

மகேஸ் said...

பண்டமாற்று முறை, அதுவும் சரி தான்.

நாமக்கல் சிபி said...

//யாராவது வந்தால் அவர்களுக்கும் ஜிகர்தண்டா வழங்கி சோதனை செய்யப்படும்//

அடப்பாவமே! யாரும் மாட்டப்போறாங்களோ!

மகேஸ் said...

//அடப்பாவமே! யாரும் மாட்டப்போறாங்களோ! //
நானே மாட்டிக்கிட்டேன் தலைவா.
ஜிகர்தண்டா குடித்து ஒரே நாளில் மூக்கு ஒழுகுகிறது. கர்சீப்பும் கையுமாக அலைகிறேன்.

நாமக்கல் சிபி said...

//நானே மாட்டிக்கிட்டேன் தலைவா.
ஜிகர்தண்டா குடித்து ஒரே நாளில் மூக்கு ஒழுகுகிறது. கர்சீப்பும் கையுமாக அலைகிறேன். //

ஐஸ் வேறு சேர்த்துப் பருகினீர்களா?
கடல் பாசி ஏற்கனவே வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியது.
இது பற்றி ஏற்கனவே நான் கால்கரி சிவா அவர்கள் பதிவில் சொல்லியிருந்தேன்.

சரி சரி ஜலதோஷத்திற்கு மருந்து உட்கொண்டால் நிற்பதற்கு ஏழு நாட்கள் ஆகும். இல்லையெனில் ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும்.

மகேஸ் said...

சிபி, ஐஸ் சேர்க்கவில்லை,
குளிர்சியான பால் மற்றும், சர்பத் சேர்த்தேன். மேலும் லண்டனில் நேற்று இரவு முதல் மழை பெய்ததால் உடனே ஜலதோசம் பிடித்துக் கொண்டது. அலுவலகத்தில் இருந்து 3.30 மணிக்குக் கிளம்ப அனுமதி கேட்டிருக்கிறேன்.

கால்கரி சிவா said...

மகேஸ், மானேஜருக்கு என்ன ஆச்சி. அவருடைய பதவியை பிடிச்சிங்களா?

மகேஸ் said...

சிவா,
நேற்று இரவே ஜிகர்தண்டா பருகி ஜலதோசம் ஏற்பட்டு விட்டது. என் மேனேஜரோ ஒரு மாதமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து கடந்த ஒரு வாரமாகத்தான் அலுவலகம் வருகிறார். எனவே அவருக்கும் கொடுத்து ரிஸ்க் எடுக்கவில்லை. இங்கு சம்மர் இன்னும் நன்றாக ஆரம்பிக்கவில்லை. அப்புறம் ஜமாய்சிடுவோம்.