Sunday, April 23, 2006

கலைஞருக்கு சில கேள்விகள்

கலைஞருக்கு சில கேள்விகள். இதற்கு கலைஞரோ அவரது தொண்டர்களோ சரியான பதில் தந்து விட்டால் என் குடும்பத்தினரை தி.மு.க விற்கு ஓட்டுப் போடும்படிக் கேட்டுக் கொள்வேன்.

1. பா.ஜ.க கூட்டணியில் 5 ஆண்டுகள் மாறன் சாகும் வரை பதவியில் இருந்து விட்டு கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?

2. ராஜபாளயம் பொதுக் கூட்டத்தில் நெசவாளர்களுக்கு பா.ஜ.க வாஜ்பாய் அரசு பல துன்பங்களைக் கொடுத்தது எனக் கூறினீர்கள். நீங்களும் தானே அரசில் 5 ஆண்டுகள் பங்கெடுத்தீர்கள். அந்தக் கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம் என்று கூறுகிறேன். என்ன பதில்?

3.சுமங்கலி கேபிள் டீ.வி விவகாரத்தில், அவசரமாக கட்சி எம்.பிக் களுடன் கவர்னரைச் சந்தித்தது ஏன்?. மேலும் பாலாறு அனை விவகாரம் தொடர்பாக நீங்கள் மத்திய அரசில் இருந்து கொண்டு என்ன செய்திருக்கிரீர்கள்?

4.அறிவாலயத்தை அடமாணம் வைத்து சன் டீ.விக்காக வங்கியில் கடன் வாங்கினீர்கள் என்ற வை.கோ வின் குற்றச்சாட்டிற்கு உங்களின் பதில் என்ன?(என் அப்பா 1982ம் ஆண்டில் தி.மு.க உறுப்பினராகச் சந்தா செலுத்தியுள்ளார். எனவே அவர் சார்பாக எனக்கு அறிவாலயம் பற்றிக் கேட்க உரிமை உள்ளது.)

5.கடந்த 5 ஆண்டுகளில் சட்ட சபைக்கே போகாமல் தவிர்த்தது ஏன்?
(இதே கேள்வியை ஜெ.யிடம் கேள் என்றெல்லாம் பதில் சொல்லக் கூடாது. அப்படித்தான் சொல்வேன் என்றால் ஜெ.க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?)

6.மத்திய அரசில் ம.தி.மு.க எம்.பிக்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் காட்டி மத்திய அமைச்சர் பத்விகளைப் பெற்றீர்கள் என்ற வை.கோ வின் குற்றச்சாட்டிற்கு என்ன பதில்? இது குறித்து பிரதமரும் எதுவும் பதில் கூறாதது உங்களின் மீது தவறு உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறேன், உங்களின் பதில் என்ன?

7. தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்கள் அறிவித்துளீர்கள். அரசின் வருமானத்தைப் பெருக்க ஒரு வழியையும் சொல்லவிலையே?, வரவு இல்லாமல் எப்படிச் செலவுசெய்ய முடியும்.

11 comments:

மு.கருணாநிதி said...

முதல் ஆறு கேள்விகளுக்கு பதில் : நோ கமெண்ட்ஸ். (அப்படீன்னா பதில் இல்லைன்னு அர்த்தம். நான் தான் கேள்வி கேட்பேன். எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும்)

ஏழாவது கேள்விக்கான பதில் : முதல்ல ஜெயிக்க வையுங்க. எப்படி செய்ய முடியுமுன்னு காட்டுறோம். (அப்புறம் எதுக்கு உங்க கிட்ட பேசப் போறோம். என்னோட குடும்பத்த முன்னேத்தவே எனக்கு நேரம் போதாது)

ஜெயக்குமார் said...

/
1. பா.ஜ.க கூட்டணியில் 5 ஆண்டுகள் மாறன் சாகும் வரை பதவியில் இருந்து விட்டு கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?/

உங்கள் கேள்வியிலேயே பதிலும் உள்ளது.

அதோடு அவர்கள் ஜெ-வுக்கு மறைமுகமாக ஆதரவு தருகிறார்களா என்கிற சந்தேகமும் தான்.

//2. ராஜபாளயம் பொதுக் கூட்டத்தில் நெசவாளர்களுக்கு பா.ஜ.க வாஜ்பாய் அரசு பல துன்பங்களைக் கொடுத்தது எனக் கூறினீர்கள். நீங்களும் தானே அரசில் 5 ஆண்டுகள் பங்கெடுத்தீர்கள். அந்தக் கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம் என்று கூறுகிறேன். என்ன பதில்?//

பதில் இப்படி இருந்தாலும் இருக்கலாம்

"நாங்கள் தான் இருந்தோம் இல்லை என்று சொல்லவில்லையே. ஆனால் நெசவாளர் துறை எங்களிடம் இல்லையே அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்."

//3.சுமங்கலி கேபிள் டீ.வி விவகாரத்தில், அவசரமாக கட்சி எம்.பிக் களுடன் கவர்னரைச் சந்தித்தது ஏன்?. மேலும் பாலாறு அனை விவகாரம் தொடர்பாக நீங்கள் மத்திய அரசில் இருந்து கொண்டு என்ன செய்திருக்கிரீர்கள்?//

என்ன கேள்வி இது, இதற்கு நான் என்னுடைய அடுத்த மேடையில் பதில் அளிக்கிறேன்.

//4.அறிவாலயத்தை அடமாணம் வைத்து சன் டீ.விக்காக வங்கியில் கடன் வாங்கினீர்கள் என்ற வை.கோ வின் குற்றச்சாட்டிற்கு உங்களின் பதில் என்ன?(என் அப்பா 1982ம் ஆண்டில் தி.மு.க உறுப்பினராகச் சந்தா செலுத்தியுள்ளார். எனவே அவர் சார்பாக எனக்கு அறிவாலயம் பற்றிக் கேட்க உரிமை உள்ளது.)
//

இது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய விசயம். கணக்கு கேட்ட எம்ஜியாரையே கட்சியை விட்டு தூக்கியவரு கலைஞர். எதுக்கும் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

//5.கடந்த 5 ஆண்டுகளில் சட்ட சபைக்கே போகாமல் தவிர்த்தது ஏன்?
(இதே கேள்வியை ஜெ.யிடம் கேள் என்றெல்லாம் பதில் சொல்லக் கூடாது. அப்படித்தான் சொல்வேன் என்றால் ஜெ.க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?)//

ஹி!ஹி! ஹிஹி!...
ஜெ-வுக்கு நாங்கள் சேலைய உருவின மாதிரி எனக்கு அவர்கள் வேட்டிய உருவிவிடுவார்கள் என்கிற பயம்தான்

//6.மத்திய அரசில் ம.தி.மு.க எம்.பிக்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் காட்டி மத்திய அமைச்சர் பத்விகளைப் பெற்றீர்கள் என்ற வை.கோ வின் குற்றச்சாட்டிற்கு என்ன பதில்? இது குறித்து பிரதமரும் எதுவும் பதில் கூறாதது உங்களின் மீது தவறு உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறேன், உங்களின் பதில் என்ன?
//

No comments(இது மத்திய அரசு சம்மந்தப்பட்ட விவகாரம்).

//7. தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்கள் அறிவித்துளீர்கள். அரசின் வருமானத்தைப் பெருக்க ஒரு வழியையும் சொல்லவிலையே?, வரவு இல்லாமல் எப்படிச் செலவுசெய்ய முடியும்.//

அதை நாங்கள் வெற்றிபெற்ற பிறகுதான் சொல்லுவோம். இப்பொது வெளியிட்ட தேர்தல் அறிக்கைள், எங்கள் வருமானத்தை எப்படி பெருக்குவது என்பதற்காகத்தான்.

Anonymous said...

Mahesh,

I really dont understand the logic behind your questions.

Karunanidhi is a POLITICIAN. Does any of the POLITICIAN has any moral nowadays???. So what is the point of asking the questions.

All of them (DMK, MDMK, AIADMK, DMDK) are just POLITICIANS. None of the them have any vision for the nation. All of them have ambition to increase their personal wealth.

Elections after elections they will raise the same slogans "improve infrastructure", "eliminate poverty", "jobs for all" etc etc. None of them will implement anything.

So on the ground there is no major difference between them. People just vote based on caste, party faith & some times for free gifts (including money).

மாயவரத்தான்... said...

"நீங்க மத்திய அரசிலும் இருக்கிறீர்களே. இலவச தொலைக்காட்சி திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு போவீர்களா?"

"என்ன கேள்வி இது? இப்போ தேர்தல் நடப்பது தமிழ்நாட்டில் மட்டும் தானே. நாடு முழுதும் தேர்தல் நடக்கட்டும். அப்போது இப்படி கேளூங்கள். பதில் சொல்கிறேன்."

- இப்படி பதில் சொல்லி, தேர்தலுக்காக தான் அப்படியெல்லாம் சொல்லுவோம் என்று பச்சை அயோக்கிய அரசியல்வாதியாக தன்னையே துகிலுரித்துக் கொண்டவரிடம் இதற்கெல்லாம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்?

மகேஸ் said...

என்ன, தி.மு.க தொண்டர்கள் யாரையும் காணோம். பிரியாணி சாப்டுட்டு தூங்குறாங்களா?

மா சிவகுமார் said...

இன்னும் சில கேள்விகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்:

1. உலகத் தமிழர்களின் ஒரே தலைவரான நீங்கள் ஈழத்தமிழர் நிலை பற்றி ஏன் வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்?
2. நெடுஞ்சாலை வழிப்பலகைகளில் இந்தி மொழி எழுதுவதை ஆதரித்து அறிக்கை விட்டது தண்டவாளத்தில் தலை வைத்து இந்தியைத் தடுத்து நிறுத்திய நீங்கள்தானா?
3. மாநில சுயாட்சிக்காக போராடிய கட்சியின் தலைவராக இருந்து கொண்டு மாநில அரசின் உரிமைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையிடுமாறு செய்தது ஏன்?

L.K.MATHI said...

பா.ஜ.கூட்டணியில், தி.மு.க.வாழையடி வாழையாக இருப்போம் என்று எழுதிக்கொடுத்துள்ளதா? அவர்கள் செய்யும் எல்லா முட்டாள் செய்கைகளுக்கும் தி.மு.க. துணை போகவேண்டுமா?
கலைஞரையும், மாறனையும்,மனிதாபிமானமற்ற முறையில் ஜெயலலிதா,போலீஸைவிட்டு தாக்கியபோது, மத்தியில் ஆண்ட பி.ஜே.பி. அரசு ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது? பின்பு எதற்கு கூட்டு வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அகில இந்திய
அராஜக தி.மு.க (அ.இ.அ.தி.மு.க)
அதற்கு முன்பு, கூட்டணியை கவிழ்த்து விட்டு, மறு தேர்தலுக்கு வழி வகுத்ததை மறந்து விட்டு, ஏன் இப்போது இந்தக் கேள்வி? மனசாட்சியுடன் கேள்வி கேட்கவேண்டும்! அப்போது உங்கள் தலைவியை ஏன் நீங்கள் கேள்வி ஏதும் கேட்கவில்லை?
உங்களுக்கே தெரியும் - கேள்வி கேட்டால், ஆட்டோவில் அம்மாவின் அடியாட்கள் வந்து, கல்லரை கட்டிவிடுவார்கள் என்று அல்லவா?

கேள்வி 3.க்கு பதில்:
வி.டி.யோ கடை வைத்து,பிழைத்து வந்த, உடன் பிறவா தோழிக்கு, உனது உப்பரிகையில் தங்க இடம் கொடுத்து, அராஜக தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர் பதவியும் அளித்து எத்தனை ஆண்டுக்கு சோறு போட முடியும்.அவளுக்கு ஒரு பிழைப்புக்கு அனுபவம் வாய்ந்த துறையில் வழி வகுக்கவே, கேபிள் டி.வி.சட்டம் கொண்டுவந்தால், எத்தனை இடைஞ்சல்கள் இந்த எதிர் கட்சியினரால்? வளர்த்த பிள்ளையாவது அவளுக்கு சோறு போடுமென்று, பார்த்தால், அதுவோ
என் தோட்டத்திலேயே (எது எதுக்கோ நான் பயிரிட்டு வைத்திருந்த)கன்ஜா திருடி, என் மானத்தை வாங்குகிறான்? என்ன செய்வது?

ஆளுவது நீ - பாலாறு அணை பற்றி எப்படி எதிர்கட்சிகள் முடிவு எடுக்க முடியும். உனக்குத்தான், நான் என்ற அகங்காரம் உடன் பிறந்த திமிராயிற்றே! டில்லி சென்று சாதிக்கிறது தானே?
உன் வீட்டு மனைவிக்கு, நீதானே பூ, பொட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும்? பக்கத்து வீட்டுக்காரன் வாங்கி தருவான் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? உனக்குத் தமிழ் நாட்டு கலாசாரம், பண்பாடு பற்றி தெரிந்திருந்தால், இப்படி குற்றம் சொல்ல மாட்டாய்!

கேள்வி 4க்கு பதில்:

மகேஸ் said...
This comment has been removed by a blog administrator.
மகேஸ் said...

//மாறனையும்,மனிதாபிமானமற்ற முறையில் ஜெயலலிதா,போலீஸைவிட்டு தாக்கியபோது, மத்தியில் ஆண்ட பி.ஜே.பி. அரசு ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது? பின்பு எதற்கு கூட்டு வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? //
அப்படியென்றால் 2001ம் ஆண்டே கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். மாறன் சாகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

//வி.டி.யோ கடை வைத்து,பிழைத்து வந்த, உடன் பிறவா தோழிக்கு, உனது உப்பரிகையில் தங்க இடம் கொடுத்து, அராஜக தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர் பதவியும் அளித்து எத்தனை ஆண்டுக்கு சோறு போட முடியும்.அவளுக்கு ஒரு பிழைப்புக்கு அனுபவம் வாய்ந்த துறையில் வழி வகுக்கவே, கேபிள் டி.வி.சட்டம் கொண்டுவந்தால்//
அரசின் அந்த முடிவிற்குக் காரணம் சுமங்கலியின் மோனேபாலியை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமே என்பதுதான். உடன்பிறவா சகோதரிக்கு என்றால் இத்தனை நாட்கள் காத்திருந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படித் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இதனைச் செய்திருக்க மாட்டார்.

ஜெயக்குமார் said...

//பா.ஜ.கூட்டணியில், தி.மு.க.வாழையடி வாழையாக இருப்போம் என்று எழுதிக்கொடுத்துள்ளதா? அவர்கள் செய்யும் எல்லா முட்டாள் செய்கைகளுக்கும் தி.மு.க. துணை போகவேண்டுமா?//

இதெல்லாம் ஆட்சிக்கு வந்து நாளரை வருடங்களுக்கு பிறகுதான் ஆதாவது மாறன் இறந்தபிறகுதான் கருணாநிதிக்கு தெரியுமா?

இதில் இருமுறை கூட்டணிவேறு.

Anonymous said...

கலைஞரை பலர் முத்தமிழ் அறிஞர் என அழைக்கின்றனர். அந்தத் திறமையையும் அவர் காசாக்கினார்.
தமிழுக்கு, தமிழக மக்களுக்குச் சேவை செய்பவன் என்கிறவர், தனது தொல்காப்பிய நூலை ரூபாய் 500க்கு தன் தொண்டர்களிடமும், மக்களிடமும் விற்று(திணித்து ??) தன் பையை நிறப்பியவர் அவர்.
அந்தப் புத்தகத்தை நியாயமான விலைக்கு விற்றிருந்தால் அந்தப் புத்தகத்தில் சொல்லியிருந்த கருத்துக்கள் பல மக்களைச் சென்றடைந்திருக்கும்.