Thursday, May 25, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 7

இரண்டாம் நம்பர் காய்கறிகள். பழைய உருளைக்கிழங்கு, உடைந்த தக்காளி, முற்றிய முருங்கைக்காய்,பூச்சி விழுந்த கத்தரிக்காய் இன்னபிற காய்கறிகள் தான் இரண்டாம் நம்பர் காய்கள். யார் இவைகளை வாங்குவார்கள்? அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஹோட்டல்காரர்கள். ஆமாம் மக்களே, பெரும்பாலான சிறிய ஹோட்டல்களில் இன்றைய நிலைமை இதுதான். நாங்களும் பல ஹோட்டல்களுக்கு இது போன்ற காய்களை சப்ளை செய்கிறோம். கேட்கலாம் எங்களுக்கு மனசாட்சி இல்லையா? இருக்கிறதய்யா. நாங்கள் விற்காவிட்டால் வேறு கடைகளில் வாங்கிக் கொள்ளப்போகிறார்கள். வருகிற வரைக்கும் வரட்டும் என்றே விற்பனை செய்கின்றோம்.

என் சித்தி ஊருக்குச் செல்லும் போதெல்லாம் நானும் என் சித்தப்பாவும் ஹோட்டலில் தான் சாப்பிடுவோம். அந்த நாட்களில் மட்டும் அந்தக் குறிப்பிட்ட ஹோட்டலுக்கு மட்டும் நல்ல காய்கறிகளை இரண்டாம் நம்பர் காய்கறிகளின் விலைக்கே அனுப்புவோம். ஹோட்டல்காரரும் நாங்கள் சாப்பிட வருவதைத் தெரிந்து கொண்டு ஸ்பெசல் சாப்பாடு தருவார். என்ன செய்றதுங்க சுயநலம் தான். நான் எப்போதும் நல்லவன் என்று சொல்லிப் புனித பிம்பமாக விரும்பவில்லை. ஹோட்டல்காரர்கள் கேட்டால் நல்ல காய்கறிகள் தரத் தயாராவே இருக்கிறோம். இது போன்று தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லையெனில் அவர்களால் அளவுச் சாப்பாடு 15 ரூபாய்க்குத் தரமுடியாது. கோடம்பாக்கம் டாடா உடுப்பி ஹோட்டலில்லேயே இது தான் நிலைமை(ஒரு முறை நான் வண்டியில் இருந்து காய்களை இறக்கும் போது பார்த்து விட்டேன்). இருந்தாலும் காரக் குழம்பின் சுவைக்காக மூன்று வருடங்களில் பலமுறை அங்குதான் இரவுச் சாப்பாடு சாப்பிட்டேன். :)))

பிரியாணி ஐந்து ரூபாய்க்குத் தருவதானால், காக்கா பிரியாணிதான் தரமுடியும். காக்கா பிரியாணி சாப்ட்டா காக்கா குரல் வராம உன்னிக் கிருஷ்ணன் குரலா வரும்.

எனவே மக்களே, சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடுவதைத்த் தவிருங்கள்.

19 comments:

வடுவூர் குமார் said...

இதைத்தான் நான் என் மனைவிக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.உங்கள் பதிவை காண்பிக்கிறேன்.

மகேஸ் said...

வருகைக்கு நன்றி குமார் அவர்களே.

மகேஸ் said...

புது டெம்ப்ளேட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

இலவசக்கொத்தனார் said...

சைனாவில் பாம்பு பூரானும் சாப்பிடற மாதிரிதான் நினைச்சிக்கணும். அந்த சாதாரண ஹோட்டலில் இருக்கும் சுவை மத்த இடங்களில் இல்லையே.

இலவசக்கொத்தனார் said...

டெம்பிளேட் நல்லாத்தான் இருக்கு. அலைன்மெண்டை மட்டும் ஜஸ்டிஃபைடில் இருந்து இடது புறம் அலைனாவது போல் செய்தால் நல்லா இருக்கும். இல்லைன்னா ஃபயர்பாக்ஸில் சரியாகத் தெரிவதில்லை.

மகேஸ் said...

வாங்க கொத்தனாரே,

நீங்க சொல்றதும் சரிதான். ஒருவேள இந்த மாதிரிக் காய்கறினாலதான் நல்ல டேஸ்ட் கிடைக்குதோ? :))

Sam said...

உங்கள் பதிவில் பதில் எழுதுவதில் சிக்கல் இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை.
இது இரண்டாவது முறை.

மகேஸ் said...

நன்றி சாம். இன்று புதிய டெம்ப்ளேட் மாற்றியுள்ளேன். சிக்கல் நீடித்தால்
என்ன சிக்கல் என மின்னஞ்சல் செய்யுங்கள்.
mahendranmahesh[at]gmail[dot]com

Sam said...

முதல் முறை முயற்சி செய்த போது, உங்கள் பதிவிலிருந்து எதையும் வெட்டி ஒட்ட முடியவில்லை.
சுரதாவில் எழுதியதையும் பதிக்க முடியவில்லை. பிளாகர் என் பாஸ் வோர்டையும் ஏற்றுக்
கொள்ளவில்லை.
எல்லாம் எப்படியோ சரியாகிவிட்டது போலிருக்கிறது!

எந்த சிறு தொழிலின் பின்னணியையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்குண்டு. நன்றாக
எழுதுகிறீர்கள்.

அன்புடன்
சாம்

மகேஸ் said...

நன்றி சாம். ஒவ்வொருவரும் தான் செய்யும் தெழிலைப் போல வேறு ஏதாவது தொழிலைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது.

Amar said...

புது டெம்ளேட் நல்லாயிருக்கு மகேஸ்.

காய்கறிக்கடை அனுபவங்கள் தொடர் சூப்பர்.

மகேஸ் said...

முதல் முறையாக வந்திருக்கிறீர்கள்.
தங்களின் வரவுக்கு நன்றி சமுத்திரா.

இலவசக்கொத்தனார் said...

//டெம்பிளேட் நல்லாத்தான் இருக்கு. அலைன்மெண்டை மட்டும் ஜஸ்டிஃபைடில் இருந்து இடது புறம் அலைனாவது போல் செய்தால் நல்லா இருக்கும். இல்லைன்னா ஃபயர்பாக்ஸில் சரியாகத் தெரிவதில்லை.//

பதிவில் மாற்றிவிட்டீர்கள். பின்னூட்டங்களில் மாற்றவில்லையே.

துபாய் ராஜா said...

///"எப்போதும் நல்லவன் என்று சொல்லிப் புனித பிம்பமாக விரும்பவில்லை."///

"போலிபிம்பம் இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்."

அன்புடன்,
(துபாய்)ராஜா.

மகேஸ் said...

நன்றி துபாய் ராஜா.

மகேஸ் said...

கொத்தனாரே,
டெம்பிளேட்டில் justify எல்லாவற்றையும் மாற்றிவிட்டேன். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. சரிபார்கிறேன். என் கணிணியில் பயர்பாக்ஸில் தமிழ்மணம் முகப்புப் பகுதியே சரியாகத் தெரிவதில்லை. அதனால் வேறு கணிணியைத் தேட வேண்டும். சரி செய்துவிட்டுத் தனிமடல் அனுப்புகிறேன்.

Unknown said...

மகேஷ்,

'மட்டுறுத்தல் நண்பன்' என்ற ஒரு செயலியை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறேன். இதைப்பற்றிய என் இடுகை தமிழ்மணத்தில் அரைமணி நேரம் மட்டுமே தோன்றியதால் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயிலுடன் இதை உபயோகித்து மட்டுறுத்தலுக்கு தேவையான ஆலோசனைகள் அல்லது தன்னியக்க மட்டுறுத்தல் ஆகிய சேவைகளை பெறலாம். மேற்படி விவரங்களுக்கு இந்த சுட்டிக்கு செல்லவும். நன்றி.

-வெங்கட்ரமணி (அ) அந்நியன்

Nakkiran said...

இன்று தான் உங்கள் காய்கறிக்கடை அனுபவங்கள் தொடரை பார்த்தேன்.. அனைத்து பாகங்களையும் ஒரே மூச்சில் படித்துமுடித்தேன்... மிக அருமை...

மகேஸ் said...

நன்றி நக்கீரன் அவர்களே. நான் தொடராக எழுதும் போது விரும்பிப் படிக்கப் படுமா என ஒரு சந்தேகம் இருந்தது.

உங்களின் வார்த்தைகள் எனக்கு மேலும் நல்ல பல படைப்புகளைத் தர வேண்டும் என ஊக்கப் படுத்துகிறது.

'மிக்சர்' என்ற அனுபவத் தொடர் எழுதலாம் என நினைத்து அதற்காகத் தயார் செய்து கொண்டுள்ளேன். அலுவலக வேலைகள் குறைந்தால் விரைவில் வெளிவரும்.

-- நன்றி.