Friday, June 16, 2006

தில்லுமுல்லு தில்லுமுல்லு-நீங்களும் சாமியார் ஆகலாம்-1



சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் டீவியில் மேஜிக் நிபுனர்கள் எப்படி மேஜிக் செய்கின்றனர் என்று அவர்களின் பின் முகத்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பும், மேஜிக் செய்பவர்களிடம் எதிர்ப்பும் கிடைத்தது நினைவிருக்கலாம்.

நம் முத்து தமிழினி சாய்பாபாவின் முகத்தை உரித்துக் காட்டினார். நான் சில சாமியார்களின் சித்து வேலைகள் சிலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். முடிந்தால் நீங்களும் சாமியார் ஆகி கோடி கோடியாகச் சம்பாதித்து அனுபவங்களை வலைப்பதியலாம்.

சில சாமியார்களிடம் போகும்போது அவர் நம்முடைய விபரங்களை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தால் அவர் அதில் இருந்து ஒவ்வொரு சீட்டாக எடுப்பார். அந்தச் சீட்டைப் பிரித்துப் படிக்காமலேயே அவர்கள் எழுதிக் கொடுத்த குறிப்பை ஞான திருஷ்டியால் படித்துக் கூறுவார், இது எப்படிச் சாத்தியம்? அவர் சரியான விளக்கங்களைச் சரியாகச் சொன்னதும் பணக்காரர்கள் பணத்தை அவரிடம் அள்ளிக் கொட்டுவார்கள். இந்த வித்தை மிகச் சுலபம் உங்களுக்கு வேகமாகப் படிக்கும் திறனும், ஞாபக சக்தியும் அதிகம் இருந்தால்.

சரி இப்போது வித்தைக்கு வருவோம்.

தேவையானவைகள்
1. உங்களின் ஞாபகசக்தி,
2. நம்பிக்கையான மூன்று சிஷ்யர்கள்
3. ஒரு பெரிய தாம்பாளத் தட்டு
3. பூக்கள் பக்தர்களின் காதுகளின் வசதிக்கேற்ப.
5. நல்ல பழங்கள்(கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கும் பக்தனுக்கு ஒரு வாழைப் பழமாவது கொடுக்க வேண்டாமா?)

சாமியார் ஒரு அறையிலும் பக்தர்கள் மற்றொரு அறையிலும், சுவாமிகளின் பூஜை முடிவதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களுடன் சாமியார்களின் வேஷம் போட்ட இரண்டு சீடர்களும் பாலோடு கலந்த தண்ணீர் போல ஒன்னுமே தெரியாதது போல பவ்யமாக இருக்க வேண்டும்.

மற்றொரு சீடர் அவர்களிடம் இருந்து குறிப்புகள் எழுதிய சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். சுவாமிகள் பூஜையை முடித்தவுடன் அனைவரும் மொத்தமாக சுவாமிகளின் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். மூன்றாவது சீடர் குறிப்புகள் எழுதிய சீட்டுகளை சுவாமிகளின் முன்னால் பவ்யமாக வைக்க வேண்டும்.

இப்போது சுவாமிகள்(அட நீங்க தாங்க) பிடித்த கடவுளை வணங்கி விட்டு முதலில் ஒரு சீட்டை எடுத்து ஞானதிருஷ்டியால் உங்களின் முதல் 'ஆமாம் சாமி' சீடரின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். சீட்டைப் பிரிக்காமலேயே அவரின் விபரங்களை புட்டுப் புட்டு(சாப்பிடுற புட்டு இல்லீங்க) வைக்க வேண்டும். கடைசியாக சீட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு நிமிடம் அவருடன் பேசிக் கொண்டே சீட்டில் எழுதியிருக்கும் குறிப்புகளைப் படித்து ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தச் சீட்டு அங்கு அமர்ந்திருக்கும் யாருடைய சீட்டாகவாவது இருக்கலாம். பின்னர் பின்னால் நிற்கும் மூன்றாவது சீடரிடம் கொடுத்துவிட வேண்டும்.

சிறிது நேரக் கழித்து மூன்றாவது சீடர் மூலம் அடுத்த சீட்டை எடுத்துத்தரச் சொல்ல வேண்டும். சீட்டைப் பிரிகாமலேயே முதல் சீடர் எடுத்துக் கொடுத்த சீட்டின் விபரங்களை வைத்துக் கொண்டு அடுத்த பக்தரை அழைக்க வேண்டும். ஞாபகத்தில் உள்ள விபரங்களின் முலம் குறி சொல்லிக் கொண்டே அவர் எடுத்துக் கொடுத்த சீட்டைப் பிரித்துப் படிக்க வேண்டும்.அவரை அனுப்பி விட்டு அடுத்த சீட்டை எடுக்க வேண்டும். இப்படியே தொடந்து நீங்கள் களைப்படையும் வரை நாள் முழுவதும் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

இடையில் முந்தய சீட்டின் விபரங்கள் மறந்து விட்டால் கூட்டத்தில் இருக்கவே இருகிறார் உங்களின் இரண்டாவது சீடர். அவரை அழைத்து விளையாட்டைத் தொடருங்கள். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து திறமையை வளர்த்துக் கொண்டு திறமையாகப் பெரிய அளவில் செய்யலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.

எனக்கு நீங்கள் சம்பாதித்த பணத்தில் ராயல்டி மட்டும் கொஞ்சம் கொடுதால் போதும். :))

அடுத்த சித்து இன்னும் சில நாட்களில். stay tuned...

23 comments:

ரவி said...

என்னங்க அநியாயமா பன்றீங்க....ஏதாவது முன் அனுபவம் இருக்கா ?

மகேஸ் said...

//முன் அனுபவம் இருக்கா//
முன் அனுபவம் இதற்குத் தேவையில்லீங்க. அதான் சொல்லீட்டனே, சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.

Anonymous said...

இது அனுபவச் சாறு போல் உள்ளது!!
வாழ்க ! வளர்க!
ஏமாறுபவனை நிக்கவைச்சுச் சுட வேண்டும்.
யோகன் பாரிஸ்

மகேஸ் said...

//ஏமாறுபவனை நிக்கவைச்சுச் சுட வேண்டும்//
அய்யய்யோ அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க. இப்படிச் செய்வதற்கெல்லாம் திறமை வேணும். திறமை எங்கே இருந்தாலும் மதிக்க வேண்டும் ஜோகன். :))

முத்துகுமரன் said...

உண்மையிலே உபயோகமான பதிவு :-)).

தில்லுமுல்லு இணைப்பிற்கு நன்றி.நன்கு ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்

தொழில்நுட்ப ஆலோசனைக்கு சிறப்பு நன்றி குருவே :-))

Muthu said...

சூப்பர் பதிவு மகேஸ்

நன்றி.

மகேஸ் said...

//தொழில்நுட்ப ஆலோசனைக்கு சிறப்பு நன்றி குருவே //

அடுத்த சாமியார் தயாராகிறார் என்று நினைக்கிறேன். :))

மகேஸ் said...

//சாமியார்கள் பொழைப்பில் கை வைத்ததற்காக அவர்கள் உங்களுக்கு சாபம் விடப்போகிறார்கள் //

நீங்க சாமியார் ஆனால் உங்க சாபம் பலிக்க்குமா? :))

மகேஸ் said...

வந்து போனதுக்கு நன்றி முத்து. அடிக்கடி வாங்க.

இலவசக்கொத்தனார் said...

இந்த மாதிரி ஆலோசனை எல்லாம் குடுக்காதீங்க. உங்களைப் பத்தித் தப்பா நினைக்கப் போறாங்க.

அப்படியே எதோவொரு படத்தில் தேங்காய் சீனிவாசன் ஒரு கபட சாமியாரா வருவாரே. அதையும் கொஞ்சம் போடுங்க.

மகேஸ் said...

//தேங்காய் சீனிவாசன் ஒரு கபட சாமியாரா வருவாரே//
ஆமா படம் பேரு மறந்து போச்சு. மனோரமா, முத்துராமன், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்த படம். தேங்காய் சீனிவாசன் கூட அதே! அதே! ன்னு சொல்லுவாரே? என்ன படம்????

தருமி said...

so simple; yet so effective... :-)

இலவசக்கொத்தனார் said...

அந்தப் படம் காசேதான் கடவுளடான்னு நினைக்கறேன். கிடைச்சா வாங்கிப் பார்க்கவேண்டியதுதான்.

மகேஸ் said...

//so simple; yet so effective//

சிம்பிளா சம்பாதிக்க இதுதான் வழி என்கிறீர்களா? :))

மகேஸ் said...

ஆமாம் அதே படம் தான்.

கால்கரி சிவா said...

மகேஸ், சாமியார்கள் கல்லூரி ஒன்றை -நீங்கள் ஆரம்பிக்கலாமே. அது இன்னும் லாபம் தரும்

ramachandranusha(உஷா) said...

யாருமே "காதலா காதலா" படம் பார்க்கவில்லையா :-)

Syam said...

ஏனுங்க சீக்கிரம் அடுத்த சித்து பத்தி எழுதுங்க..எத்தன நாளைக்கு தான் இந்த புரோக்கராம (வடிவேல் மாதிரி படிங்க) எழுதி கஸ்டபடுரது...நானும் சாமியார் ஆகி உங்களை முதல் சீடன் ஆக்கிவிடுறேன்..உங்களுக்கு எவ்வளவு வேனுமோ எடுத்துக்கிட்டு மீதிய குடுங்க :-)

மகேஸ் said...

ஷியாம், நாம் என்னோட குரு ஏண்டா ரகசியத்த வெளிய சொன்னேன்னு கேட்டுத் தொரத்தி விட்டுட்டாரு. இப்ப இன்னோரு குரு கிட்ட சிஷ்யனாச் சேந்து தொழில் கத்துக்கிட்டு இருக்கேன். கவலைப்படாத சீக்கிரமே நாம தனியாத் தொழில் தொடங்கிரலாம் ராசா.

வெற்றி said...

மகேஸ்,
நல்ல பதிவு.

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

விரைவில் சிறிலானந்தாவிடம் அருள்கேட்க தயாராயிருங்கள்.

நன்றி: மகேஷ்.

மகேஸ் said...

வரவுக்கு நன்று வெற்றி

மகேஸ் said...

//விரைவில் சிறிலானந்தாவிடம் அருள்கேட்க தயாராயிருங்கள்//

பீல்டுல போட்டி ரெம்ப அதிகமாயிடுச்சு.