Monday, June 12, 2006

நானும் 8 ம் நம்பரும்

8
நம்ம ஞானியாருக்கு மட்டும் தான் நம்பர்கள் ஆச்சர்யம் கொடுக்குமா என்ன?. எனக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 8 என்ற என் என்னைத் தொடர்ந்து வருகிறது. தவிர்க்க நினைத்தாலும் அது தான் கடைசியில் அமைகிறது.

நான் வீட்டில் இருந்து தனியே வந்து 11 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது முதல் நான் தங்கியிருக்கும் அறை மற்றும் வீடுகளின் எண்கள் அல்லது அவற்றின் கூட்டுத் தொகை எட்டு என்றே வருகின்றது.

நான் B.Sc முதலாண்டு படிக்கும் போது விடுதியில் நான் தங்கியிருந்த அறை எண் - 8.
நான் B.Sc இரண்டாம் படிக்கும் போது நான் தங்கியிருந்த அறை எண் - 48.

நான் B.Sc மூன்றாம் படிக்கும் போது நான் தங்கியிருந்த அறை எண் - 9 அதாவது அந்த விடுதியில்(என் கல்லூரியில் நான்கு விடுதிகள் உள்ளன) அதில் எட்டாம் அறை வார்டனுக்கானது. அந்த அறையின் நேர் மேலே உள்ள அறை தான் 9.

MCA படித்த போது என் விடுதி அறையின் எண் 308. மூன்று ஆண்டுகளும் ஒரே அறையில் தான் இருந்தேன்.

நான் சென்னையில் இருந்த போது என் மேன்சன் அறையின் எண் 17. கூட்டுத்தொகை எட்டு.

லண்டனில் முதலில் நான் தங்கியிருந்த வீட்டின் எண்ணும் எட்டு. இப்போது தங்கியிருக்கும் வீட்டின் எண் 107. அடுத்த வாரம் நான் மாறப் போகும் வீட்டின் என் 86. இதிலும் 8 வருகிறது.

இப்படியாக நான் தங்கியிந்த/யிருக்கின்ற இடத்தில் எல்லாம் எட்டு என்ற என் துரத்திக் கொண்டே வருகிறது. என்ன காரணமாக இருக்கும்?

9 comments:

இலவசக்கொத்தனார் said...

இன்னும் ஒரு எட்டு முன்னேறுங்கன்னு வாழ்த்துதோ என்னமோ..

Mani said...

எட்டு எட்டா மனுசன் வாழ்வை பிரிச்சுக்கோ, நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சுகோ.

எனக்கும் இப்படித்தான்.

என்னுடைய பிறந்த நாள் (17.10.1979)
University register number
My bike registration number 5372

எல்லாமே.

நாமக்கல் சிபி said...

எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சிக்கோ! - இப்போ
எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சிக்கோ!

லதா said...

மற்ற எண்கள் எல்லாம் மேலே ஆரம்பித்து கீழே முடிந்து விடுமாம்(6 விதிவிலக்கு). ஆனால் 8 என்ற எண் மட்டும்தான் (பொதுவாக) மேலே ஆரம்பித்து கீழே சென்று மறுபடியும் மேலே புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடுமாம் என்று என் தோழி சொன்னார்கள்.
அவர்களைப் பிடித்த எண் 8.
:-)

மகேஸ் said...

//இப்போ
எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சிக்கோ!//

நாலாம் எட்டில் இப்ப இருக்கேன் தெரிஞ்சுக்கோ!

மகேஸ் said...

வாங்க கொத்தனாரே,
நேரடியாக எட்டாம் எண்ணில் தங்கியிருந்த போதெல்லாம் என்னுடைய potential power அதிகமாவே இருந்ததாக உணர்ந்திருகிறேன்.

மகேஸ் said...

வாங்க லதா, ஜீரோவும் மேலிருந்து கீழே வந்து மீண்டும் மேலே சென்று முடியுமே.

மகேஸ் said...

நேற்று இரவு பதிவு எழுதிவிட்டு draft செய்வதற்குப் பதிலாக மறதியாக publish செய்துவிட்டுப் போய்விட்டேன். தமிழ்மணத்தில் வகைப்படுத்தாவிட்டால் லிஸ்டில் வராதே? யார் வகைப்படுத்தியது என்று தெரியவில்லை.

மகேஸ் said...

இந்தப் பதிவு எழுதி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு , இன்று 23-04-2016 பொழுது போகாமல் என் பழைய நினைவுகளை அசை போடுகின்றென்.

இந்த எட்டின் துரத்தல் இப்பொழுதும் தொடர்கிறது.

கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டின் எண் 5/8.

ஆறு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய வாகனத்தின் எண் - 1331

தற்பொழுது கட்டி வரும் புது வீட்டின் எண் - 68.